தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகலை கழங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, ஆளுநரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வ���க்க வேண்டும்.
இந்தியாவில் உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 49 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ளது. தேசிய சராசரி 28 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 54 சதவீதம் வரை உயர்ந்திருந்தது.
தமிழ்நாட்டில் 22 மாநிலப் பல்கலைக்கழகங்கள் உட்பட மொத்தம் 61 பல்கலைக்கழகங்கள் உள்ளன. உயர்கல்வித் துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின��றன.
இதில், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (சென்னை), சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருப்பூர் அன்னை தெரேசா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பத���ி நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது.
இதோடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ��ேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் துணைவேந்தர் பதவி நிரப்பப்படவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 16-ல் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது.
கடந்த ஆட்சியில் ஆளுநர் ரவி பொறுப்பேற்ற பிறகு, துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடல் குழுவில் யு.ஜி.சி. விதிகளின்படி யு.ஜி.சி. பிரதிநிதிகளை கூடுதலாகச் சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு அப்போதைய அரசு எதிர்���்பு தெரிவித்தது. தன்னிச்சையாக தேடல் குழுவை நியமித்து ஆளுநருக்கு அனுப்புவது, ஆளுநர் நிராகரிப்பது என ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
தமிழ்நாட்டில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 188 அரசு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 105 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படவில்லை. பொறுப்பு முதல்வர்களைக் கொண்டே கல்லூரிகள் இயங்கி ��ருகின்றன. முதல்வர் நியமன விவகாரத்தில் பதவி மூப்பு தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகும், அதிகாரிகள் முதல்வர்களை நியமிக்க ஆர்வம் காட்டவில்லை.
188 கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் ��ணியிடங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தியாவிலேயே பழமையான பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் 67 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 65%, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 60%, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 55%, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 42%, அண்ணா பல்கலைக்கழகத்தில் 34% ஆசிரியர் பணியிடங���கள் காலியாக உள்ளன.
துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், செனட், சிண்டிகேட் கூட்டங்கள் நடைபெற முடியாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகமும் கல்விப் பணிகளும் முடங்கியுள்ளன. சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவே ஒவ்வொரு மாதமும் திண்டாட்டம் நிலவுகிறது.
துணைவேந்தர்கள் இல்லாததால் NIRF, NAAC போன்ற தரவரிசைப் பட்டியல்களில் க���னம் செலுத்த முடியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. புதிய பாடத்திட்டங்களுக்கு அனுமதி பெற முடியவில்லை. சர்வதேச ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், ஆராய்ச்சி நிதி பெறவும் முடியாத நிலை உள்ளது.
துணைவேந்தர், முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களின் பெருமளவு காலிப்பணியிடங்கள் காரணமாக தமிழ்நாட்டின் உயர்கல்வியின் வளர்ச���சி ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. உயர்கல்வியில் அதிக மாணவர்களைச் சேர்ப்பது மட்டும் சாதனையல்ல; பட்டம் முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதுதான் உண்மையான வளர்ச்சியின் அளவுகோலாகும்.
எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உயர்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் தக்க ஆலோசனைகளை வழங்கி, ஆளுநரை நேரில் சந்தித்து, துணைவேந்தர் நியமனம் தொடர்பான கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.
#velmurugantvk
@VelmuruganTVK
அன்புமணி ராமதாஸ் – தமிழர் வாழ்��ுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் சந்திப்பு:
கடந்தகால கசப்பிலிருந்து எதிர்கால அரசியல் வரை…!
தமிழக அரசியலில் கூட்டணிகளும் கருத்து வேறுபாடுகளும் காலத்தி��்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் அரசியல் ரீதியாக எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்த தலைவர்கள், பின்னர் பொதுவான இலக்குகளுக்காக ஒரே மேடையில் நிற்பதும் தமிழக அரசியலின் இயல்பான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோருக்கிடையே கடந்த காலங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன. வன்னியர் சமூக அரசியல், கூட்டணி அரசியல், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள் தொடர்பாக இரு தரப்பினரும் பல நேரங்களில் கடுமையான விமர்சனங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, தேர்தல் காலங்களில் கூட்டணி அமைப்பு மற்றும் சமூக அடிப்படையிலான அரசியல் அணுகுமுறைகள் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் வெளிப்படையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே அரசியல் இடைவெளி அதிகரித்தது.
ஆனால் அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டாக தற்போது இரு தலைவர்களும் சந்தித்து பேசியிருப்பது பார்க்கப்படுகிறது. தமிழக மக்கள���ன் நலன், மாநில உரிமைகள், காவிரி நீர் பிரச்சினை, மொழி உரிமை, சமூக நீதி மற்றும் தமிழர் நலன் போன்ற பொதுவான கோரிக்கைகள் இரு கட்சிகளையும் நெருக்கமாக்கும் காரணிகளாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான ஒன்றா அல்லது எதிர்கால அரசியல் ஒத்துழைப்பிற்கான தொடக்கமா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இரு தலைவர்களும் தமிழக அரசியலில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள நிலையில், அவர்களது இணைப்பு சில பகுதிகளில் புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்கக்கூடும்.
எதிர்காலத்தைப் பொறுத்தவரை, சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் தமிழர் நலன் போன்ற பொதுவான கொள்கை அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டால், அது தமிழக அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம். அதே நேரத்தில், கடந்தகால கருத���து வேறுபாடுகள் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டன என்று கூற முடியாது. பரஸ்பர புரிதல் மற்றும் அரசியல் முதிர்ச்சி மட்டுமே இந்த உறவை நீண்டகால ஒத்துழைப்பாக மாற்றும்.
மொத்தத்தில், அன்புமணி ராமதாஸ் மற்றும் வேல்முருகன் சந்திப்பு என்பது வெறும் அரசியல் நிகழ்வு மட்டுமல்ல; தமிழக அரசியலில் புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய கூட்டணி கணக்கீடுகளுக்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் ��ாலங்களில் இந்த சந்திப்பு எந்த அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காலமே தீர்மானிக்கும்.
#Velmurugan
#velmurugantvkleader
#Anbumani
#ramdass
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் மின்வாரிய ஹார்ட் டிஸ்குகள் திருட்டு; ஆளும்கட்சி முக்கிய குற்றவாளிகளுடன் கைகோர்க்கிறதா?
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், மின்வாரிய ஹார்ட் டிஸ்குகள் திருட்டின் மூலம் ஆளும் கட்சி முக்கிய குற்றவாளிகளுடன் கைகோர்த்துள்ளதா..? என தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் நிறுவனத் தலைவர் தி. வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய���்பட்டதில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில், டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின்சார வாரியம்) தரப்பில், “2021–2023 ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறுவது தவறு. டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையைக் குறிப்பிடுவது என்பது 1987ம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறை” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர், இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த ஏப்ரல் மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமிக்கப்பட்டிருந்த 20 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டதாக சென்னை சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஒருவரை கைது செய்து 12 ஹார்ட் டிஸ்குகளைப் பறிமுதல் செய்துள்ளது. அதே நேரம் கடந்த 5 ஆண்டுகளாக கண்காணிப்பு கேமரா இயங்கும் நிலையில் இல்லை என்பது திட்டமிட்டு இந்த திருட்டு நடைபெற்று இருப்பதும், இதில் மின்வாரிய அதிகாரிகள் சம்மந்தபட்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
இது தொடர்பாக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் ”ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்கள் கணக்கெடுக்கும்பணி நடைபெற்றுவருகிறது.எந்த இடத்திலும் யாரும் தப்பிக்க முடியாது இதில் சில பணியாளர்கள் சம்மந்தப்பட்டு உள்ளனர்” என்று கூறியுள்ளார்.
டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், மின்வாரிய ஹார்ட் டிஸ்குகள் திருட்டின் மூலம் ஆளும்கட்சியான தமிழக வெற்றிக்கழகம் முக்கிய குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து, கீழ்மட்ட அலுவலர்களை குற்றவாளிகளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என கேள்வி எழுப்புகிறேன்.
2009 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளை நினைவேந்தும் விதமாக
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று மாலை 3மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டமும் உலகத் தமிழர் ஆவண மையம் சார���பில் தொகுக்கப்பட்டுள்ள "அடிக்கற்கள்" நூல் வெளியீடும் நடைபெற உள்ளது.
அனைவரும் திரளாக பங்கேற்று அழிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோருவோம்.
#may18
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதித்து, பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில் தமிழக பொறுப்பு ஆளுனர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை 2 முறை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி. மீதமுள்ள ஆதரவைப்பெற ப��ஜக கூட்டணியில் இல்லாத விசிக, கம்யூனிஸ்ட் ஆதரவை கோரியுள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் ஆதரவை தெரிவித்துள்ளது.
தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல் எழுத்துப்பூர்வ ஆதாரம் (documentary proof) மற்றும் 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுப் பட்டியல் (letter of support) வழங்குமாறு ஆளுனர் தவெக தலைவர் விஜயிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1989ம் ஆண்டு கர்நாடகாவில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எஸ்.ஆர். பொம்மையின் ஆட்சியில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை விளக்கி கொண்டதாக ஆளுனருக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து எஸ் ஆர் பொம்மை பெரும்பான்மையை இழந்துவிட்டதாக ஆளுனர் பெண்டேகண்டி வெங்கடசுப்பையா குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சாசனப் பிரிவு 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் உத்தரவின் பேரில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து எஸ் ஆர் பொம்மை உச்சநீதிமன்றத்தை அணுகினார். இதனை தொடர்ந்து 1994 ம் ஆண்டு இந்திய அரசியல் சாசன வரலாற்றில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு (Constitutional Bench) இவ்வழக்கை விசாரித்து முதல்வருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டம���்றத்தில் நிரூபிக்க முடியும். அரசியல் சாசன சட்டம் 356 ஐ தவறாக பயன்படுத்தினா��் ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற வரலாற்று சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆளுனர் உணரவேண்டும்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அனைவரும் ஏற்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது.
பாஜக ஆதரவில்லாத கட்சித்தலைவர்கள் அனைவரும் ஆளுனரின் இச்செயலுக்க��� கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனவே பாஜகவின் நிழலாக ஆளுனர் செயல்பட்டு ஜனநாயக படுகொலை செய்யாமல், தமிழக வாக்காளர்களின் தீர்ப்பை ஏற்று தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதித்து, பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#TVKVelmurugan
#vijay
அதிகாரவர்கத்தின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டி தொழிலாளர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகவேண்டும்; தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மே தின வாழ்த்து செய்தி.
தமிழ்நாடு தொழிலாளர் இயக்கத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. சிங்காரவேலருடன் சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார் போன்றோரின் போராட்டங்கள் தொழிலாளர் தினத்திற்கு அடித்தளமிட்டது.
1886ம் ஆண்டு மே 1ம் தேதி அமெரிக்கா முழுவதும் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை கோரி பெரும் வேலைநிறுத்தம் செய்தனர். அப்போது 1886 ம் மே 3 ம் தேதி சிகாகோவில் McCormick Reaper தொழிற்சாலையில் காவல்துறையினர் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றதில் சிலர் இறந்தனர்.
மறுநாள் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் (Haymarket Square) அமைதியான முறையில் போராட்டக் கூட்டம் நடைபெற்றதை காவல்துறையினர் கலைக்�� முயன்றபோது, யாரோ ஒருவர் குண்டு வீசியதில் காவல் அலுவலர் ஒருவர் உட்பட மேலும் சிலர் இறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு 4 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தை நினைவுகூரும் வகை��ில், 1889ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற இரண்டாவது சர்வதேச சோஷலிச மாநாட்டில் மே 1ம் தேதியை சர்வதேச தொழிலாளர் தினமாக அறிவித்தனர். 1890 ம் ஆண்டு முதல் உலகளவில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுவதால் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் மே தினம் 1923 மே 1 ம் தேதி சென்னை (அப்போதைய மெட்ராஸ்)யில் கொண்டாடப்பட்டது. இதை மலையபுரம் சிங்காரவேலர் தலைமையில் Labour Kisan Party of Hindustan ஏற்பாட�� செய்தது.
சென்னை மெரினா கடற்கரை மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இரண்டு பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் செங்கொடி (Red Flag) முதன்முறையாக இந்தியாவில் ஏற்றப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் தொழிலாளர் வெற்றிச் சின்னம் (Triumph of Labour statue) உள்ளது, இது தொழிலாளர்களின் போராட்டத்தை நினைவூட்டுகிறது.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1942ம் ஆண்டு தொழிலாளர் உறுப்பினராக இருந்தபோது 8 மணி நே��� வேலை விதியை இந்தியாவில் அமல்படுத்த உதவினார்.
நியாயமான ஊதியம், பாதுகாப்பான வேலைச் சூழல், 8 மணி நேர வேலை, விடுமுறை உரிமை போன்ற வலியுறுத்தும் ந��ளாக கொண்டாடப்படுகிறது.
இந்நாள் சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள், பெண் தொழிலாளர்கள் உரிமைகள் உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிக்கும் நாளாகவும் உள்ளது.
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணி, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தையும் வென்றெடுத்துக் கொடுப்பதன் மூலம் அதிகாரவர்கத்தின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டி தொழிலாளர்களுக��கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க உறுதியேற்போம்.
உலகெங்கும் வாழும் தொழிலாளர்களுக்கும் மே நாள் நல்வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக சேலம் வட்க்கு சட்ட மன்றத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட எனது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது!
புரட்சி எப்போதும் வெல்லும்!
@VelmuruganTVK
நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பொதுச் சின்னமாக “கேமரா" சின்னம்”ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக வன்னியர்களுக்கும்,தமிழ் தேசியவாதிகளுக்கும் எதிரானவர்களா ?
அதிமுக பக்கம் செல்கிறாரா வேல்முருகன் ?
தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருக்கும் லெட்டர் பேட் கட்சிகளுக்கும் ஒரு சீட் நமக்கும் ஒரு சீட்தான்…?
எப்படி சரியாக இருக்கும் நமக்கான அங்கீகாரம் இல்லை எனில் கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய தயங்க கூடாது என கருத்து கேட்பு கூட்டங்களில் நிர்வாகிகள் கொந்தளித்து வருகிறார்கள்.,
திமுக கூட்டணியில் அங்கும் வகிக்கும் தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு கடந்த முறையை போலவே இம்முறையும் ஒரு சீட் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.,
கூட்டணி தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் ��டனான கருத்து கேட்பு கூட்டங்கள் சென்னையில் உள்ள தாவாக தலைமை அலுவலகத்தில் அக்காட்சி தலைவர் தி வேல்முருகன் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்றது இதில் 28 மாவட்டங்களின் தலைவர்கள் செயலாளர்கள் 234 தொகுதிகளின் தலைவர் பொதுச்செயலாளர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர் அந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் நமது கட்சியில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர் உளவுத்துறைக்கும் இந்த ���ண்மை தெரியும் இருப்பினும் இந்த முறையும் நமக்கு ஒரு சீட் தான் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது லெட்டர் பேடு அமைப்புகளுக்கு ஒரு சீட் ஒதுக்குவது போல ஒரு அரசியல் கட்சியாக கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படும் நம்மையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது ஏற்புடையதே அல்ல.,
இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கட்சியை நடத்துபவர்களுக்கு ஒரு எம்பி சீட் மூன்று எம்எல்ஏ சீட்டுகளை தருகிறார்கள் அ��ர்களை காட்டிலும் பலமாக இருக்கும் நமக்கு இம்முறை ஒரு ராஜ சபா சீட்டும் 3 எம்எல்ஏ சீட்டுகளும் தர வேண்டும் அப்படி இல்லாவிட்டால் ஓரிரு இடத்தை வாங்கி அசிங்கப்படாமல் ஒரு ராஜ சபா சீட்டும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளையும் கேட்க வேண்டும் என்று சொன்��ார்கள்.,
இன்னும் சில நிர்வாகிகள் வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாதது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது உள்ளிட்ட காரணங்களால் திமுக வன்னியருக்கு எதிரான கட்சி என்று அதிருப்தி வன்னிய இளைஞர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.,
போதாததற்கு திமுகவை தமிழ் தேசியத்துக்கு எதிரான கட்சி என சீமான் தொடர்ச்சியாக விமர்சித்தும் வருகிறார் இதற்கெல்லாம் பதில் சொல்ல திமுகவுக்கு நமது ���யவு தேவை எனவே நமக்கான உறிய அங்கீகாரத்தை தர திமுக மறுத்தால் முடிவை மறு பரிசீலனை செய்வதில் தப்பில்லை என்று சொன்னார்களாம்.,
இதனிடையே #அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சியை இணைப்பது தொடர்பாக இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது பாமக தரப்பில் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அதே சமயம் ராமதாஸ் தரப்பால் இழப்பாகும் வாக்குகளை ���டுகட்ட வேல்முருகனை கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என நினைக்கிறதாம்.,
Velmurugan.T
#DMK
#DMK4TN
#DMKITWING
#admkitwing
#ADMK
#ADMK_TNJ
#MKStalin
#edapadipalaniswamy
#vanniyar
#vanniyarsangam
#prabhagaran
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
15 ஆம் ஆண்டு தொடக்க விழா!
தமிழர் புத்தாண்டில் ,
பொங்கட்டும் தமிழ்ப் பொங்கல்!
கரும்புடன் இனிக்கட்டும்,
கனிவான பொங்கல்!
தமிழ் புத்தாண்டு...
பழமையைப் போற்றியும்,
புதுமையைப் படைத்தும்,
தமிழரின் தொன்மை, தியாகம்,
அறம், அரசியல், அறிவியல் என
அனைத்தையும் தமிழ் மண்ணில் பதித்த வரலாற்றை எதிர்காலத் த��ைமுறைகளுக்குக் கற்றுத் தரும் காலக் கண்ணாடி.
இது வெறும் நாள்காட்டி மாற்றமல்ல,
தலைமுறைத் தலைமுறையாக
தமிழர் தம் அடையாளத்தை
உயிர்ப்பிக்கும் விழா.
மொழியின் மரபையும்,
மனிதத்தின் முன்னேற்றத்தையும்
ஒருங்கிணைக்கும் இந்தப் புத்தாண்டு, பழையதை மறக்காமல்,
புதியதை உருவாக்கும்
தமிழரின் காலப் பயணம்.
தைப்பொங்கல்...
மண்ண���க்கும், மனிதனுக்கும் இடையிலான
உழைப்பின் உடன்படிக்கை.
விவசாயியின் வியர்வையை வணங்கும்,
தமிழரின் உயரியப் பண்பாட்டு விழா.
இந்த இனிய நன்னாளில்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தனது 15ஆம் ஆண்டு தொடக்க விழாவை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் அடையாளப்படுத்துகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக,
தமிழ் மக்களின் வாழ்வுரிமை,
மொழி உரிமை,
வேலைவாய்ப்பு உரிமை,
நில உரிமை,
சுயமரியாதை அரசியல்,
ஈழ விடுதலை, உலகத் தமிழர் நலன்
என்ற கொள்கைகளைத் தலையாயக் கடமையாகக் கொண்டு,
அடக்குமுறைகளுக்கும்,
கார்ப்பரேட் சுரண்டலுக்கும்,
தமிழர் உரிமை மறுப்புகளுக்கும்
எதிராக, உறுதியுடன் குரல் கொடுத்து வருகிறது
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
இந்நேரத்தில்,
தமிழ் புத்தாண்டும் , தைப்பொங்கலும் ,
கட்சியின் 15ஆம் ஆண்டு தொடக்க விழாப் பயணமும்
ஒரே புள்ளியில் சந்திப்பது,
தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்திற்கான
நம்பி���்கையின் அடையாளமாகும்.
உழைப்பவன் உயர வேண்டும்,
தமிழ் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்,
தமிழ் மக்கள் உரிமையோடு வாழ வேண்டும்
என்பதே, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல்.
தமிழர் புத்தாண்டும்,
தைப் பொங்கலும்,
தமிழ் மக்களின் வாழ்க்கையில்
நியாயம் மலர,
உரிமைகள் உறுதி பெற,
வாழ்வு வளம் பெற
வழிகாட்ட��்டும்.
அனைத்து தமிழ் மக்களுக்கும்,
உழைப்பாளர்களுக்கும்,
விவசாயிகளுக்கும்,
இளைஞர்களுக்கும்,
பெண்களுக்கும்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
15ஆம் ஆண்டு தொடக்க விழா நன்னாளில்,
தமிழ் புத்தாண்டு, தைப்பொங்கல்
நல் வாழ்த்துகள்!
தி. வேல்முருகன்,
நிறுவனத் தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
வடமாநில சுதந்திரப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தியையும், சுபாஷ் சந்திராபோஸையும், அண்ணல் அம்பேத்கரையும் தமிழர்களான நாங்கள் அறிவோம் : கோட்சேவின் வாரிசான ஆர்.எஸ்.எஸ் ரவி எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்!
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தது முதல் சனாதனம், மதம், வரலாறு, மொழி, கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமை, போன்ற விவகாரங்களின் மீது ஆர்.எஸ்.எஸ் நச்சு கருத்துக��ை திமிர்த்தனமாக பேசி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி
பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலில் ஒருவரான ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கு ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டதன் முதலே, தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், அரசால் முன்னெடுக்கப்பட்ட வளர்ச���சித் திட்டங்களுக்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ் ரவி களமாடிக்கொண்டிருக்கிறார்.
நேரடியாக சொல்ல வேண்டுமானால், பாஜகவின் மாநில தலைவர் போன்றும், ஆர்.எஸ்.எஸ்-சின் பிரதிநிதியாகவும், அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தின்றுக்கொழுத்து விட்டு, அம்மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி.
அத்தகைய துரோகங்களின் தொடர்ச்சியாக, தற்போது வடமாநிலங்கள் குறித்தும், வடமாநில சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும், தென் மாநிலத்தவர்களுக்கு குறைவாகவே தெரிந்திருக்கிறது என்றும் இந்தியாவை எந்தவொரு அரசர்களும் உருவாக்கவில்லை என்றும் ரிஷிகள் தான் உருவாக்கியது என்றும் மீண்டும் மீண்டும் புராணக்கதைகளை கூறி வருகிறார் ஆர்.எஸ்.எஸ் ரவி.
தமிழைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடை��்க வேண்டும் என்றும் அவர் தமிழ்நாட்டில் நின்றுக்கொண்டு, தமிழர்களுக்கு பாடம் எடுக்கிறார்.
தமிழர்களுக்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கு பாடம் எடுக்கக் கூடிய அருகதை ஆர்.எஸ்.எஸ் ரவிக்கு கிடையாது. வடமாநில தியாகிகள் என்று அவர் யாரை குறிப்பிடுகிறார்? என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும்.
வடமாநில தியாகிகள் என்றால், எங்களுக்கு மகாத்மா காந்தியும், சுபாஷ் சந்திரபோஸூம், அண்ணல் அம்பேத்க��ும் தெரியும். இவர்களை தவிர, அந்த வடமாநில தியாகிகள் என அவர் யாரை குறிப்பிடுகிறார்? காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவையா?
முதலில் சுதந்திர போராட்டத்தியாகிகளை பற்றி பேச கோட்சே கும்பலின் அடியாளான ஆர்.என்.ரவிக்கு என்ன அருகதை இருக்கிறது?
இந்திய ஒன்றியத்தின் சுதந்திரத்திற்கு ஒரு துளி துரும்பைக் கூட எடுத்துப் போடாத ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அடியாள் ஆர்.என்.ரவி பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
தமிழ்நாட்டில் இருப்பதற்கு ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை; அவர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். ஏற்கெனவே பதவிக்காலம் முடிந்தும் ஒட்டிக்கொண்டிருக்கிற ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
அடுத்ததாக ஆளுநர் முறையையே ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஈடு��ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
நீதித்துறையே!
நீதிபதி ப.உ.செம்மல் அவர்களின் பணியிடை நீக்கத்தை இரத்து செய்ய வழிவகை செய்!
நீதியென்���து அதிகாரத்தைப் பாதுகாக்க அல்ல. அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கவே. அந்த அடிப்படையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பு கோட்பாட்டை நடைமுறையில் நிலைநாட்ட முயன்ற மாவட்ட ��ீதிபதி ப.உ. செம்மல் அவர்களைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது முழுக்க முழுக்கத் தவறானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். ஒரு நீதிபதி சட்டத்தின் அடிப்படையில், சாட்சிகளின் அடிப்படையில், எந்த அதிகாரத்திற்கும் அஞ்சாமல் தீர்ப்பளித்தால் அதற்கான பரிசு இடைநீக்கமாக இருக்க முடியாது. இத்தகைய நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்திற்கே நேரடியான சவால் ஆகும்.
நீதிபதி ப.உ. செம்மல் அவர்கள், தமது பணிக்காலத்தில் ஒரே ஒரு வழக்கில் மட்டுமல்ல, தொடர்ந்து மக்களுக்குப் பயன் தரும் தீர்ப்புகளை வழங்கியவர். காவல்துறையில் சிலர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்குகளில், அதிகாரத்தில் இருப்பவராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவரே என்ற அடிப்படையில், இவரது தீர்ப்புகள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.சி / எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் வெறு��் சட்டப்புத்தக வரியாக இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் உண்மையானப் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நிவாரணம் வழங்கிய தீர்ப்புகள், ஏழை எளிய மக்கள் பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டபோது, சாட்சிகளையும் சட்ட விதிகளையும் ஆழமாக ஆராய்ந்து அவர்களுக்கு நீதி வழங்கிய தீர்ப்புகள், அரசியல் மற்றும் அதிகார அழுத்தங்கள் வெளிப்படையாக இருந்த போதிலும் அவற்றுக்கு அடிபணியாமல் சட்டத்தின் பக்கம் நின்ற தீர்ப்புகள் ஆகியவை, இவர் ஒரு மக்கள் நல நீதிபதி என்பதற்கான சாட்சிகளாக உள்ளன.
அப்படிப்பட்ட ஒரு நீதிபதி, சட்டத்தின் வரம்புக்குள் நின்று வழிகாட்டுதல் வழங்கியதற்காகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவது, நாளை எந்த நீதிபதியும் அதிகாரத்திற்கு எதிராகத��� தீர்ப்பளிக்க முடியாத அச்ச சூழலை உருவாக்கும் அபாயகரமான முன்னுதாரணமாகும்.
இது ஒரு தனிநபருக்கு எதிரான நடவடிக்கை அல்ல. மாறாக, மக்கள் நீதியைப் பெறுவதற்கான கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதித்துறையின் சுயமரியாதையைப் பலவீனப்படுத்தும் செயல்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இந்தப் பணியிடை நீக்கத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது. நீதிபதி ப.உ. செம்மல் அவர்களின் பணியிடை நீக்க உத்தரவை உடனடி��ாகத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் நலன் காக்கும் தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு, பாதுகாப்பும் மரியாதையும் உறுதி செய்யப்பட வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவிதமான அரசியல் அல்லது அதிகாரத் தலையீடும் தமிழகத்தில் அனுமதிக்கப்படக் கூடாது.
நீதிக்காக நின்ற ஒருவரை தண்டிப்பது நீதியையே தண்டிப்பதற்கு சமம். அநீதிக்கு எதிராக நின்று நீதிக்காக குரல் கொடுக்கும் போராட��டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி எப்போதும் மக்களோடு நின்று செயல்பட��ம் என்பதை, இதன் மூலம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.