மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த திரு. வி. விக்னேஷ் வருண் விஜயகுமார் அவர்கள் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், தி இந்து குழுமத்தின் தலைவர் திரு. என். முரளி, இயக்குநர் முனைவர் மாலினி பார்த்தசாரதி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (2.7.2026) தலைமைச் செயலகத்தில், GRT குழுமத்தின் மேலாண்மை இயக்குநர்கள் திரு. ஜி.ஆர். அனந்தபத்மநாபன் மற்றும் திரு.ஜி.ஆர். இராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினர்.
#CMJosephVijay
வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம் (கிராமியம்) [VB-GRAMG] திட்டச் செயலாக்கம் குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்தியாவிற்கான இலங்கைத் துணைத் தூதர் (Deputy High Commissioner of Sri Lanka in Southern India) டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்
திரு. பி. கோபால் கிருஷ்ணன், செயலாளர் திரு. எஸ். சுகுமார், துணைத் தலைவர் திரு.கே.ஜி. பிருத்வி மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் முகமது ரேலா அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. அமிதாப் சௌத்ரி மற்றும் வங்கி உயர் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
#NationalDoctorsDay
சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான திரு. புவியரசு அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
சமூகப் பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு அவர்கள்.
‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது, ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியத் துறையில் திரு. புவியரசு அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பொதுத்துறை சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக 2025-26 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரா. அழகுமீனா, இ.ஆ.ப. அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அனைத்து 20 சுகாதார குறியீடுகளிலும் சிறப்பாகச் செயலாற்றியமைக்காக 2025-26ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எஸ். சரவணன், இ.ஆ.ப., கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், இ.ஆ.ப., முன்னாள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்கா மூர்த்தி, இ.ஆ.ப. ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பொதுத்துறை சார்பில் முதலமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவின் கீழ் வரப்பெற்ற மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டமைக்காக சிறந்த காவல் ஆணையருக்கான விருதினை முன்னாள் ஆவடி காவல் ஆணையர் திரு. கே. சங்கர், இ.கா.ப. அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக 2024-ஆம் ஆண்டிற்கான விருதினை முன்னாள் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப. அவர்களுக்கும், 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கே. சாந்தி, இ.ஆ.ப., முன்னாள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பா. பிரியங்கா, இ.ஆ.ப., ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றியமைக்கான விருதுகளை முன்னாள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. வா.வெ. சாய் பிரணீத், இ.கா.ப., முன்னாள் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம், இ.கா.ப., முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. பெ. தங்கதுரை, இ.கா.ப., கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஸ்டாலின், இ.கா.ப. ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில்
தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியமைக்காக 2023-ஆம் ஆண்டிற்கான விருதுகளை முன்னாள் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., முன்னாள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப. ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக சிறப்பான முறையில் பணியாற்றியமைக்காக
2024-25ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை முன்னாள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எம்.என். பூங்கொடி, இ.ஆ.ப., முன்னாள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபுசங்கர், இ.ஆ.ப., முன்னாள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஐ.எஸ். மெர்சி ரம்யா, இ.ஆ.ப. ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) பிற்பகல் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (30.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
#CMJosephVijay