When the wait gets longer, the impact gets bigger.
Always beside you, today and every day #Thalapathy@actorvijay na. You are truly our Janangalin Nayagan ❤️ We are coming - Delayed but not defeated!
#JanaNayagan
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகள் ஏழு பேருக்கு, பள்ளி ஆசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்ததைக் கண்டித்தும், தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசைக் கண்டித்தும், @BJP4Tamilnadu புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு.ஜகதீசன் மற்றும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் திரு. ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில், ஆயிரக்கணக்கான @BJP4Tamilnadu சகோதர சகோதரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
பாலியல் குற்றங்களைத் தடுக்காத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடிய @BJP4Tamilnadu சகோதர சகோதரிகளை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.
”எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சிலவற்றிற்கு கூட செவிசாய்க்க மறுக்கும் தமிழக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருக்கிறது.
நீண்ட கால, நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் அரசு நிர்வாகம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என சொல்வதற்கு என்ன தகுதியிருக்கிறது என போக்குவரத்துத் தொழிற்சங்கங்க்ளைச் சேர்ந்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆறு அம்ச கோரிக்கைகளில் ஒன்றை கூட ஏற்க மறுக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.
பொங்கல் பண்டிகையைட்டி ஏராளமான பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சாதகமாக பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தற்போதிலிருந்தே பன்மடங்கு கட்டணத்தை உயர்த்த தொடங்கிவிட்டதாகவும்
புகார் எழுந்துள்ளது.
எனவே, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை பொதுமக்கள் நலன்கருதி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் அன்பு நண்பருமான திரு.தமிமுன் அன்சாரி அவர்களின் தாயார் திருமதி. உம்மு சலிமா அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
தாயாரை இழந்து வாடும் திரு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @ThamimunansariM
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @iVijayakant