The difficulty and huminiliation that comes to us in life, is to take us to the the gate of victory, that is the way to our progress, strive up to it 💪💪💪
இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆங்கிலப் பேச்சை முதன் முறையாகக்
கேட்டேன்
சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்; ஆங்கிலச் சொற்களை சரியாக உச்சரிக்கிறார். மிக்க மகிழ்ச்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
RESPECTED CM SIR
*CONGRATS*
AND AGAIN CONGRATS TO THE VOTERS,
IT SHOWS HOW CONFIDENT WE ARE,
T V K
KEEP WORKING HARD
TO TAKE THE STATE TO NEXT LEVEL
GOD BLESS
போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
*நாம் நதி போல
போய்க்கொண்டே
இருப்போம்*
வெற்றி நிச்சயம்
ஓம் நமச்சிவாய
Heartfelt congratulations to Tamilaga Vettri Kazhagam led by CM Vijay avl on their by-election victory, from AnbudanGautami💐
Wishing you every success in honouring the people’s trust and serving their welfare.
#TVK#Vijay#ByElection#AnbudanGautami
நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களுக்கு மகத்தான வெற்றியைத் தேடித்தந்த வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது வெறும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமல்ல; பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடைத்தேர்தல்!
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று, 35 சதவீத வாக்குகள் பெற்று 108 இடங்களில் வென்றது ஏதோ 'விபத்து அல்ல'; தமிழக மக்கள் மிக ஆழமான அரசியல் புரிதலோடு, விழிப்புணர்வோடு அளித்த தீர்ப்பு என்பதை மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபித்துள்ள தேர்தல் இது.
தமிழகத்தின் சமீபகால இடைத்தேர்தல் வரலாற்றில்... ஆளும் கட்சி தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல், எதிர்க்கட்சிகளை முடக்காமல், வாக்காளர்களைப் பட்டிகளில் அடைத்து வைக்காமல், வாக்குக்குக் காசு கொடுக்காமல்... உண்மையான மக்களாட்சி மாண்போடு அமைதியாக நடந்து முடிந்த உன்னதமான தேர்தல்!
இந்த இமாலய வெற்றிக்கு முழு முதற்காரணம் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான 4 மாத நேர்மையான, லஞ்ச ஊழலற்ற, வெளிப்படையான நல்லாட்சி தான். அதற்கு தமிழக மக்கள் மனமுவந்து வழங்கிய நற்சான்றிதழ் தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி!
குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பொய்ப் பிரச்சாரங்களையும் சூழ்ச்சிகளையும் தவிடுபொடியாக்கி, நமது கழக வேட்பாளர் திருமதி பி. சத்தியபாமா அவர்களை 9,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ள தாராபுரத்துத் தன்மான வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த சிறப்பு நன்றிகள்!
இந்த வரலாற்று வெற்றிக்காக அயராது வழிகாட்டிக் களப்பணியாற்றிய நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தோழமைக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், வாக்கு எண்ணிக்கை நாளான இன்று வரை களத்தில் நின்று உழைத்த கழகத்தின் வெற்றித் தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
வெற்றி நமதே! சமத்துவம் வெல்லட்டும்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் திருமதி மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்று உள்ளனர்.
வாகை சூடிய அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் @TVKVijayHQ , ஜோசப் விஜய் @CMOTamilnadu அரசின் மீதான நம்பிக்கையை இரு தொகுதிகளிலும் வாக்காளப் பெருமக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
#vaiko #mdmk #TVKVijay
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'யின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும்சத்யபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.
கடந்த பொதுத் தேர்தலில் இவ்விருதொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, 'கூட்டணி அரசு' என்கிற தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மகத்தான நிலைபாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.
'விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியேவெற்றி பெறும்' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிடவேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து திறம்பட செயலாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் கூட்டணியின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!
@actorvijay@CMOTamilnadu
#ByElectionsResults
A clear reflection of the people’s trust and confidence in HCM leadership. Wishing you continued success in serving the people sir.. வெற்றித்தலைவர் ❤️ @CMOTamilnadu@TVKVijayHQ
வெற்றி வேல்! வீர வேல்!!
வெற்றி நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கு நேரில் சந்திந்து வாழ்த்து தெரிவித்தேன்!
தாராபுரம் இடைத் தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தமைக்கும் நன்றிகளை தெரிவித்தேன்!!
@CMOTamilnadu | @TVKVijayHQ
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
An honour that makes it even more special. Grateful to receive this recognition from the Hon’ble Chief Minister of Tamil Nadu, C. Joseph Vijay. A proud moment, and a reminder to keep striving for excellence!
@CMOTamilnadu
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புச் சகோதரர் டாக்டர் @draramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
சமூக நீதி, சுற்றுச்சூழல், மதுவிலக்கு என தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய விவகாரங்களில் காத்திரமான கருத்துக்களை எடுத்துரைத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி அவர்கள், ஆரோக்கியத்தோடு மக்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள இந்த இனிய நாளில் வாழ்த்துகிறோம்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
It was an honor to welcome our Hon’ble Chief Minister Shri C. Joseph Vijay as the President of the Tamil Nadu Olympic Association (TNOA) at the grand felicitation ceremony & dinner hosted for Tamil Nadu’s medal winners of the 2026 Asian Games!
On behalf of the Tamil Nadu Olympic Association, I extend my heartfelt gratitude to the Hon’ble CM for his visionary leadership and unwavering commitment to empowering sports talent across our state.
A special appreciation to our Hon’ble Sports Minister Thiru. Aadhav Arjuna, whose dedicated support and passion continue to drive Tamil Nadu’s sports ecosystem to world-class heights.
Together, we remain committed to nurturing champions and taking Tamil Nadu sports to global victory!
#DrIshariKGanesh
உப்பைப் போல எளிமையானத் தலைவன் தென்றலைப் போல மென்மையான தலைவன் தமிழைப் போல உண்மையான தலைவன் தளபதி @TVKVijayHQ .
இளைஞர்களின் இதயத்திலும் பெண்களின் பேராதரவிலும் எந்நாளும் வலுவாக திகழ்கின்ற மனசாட்சி உள்ள மக்களாட்சியின் தலைமகன் தளபதி @TVKVijayHQ அவர்களின் தவெக ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்..!