உழைப்பால் உயர்ந்து, உழைத்த பணத்தை ஊர் மக்களுக்கு அளித்து, தமிழக மக்களின் மனங்களில் இன்றளவிலும் நீங்கா இடம் பெற்று இருக்கும் புரட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன்.
அவருடைய மக்கள் நலத் திட்டங்கள் என்றென்றும் நினைவு கூரத்தக்கது.
சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூடநம்பிக்கையின் எதிர்ப்புக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து தளராமல் போராடிய பகுத்தறிவுப் பகலவன், சமூக நீதியின் சிகரம் தந்தை பெரியார் அவர்களின் 52-வது நினைவு தினம் இன்று.
சமுதாயத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரைப் போற்றி வணங்கி, அவரது பாதையில் தொடர்ந்து பயணித்து, சமத்துவ சமுதாயத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்.
அன்பினால் இந்த உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் அவர்களின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #HappyChristmas2025
தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து, அதன் தொடர்ச்சியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்னும் அரசியல் இயக்கத்தைத் தொடங்கி பல்வேறு சாதனைகளைப் படைத்தவரும், ‘கேப்டன்’ என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன்.
பொது வாழ்வில் அவர் மேற்கொண்ட ஈகைப் பண்புகள் இந்தப் பூமி உள்ளவரை நிலைத்து நிற்கும்.
புதுப்பொலிவுடன் ஆங்கிலப் புத்தாண்டு உதயமாகின்ற இந்த இனிய நாளில், எனது அருமை தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். #HappyNewYear2026
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய முதல் இந்தியப் பெண்மணி எனப் போற்றப்படுபவரும், வாள் வீச்சு, அம்பு எறிதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் எனப் பல்வேறு போர்க்கலைகளைக் கற்றறிந்தவரும், பல மொழிகளில் புலமை பெற்றவருமான சிவகங்கை இராணி வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் 296-வது பிறந்த தினம் இன்று.
இந்நன்னாளில் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம். தாய் மண்ணைக் காக்கத் துவளாமல் போராடிய வீரமங்கையின் புகழ் இந்தப் பூமி உள்ளவரை நிலைத்திருக்கும்.
ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்து, தன் இறுதி மூச்சு வரை தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் காக்க உரிமைக்குரல் எழுப்பியவரும், அனைவரிடத்திலும் வீரத்தையும், தியாகத்தையும் விதைத்தவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பாஞ்சாலங்குறிச்சியின் மாமன்னர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு தலை வணங்காத சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் என்றென்றும் போற்றுவோம்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலில் ஈர்க்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவரும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், போக்குவரத்து, வனம், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் போன்ற இலாக்காக்களின் அமைச்சராக திறம்பட பணியாற்றியவரும், மூத்த அரசியல்வாதியும், தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான எனது அருமை சகோதரர் திரு. @KASengottaiyan அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, மக்கள் சேவையாற்றவும், அவருடைய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறவும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.