தேசிய தலைவரைப் பற்றிய கருத்து-
இன்னும் எத்தனை துரோகத்தைத்தான்
இந்த இனம் சந்திக்க இருக்கிறதோ?
படித்தவன் சூதும்வாதும் செய்தால்...
ஐயோ போவான்
ஐயோ போவான்.....
இசுலாமிய சிறைவாசிகளது விடுதலைக்காக அமைக்கப்பட்ட ஆதிநாதன் குழு ஓராண்டாக உறங்குகிறது. புழல் சிறையிலுள்ள இசுலாமிய சிறைவாசி ஹக்கீம் மூளைக்கட்டியால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
ஸ்டோன் சுவாமியை சாகடித்த பாஜக அரசின் செயலுக்கும்,ஹக்கீமை சாகவிடும் திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு?
சமூக நீதியென்று பேசப்படாத பீகாரில் சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்துகிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார்.
சமூக நீதி முதல்வர் என சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலினோ, வாய்மூடி மெளனியாகக் கிடக்கிறார்!
கைது செய்யப்பட்ட தம்பி சிவசங்கரன் மற்றும் நத்தம் தம்பிகளின் பிணை மனு நாளை நத்தம் நீதிமன்றத்தில், நாம்தமிழர்கட்சியின் மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர்
திரு.சேவியர் பெலிக்ஸ் அவர்களின் ஒப்புதலோடு, மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர் திரு.கணேசன் அவர்கள் தாக்கல் செய்கிறார்.