"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்று சொல்லாக மட்டும் அல்லாமல், தன் செயல்மிக்க பெருவாழ்வால் அவ்வாக்கியத்தின் இலக்கணமாகத் திகழ்ந்த நம் தன்னிகரற்ற தலைவி மாண்புமிகு புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் 77-வது பிறந்தநாளான இன்று, மாண்புமிகு அம்மா அவர்களின் நெடும்புகழைப் போற்றி வணங்குவோம்!
#அம்மா_சொல்அல்ல_செயல்
மத்திய, மாநில அரசுகள் காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சனையில் தொடர்ந்து கபட நாடகமாடி வருவதை @AIADMKOfficial சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்வதையே தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்துவந்த நிலையில், போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.
தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த
திரு. @VSOMANNA_BJP அவர்களை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும்.
ஏற்கனவே காவிரி மேகதாது பிரச்சனையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் பேசா மடந்தையாக இருப்பதன் காரணம் புரியவில்லை.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
@CMOTamilnadu@CMofKarnataka@DoWRRDGR_MoJS
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் @AIADMKOfficial சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்!
பெற்றோர்களே- இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள்!
மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே- உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்.
#Say_NO_TO_DRUGS
புகழ்பெற்ற போத்தீஸ் நிறுவனங்களின் நிறுவனர் திரு.K.V.P.சடையாண்டி மூப்பனார் அவர்களின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்... அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...
@EPSTamilNadu
தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாது,
எல்லோருக்கும் பயனுள்ளவனாய் வாழ்வதே தலைவனுக்கு அழகு என இலக்கணம் வகுத்த எங்கள் #திராவிடநாயகன்_MGR
107வது பிறந்தநாளில் அன்னாரின் புகழை போற்றி வணங்குகிறேன்...
@AIADMKOfficial
புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் கிறிஸ்தவ உறவுகளான வட்டக் கழக செயலாளர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தோம்...
#HappyNewYear2024@AIADMKOfficial
இன்று தொடங்கும் இந்த புத்தாண்டு உங்கள் எல்லோரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் வெற்றிகளையும் வழங்கிட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் வாழ்த்துக்களுடன் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
#HappyNewYear2024@AIADMKOfficial
தேனி மேற்கு மாவட்டம், தேனி கிழக்கு ஒன்றியம் சார்பில் கழக அமைப்பு செயலாளர் மாவட்ட கழக செயலாளர் திரு.S.T.K.ஜக்கையன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டேன்...
@EPSTamilNadu@AIADMKOfficial@satyenaiadmk@ShivaAnandAdmk
தேனி மேற்கு மாவட்டம், சின்னமனூர் மேற்கு ஒன்றியம் புலிகுத்தியில் கழக அமைப்பு செயலாளர் மாவட்ட கழக செயலாளர் திரு.S.T.K.ஜக்கையன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டேன்...
@EPSTamilNadu@AIADMKOfficial@satyenaiadmk
கழக அமைப்புச் செயலாளர், தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.S.T.K.ஜக்கையன் அவர்கள் தலைமையில், உத்தமபாளையம் பேரூர் கழகம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளராக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டேன்..
@EPSTamilNadu@AIADMKOfficial
சாதி, மத, பேதம் கடந்து அன்பென்னும் மொழி பேசி, செல்லும் இடமெல்லாம்
சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் நாளைய உலகை ஆளவிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நாள் வாழ்த்துக்கள்...
இந்நன்னாளில் குழந்தைகள் நலம் காப்போம்!
உளமாற உலகுக்கு வளம் சேர்ப்போம்!!
@AIADMKOfficial