மாணவர்களை அச்சுறுத்தும்படி சுற்றறிக்கை வெளியிட்ட தலைமைச் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். - மாண்புமிகு உறுப்பினர் செல்லசாமி, சி.பி.ஐ.(எம்)
அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - மாண்புகெட்ட அமைச்சர் செங்கோட்டையன், தவெக
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது - பேரவைத் துணைத் தலைவர்
#WATCH | “அனிதாவை தனது தங்கையாக நினைப்பதாக சொல்லும் முதலமைச்சர் விஜயின் அரசு, நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளது..”
அனிதாவின் சகோதரர் மணிரத்னம் வெளியிட்ட வீடியோ
#SunNews | #Anitha | #TVKVijay
குலத்தொழிலை பெருமைப்படுத்தும் வகையில், நேற்று வேளாண்மைத்துறை அமைச்சர் பேசிய நிலையில் இன்று கைத்தறித்துறை அமைச்சர் பேசியிருக்கிறார்.
60 ஆண்டுகளுக்கும் முன் திமுக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்த போது, இந்த ஆட்சி உங்களுக்கு சமர்ப்பணம் என பெரியாரிடம் சொன்னார் அண்ணா.
60 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜாஜிக்கு சமர்ப்பணமான ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது.
தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் "ஹரிஜன்"; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.
இந்த அவமதிப்புச் சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள்.
அந்த சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டுவிட்டது. இன்று (31.08.2026) சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்த போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு "தேவதைகள் " என்று பெயர் சூட்டுகிறார் .
தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம் ; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள்.
அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 ரூபாயாவது இருக்க வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும்.
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை.
முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?
தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் கோட்டு சூட்டு பிரபலங்களும் மட்டும்தான் முதலமைச்சரை சந்திக்க முடியுமா?
அதற்கான உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா?
எத்தனை கார்கள் இருந்தாலும் அரசு காரில் செல்வது தான் கெத்து என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெத்து காட்டத் துடிக்கும் ஆட்சியாளர்கள்; அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள்; இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க முடியாதா?
பார்ப்பனியமும் மனுதர்மமும் தான் சமூகத்தை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
@sunnews@Kalaignarnews@CMOTamilnadu@imrajmohan@arivalayam
தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் "ஹரிஜன்"; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.
இந்த அவமதிப்புச் சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள்.
அந்த சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டுவிட்டது. இன்று (31.08.2026) சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்த போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு "தேவதைகள் " என்று பெயர் சூட்டுகிறார் .
தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம் ; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள்.
அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 ரூபாயாவது இருக்க வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும்.
பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை.
முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?
தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் கோட்டு சூட்டு பிரபலங்களும் மட்டும்தான் முதலமைச்சரை சந்திக்க முடியுமா?
அதற்கான உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா?
எத்தனை கார்கள் இருந்தாலும் அரசு காரில் செல்வது தான் கெத்து என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெத்து காட்டத் துடிக்கும் ஆட்சியாளர்கள்; அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள்; இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க முடியாதா?
பார்ப்பனியமும் மனுதர்மமும் தான் சமூகத்தை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்
31.08.2026
இளம் பத்திரிகையாளர் ந.வினோத்குமார் அவர்கள் மறைவுற்றார் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
விகடன், தமிழ் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நாளேடுகள், புதிய தலைமுறையின் ஆங்கில இணையதளமான ‘தி ஃபெடரல்’ ஆகியவற்றில் பணியாற்றியவர் ந.வினோத்குமார்.
கழகத்தின் இளைஞர் அணி சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் முரசொலி பாசறை பக்கத்தில், ‘முதன்முதலில்’, ‘சீரணி’, ‘இடம் - பொருள் - கலைஞர்’ என 3 முக்கியத் தொடர்களை எழுதியுள்ளார். ‘திராவிட மாடல் அரசு’ தொடரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
‘தமிழரசு கலைஞர்’, ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’, ‘வான்- மண் – பெண்’, ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’, ‘பாப்லோ The boss’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘முந்நூறு ராமாயணங்கள்’, ‘நிலம் - துப்பாக்கி – சாதி’, ‘அமர நாயகன்’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
உடல்நலப் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், சமூகநீதி சிந்தனையோடு தன் சீரிய எழுத்துப்பணிகளைத் தொடர்ந்த ஓர் எழுத்தாளரை இழந்திருக்கிறோம் என்பது ஈடு செய்ய இயலாதது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினர் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்து முன்னணிக்கு வன்மையான கண்டனம் ...
தமிழ் நாடு அரசே..காவல் துறையே...
திருப்பூர் கோல்டன் நகர் பள்ளிவாசலில் அத்து மீறிய இந்து முன்னணி ரவுடிகளை கைது செய்..
மதக் கலவரத்தை தூண்டும் சங்கி கும்பலை வேடிக்கை பார்க்காதே ...கடும் நடவடிக்கை எடு..
திராவிடர் பெரியார் கழகம்
தலைமையகம்
RSSஇன் மாணவர் அமைப்பான ABVP போராட்டம் நடத்துவதுக்கு எந்த நெருக்கடியும் இல்லை… ஆட்சியில் அமரவைத்த இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு மட்டும் தமிழ்நாடு முழுக்க நெருக்கடி…! 💐
வாவ் @TVKVijayHQ Great bro
#BREAKING | அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய நிதி உதவிக்காக 5 மாதங்களாக மலேசியாவில் காத்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன்
இத்திட்டத்தின் கீழ் வெளிநாடு சென்ற பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர், சமூகநீதித் துறை அமைச்சரை தொடர்பு கொண்டும் உரிய பதில் இல்லை எனவும் வேதனை
#SunNews | #HigherStudies | #TVK | #TVKVijay | @VanniTamizhVCK
மத்தியப் பல்கலைக்கழகத்தில் (திருவாரூர்) ஆளுநர் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!
தமிழ்நாடுக்கும் தமிழுக்கும் விடுக்கப்படும் சவாலை எதிர்த்து நின்று வீழ்த்த வேண்டும் !
எது..? ராமதாஸ் தகைசால் தமிழரா..? குடிசை கொளுத்தி ஜாதி கலவரம் பன்றவன்லாம் தகைசால் தமிழரா ப்ரோ...?!!. நீங்க ஒத்து ஊத சரியான இடம் திமுக இல்ல... நாக்பூர் கிளை கட்சிகள் நிறைய இருக்கு.. அங்க போயிருங்க...
"ஏப்பா இந்த முல்லை பெரியாறு, முல்லை பெரியாறுன்னு ஒரு பிரச்சனை சொல்றாங்களே அந்த ஆறு அப்படி எங்க தான் இருக்கு...."
காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போது கிருஷ்ணசாமி அவர்கள் டெல்லியில் ஒரு மூத்த பத்திரிக்கையாளரிடம் இப்படி கேட்டாராம்!
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை, தென்மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனை பற்றி எந்த புரிதலும் இல்லாதவரு காங்கிரஸ் கிருஷ்ணசாமி, அந்த அணை எங்க இருக்குன்னு ஒரு தலைவர் கேட்கலாமா சார் என்று ஆதங்கத்தோடு சொன்னார். அப்படி பட்ட நபருக்கு தகைசால் தமிழர் விருது கொடுப்பது சரியல்ல!
தகைசால் தமிழர் விருது அய்யா ராமதாஸிற்கு கொடுத்தால் சௌமியா அன்புமணி அவர்கள் கோபித்துக் கொள்வார்கள்! அதனால் அவரது அப்பாவிற்கு கொடுத்து அவரை மகிழ்ச்சியாக்கியிருக்கிறார்கள்.
இந்த விருது அறிவிப்பு திருமாவளவன் அவர்களுக்கு ஒரு செக்....
தகைசால் தமிழர் விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் மருத்துவர் அய்யா அவர்கள் @drramadoss
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆன கார்கே அவர்களுக்கே பார்ப்பனியம் தீண்டாமையை திணிக்கிறது. என்பது மிகவும் வெட்கக்கேடானது!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானி என்ற ஊரில் ராம் லீலா மைதானத்தில் கார்கே காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அடுத்த இரண்டு நாளில் "ராம் சேனா"
என்ற அமைப்பின் பெயரில் தீட்டுக் கழிப்பு சடங்கை நடத்தி இருக்கிறார்கள்
ராம் லீலா மைதானத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட தலைவர் பேசியதால் மேடை தீட்டாகிவிட்டது என்று தீட்டு கழிக்கப்படுகிறது என்று சொன்னால் இதை விட வெட்கக்கேடு; கேவலம்; அவமானம் ;வேறு இருக்க முடியுமா ?
"என்னை ஒரு தீண்டத் தகாதவனாக
அவமதித்திருக்கிறார்கள்; தீண்டாமை தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; என்று
மாநிலங் களவையில் கார்கே பேசியிருப்பது நெஞ்சை உலுக்குகிறது
தீட்டு கழித்தது உண்மைதான் என்று
அந்த அமைப்பைச் சார்ந்த கிரிஷ் சந்திர பாண்டே என்ற பார்ப்பனர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ராம் லீலா புனித மைதானத்தில் கார்கே அரசியல் பேசுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என்று அவர் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
"மைதானத்தை குப்பையாக்கிவிட்டார்கள்; எனவே தீட்டு கழித்தோம் "என்று அவர் சமாதானம் கூறுகிறார்; குப்பையை அகற்றுவதற்கு துடைப்பம் போதும்
பிராமண பண்டிதர்களின் வேத மந்திரம் தேவையில்லை...
இப்படித்தான் திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் தண்டபாணி தேசிகர் என்ற தமிழர் தமிழில் பாடியதற்காக பார்ப்பனர்கள் மேடையை தீட்டு கழித்தார்கள்; கலைஞர் அதைக் கண்டித்து அப்போது பெரியாரின் குடிஅரசு பத்திரிக்கையில் துணைத் தலையங்கம்ஸஎழுதினார் என்பது வரலாறு!
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெகஜீவன் ராம் ஒரு தலித் என்பதால் அவர் பீகாரில் திறந்த
சம்பூர்ணானந்த் சிலைத் தீட்டாகிவிட்டது என்று பார்ப்பனர்கள் கங்கை நீரை க்கொண்டு தீட்டு கழித்தனர்.
மனித் தீண்டாமையை குற்றமாக்கிய அரசியல் சட்டம் இப்போதும் மதத் தீண்டாமையை" பழக்கவழக்கம் "என்ற பெயரில் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் கோயில் கர்ப்ப க்கிரகத்தில் இப்போதும் தீண்டாமை நீடித்துக் கொண்டிருக்கிறது
நாட்டின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்தை இந்த நாட்டின் ஊடகங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதுதான் வெட்கக்கேடு.
இதேபோல் சென்னை அய்.அய்.டி இயக்குனர் காமகோடி மாட்டு மூத்திரத்தில் மருத்துவ மகிமை இருக்கிறது என்று பேசி இருந்ததை நாடாளுமன்றத்தில் பிரியங்கா தனது உரையில் கேலியாக சுட்டிக் காட்டியதைக் கண்டித்து உலகம் முழுதும் இருந்தும் பார்ப்பனர்கள் பிரியங்கா எதிர்ப்பு இயக்கம் ஒன்றை யே நடத்தி வருகிறார்கள்.
ஆனால் கார்கே மீது திணிக்கப்பட்ட அவமானம் இங்கே பேசு பொருளாக் கூட இல்லை பார்ப்பனியம் இப்படித்தான் அரசியலை ஊடகங்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.
பதிவு 14.08.2026
@sunnews