கட்டண நிர்ணயக் குழு இருந்ததே தவிர, அந்த கட்டணம் பொதுமக்களுக்கு எளிதில் தெரியாத நிலை பல ஆண்டுகளாக இருந்தது.
இப்போது தனியார் பள்ளிகள் தங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரங்களை பள்ளி இணையதளத்திலும், அறிவிப்பு பலகையிலும் கட்டாயம் வெளியிட வேண்டும் என்ற அமைச்சர் ராஜ்மோகனின் உத்தரவு வரவேற்கத்தக்கது.
பெற்றோர் சேர்க்கைக்கு முன்பே கட்டணத்தை தெரிந்துகொள்ள முடியும். அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் கேள்வி கேட்க முடியும். வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் அதிகரிக்கும்.
கல்வியில் தரம் முக்கியம்; அதேபோல் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையும் முக்கியம்.
அருமையான முன்னெடுப்பு... இது சாதியமாகி வெற்றியாக அமைய வேண்டும் 🔥♥️