இந்த��யாவின் இசைக்குயில், பல கோடி மக்களை தன் காந்த குரலால் கவர்ந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது, அவரின் ஆன்மா இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்,அவர் உடலால் மறைந்தாலும் தனது பாடல்களால் பூமி உள்ளளவும் வாழ்வார்.
#LataMangeshkar
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனும் முதுமொழிக்கேற்ப உடலிலும் மனதிலும் உறுத��� கொண்டு,எதிர்வரும் வினைகளை விழிப்புணர்வோடு வரும்முன் காத்து இன்புற்று வாழவும், எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி கொள்ளவும் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில் உறுதி கொள்வோம்.
#WorldCancerDay
சமதர்ம சிந்தனை,சமூகநீதி,மொழி உணர்வு,மக்கள் நலம் ஆகியவற்றோடு விசாலமான தனது உள்ளத்தாலும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் கொண்டுள்ள பேரறிஞர் #அண்ணா அவர்களின் நினைவு நாளில் அவரின் சீரிய சித்தாந்தங்களை பின்பற்றி அவர�� காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.
@AIADMKOfficial
ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்,1/2
#வன்மையாக_கண்டிக்கின்றோம். #வன்மையாக_கண்டிக்கின்றோம்
என்றும் கழக பணியில்
நத்தம் A.குணசேகரன்.BE,MBA
ஒன்றிய செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பிரிவு
திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்.
"சாகும்போதும் #தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பல் #தமிழ்மணந்து வேகவேண்டும்" என்ற புலவர் க.சச்சிதானந்தின் வரிகளுக்கு ஒப்பாக நம் அன்னை தமிழுக்கு ஆபத்து என்றவுடன் உறுதியோடு போராடி இன்னுயிர் நீத்து தாய் மொழி காத்த #மொழிப்போர் தியாகிகளை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்.
நாடெங்கிலும் இருக்கும் பெண் குழந்தைகளின் கல்வி,உட��்நலம்,சமஉரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதை மையமாக கொண்டுள்ள தேசிய பெண் குழந்தைகள் நாளில், அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்து,இந்த தேசம் செவிமடுக்கட்டும், நம் பெண் குழந்தைகளை நாம் பேணி பாதுகாப்போம் என உறுதியேற்போம்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டின் துடிப்பான இளைஞர்களை ஒன்றுத்திரட்டியதுடன், இந்திய ராணுவத்தை உருவாக்கி எதிரிகளை திணறடித்து வீரத்தின் அடையாளமாய் விளங்கிய மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி வணங்குகிறேன்.
#Netaji
நேற்று பொய் செய்தி போட்ட ஊடகங்கள் இதற்கு என்ன பதில் சொல்லும்?
PS. ஊடகங்கள் ஆளும் திமுக ஆட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது.
@KPAnbalaganoffl