Congratulations to #JanSuraaj founder Thiru. @PrashantKishor on his resounding win in the #Bankipur bypoll, marking @JanSuraajOnline's first electoral victory.
Wishing him success in serving the people of the Bankipur constituency and the state of Bihar.
கா��ிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் @UdhayStalin தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம்!
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்!
காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்!
விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் @Jawahirullah_MH, @ThamimunansariM, @nellai_mubarak ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட��� பிறந்தும் வரவில்லை.
ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் #விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?
முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
#MekedatuDam கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா?
விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?
நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.
விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும���!
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#விவசாயவிரோதிவிஜய்
ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள்!
எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை.
திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி.
நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும்!
#DheeranChinnamalai
#CWG2026 முத்தாண்டுதல் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ள தமிழ்நாட்டின் தங்கங்கள் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வபிரபு ஆகிய இருவருக்கும் எனது பாராட்டுகள்!
தமிழ்நாட்டில் இருந்து தடகளத்தில் தடம் பதிக்கும் மேலும் பல இளம்புயல்களால் இந்தியா வெல்லட்டும்!
#Glasgow2026
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் #MekedatuDam விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.
ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவ��... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.
நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.
@CMOTamilNadu அன���த்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?
கற்றனைத்து ஊறும் அறிவு
2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்கள���யே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூல���ங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கினேன்.
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.
வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்!
#DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்
NEET, EWS Quota எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசைவிடத் த.வெ.க. அரசுதான் அதிகம் மிர��ுகிறது!
தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்?
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?
கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்���ளைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.
அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, @AsiriyarKV அவர்களின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்!
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழ���வதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://t.co/wNsCbD5mP6)
ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்
🚨 தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?
🚨 மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?
🚨 நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?
🚨 அகில இந்திய கவுன்சிலி���்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?
🚨 தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?
🚨 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை ���திர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?
இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.
எதிர்கால��்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.
த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
நேர்த்தியான கோட்டோவியர் என்பதோடு அனிமேஷன் எனப்படும் இயங்குபடக் கலை, கணினி வரைகலை ஆகியவற்றிலும் தொடர்ந்து இயங்கி வந்த அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக நமது திராவிட மாடல் அரசில் அவரை நியமித்தோம். 2023-ஆம் ஆண்டு நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது அவர்கள் பங்களித்திருந்தார்.
தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆர்வத்துடனும், அதுவரை இருந்து வந்த தவறான மனச்சித்திரங்களைக் கலைத்துப் போடும் வகையிலும் அவர் கொண்டு வந்த வாளோர் ஆடும் அமலை போன்ற பங்களிப்புகளால் தமிழர் வரலாற்றுக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.
தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வரும் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் வாழ்நாள் சாதனைகளுக்கான தக்க அங்கீகாரமாக இவ்விருது அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
#Iyal #TamilLiteraryGarden #TrotskyMarudu
#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.
தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!
Birthday greetings to @ShivSenaUBT_ President Thiru. Uddhav Thackeray.
The extraordinary show of support at Shivaji Park yesterday was a resounding reminder that every attempt to weaken you has only strengthened the people's resolve to stand by you.
Wishing you good health and success in overcoming the challenges with your indomitable fighting spirit.
@OfficeOfUT
On Kargil Victory Day, we pay our heartfelt tribute to the Indian soldiers who displayed extraordinary courage and determination in the face of immense adversity.
We honour those who laid down their lives in the service of India and remain forever indebted to their families.
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!
கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!
பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை மாண்புமிகு @CMOTamilNadu கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் @drramadoss ஐயா அ��ர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கியக் குரலாக ஒலித்து வந்த தாங்கள் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், தங்களது ஓய்வுக்காலம் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் திகழ்ந்திட விழைகிறேன்.