திரைக்கவர்ச்சி நாயகனை வீழ்த்த வந்த எங்கள் அரசியல் ஹீரோ, அன்பு அண்ணன் @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
சட்டமன்றத்தில் உங்கள் குரல் தமிழர் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், மாநிலத்தின் சுயமரியாதைக்காகவும் ஓங்கி ஒலிக்கட்டும். மக்களின் நலனுக்காக உங்கள் பயணம் மேலும் வலுப்பெறட்டும்.
திரைக்கவர்ச்சி நாயகனை வீழ்த்தி, மக்கள் நம்பிக்கையை வெற்றியாக மாற்றிட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.✨✨💐💐
பத்து நாள்களாக காவேரி நீர் உரிமை குறித்து தமிழ்நாட்டின் குரலாக பேசாமல் அமைதியாக இருந்த நீர்வளத்துறை அமைச்சர், இன்று நடிகை திரிஷாவுக்காக அவசரமாக குரல் கொடுக்கிறார்.
தமிழக விவசாயிகளின் உரிமை, குடிநீர் பிரச்சினை, காவேரி நீர் பங்கீடு போன்ற முக்கிய விவகாரங்களில் காட்டப்படாத அக்கறை, ஒரு நடிகையைச் சுற்றிய சர்ச்சையில் மட்டும் வெளிப்படுவது ஏன்?
இப்போது அவர் தமிழ்நாட்டு மக்களின் நீர்வளத்துறை அமைச்சரா, அல்லது நடிகை திரிஷாவின் பிஆர்ஓவா என்பதை அவரே விளக்க வேண்டும்.
@BussyAnand
பாவம், நடிகர் @actorvijay அவரால் என்ன செய்ய முடியும்?
காவேரி நீர் உரிமைக்காக கர்நாடக அரசை எதிர்த்து உரக்கக் குரல் கொடுக்க முடியுமா? தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியான நிலைப்பாடு எடுக்க முடியுமா?
மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட முடியுமா?
எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால், அதற்கு தர்க்கரீதியாகவும் அரசியல் முதிர்ச்சியுடனும் பதிலளிக்க முடியுமா?
பாவம், என்ன செய்வார்? எல்லாவற்றிற்கும் கைது நடவடிக்கையைத்தான் தீர்வாகக் கருதுகிறார்.
ஏனெனில் பழிவாங்குதல்தான் தனது திரைப்பட ஹீரோயிசத்தின் அடையாளம் என்று எண்ணிவிட்டார். ஆனால் அரசியல் என்பது சினிமா அல்ல; மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பும் முதிர்ச்சியும் கொண்ட தளம்.
அரசியலின் உண்மையான அர்த்தம் புரியும் நாளில், கடந்த செயல்களை நினைத்து வருந்த வேண்டிய நிலை வரலாம். @TVKVijayHQ
அண்ணன் @Udhaystalin அவர்களின் கைது கோமாளித்தனமானது!!
சட்டங்களும், ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளும் இல்லாத காலத்தில், இயற்கையாக வழிந்து வரும் நீர் கடைமடையில் வாழும் மக்களுக்கே சொந்தம் என்ற நீதியின் அடிப்படையில், தன் அரசனான திப்புசுல்தானிடம் உரிமையோடு பேசி நீதியைப் பெற்றுத் தந்தவர் எங்கள் மாவீரன் தீரன் சின்னமலை.
அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்ததற்காக ஆடிப்பெருக்கன்று தூக்கிலிடப்பட்ட அந்த மாமன்னனின் நினைவைப் போற்றுவோம். இன்று காவிரியாக ஓடி வரும் ஒவ்வொரு துளி நீரும் தீரன் சின்னமலையின் புகழைப் பாடுகிறது.
கொங்கு இலக்கியமும், கொங்கு வட்டார வழக்காறும், மைசூரிலிருந்து பாலக்காடு வரை விரிந்த பண்பாட்டு உறவுகளும் தீரன் சின்னமலையின் பெருமையை எடுத்துரைக்கின்றன.
வீரமங்கை வேலுநாச்சியாரையும், மருது சகோதரர்களையும் திப்புசுல்தானுடன் இணைத்த வரலாற்றுப் பாலமாக விளங்கிய தீரன் சின்னமலை, தமிழர் சுயமரியாதையின் அடையாளம்.
உங்கள் நினைவு ஒரு வரலாறு மட்டுமல்ல; எங்கள் மண்ணின் வீரமும், மானமும், சுதந்திர உணர்வும் ஆகும்.
#தீரன்_சின்னமலை #ஆடிப்பெருக்கு #காவிரி
Please தூங்காதீங்க @TVKVijayHQ 🙏🏻🙏🏻
காவேரி என்பது தமிழர்களின் விவசாயத்தின் உயிர்நாடி மட்டுமல்ல; ஒகேனக்கல் முதல் இராமநாதபுரம் வரை சுமார் 11 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் அதுவே.
இன்று நாம் உண்ணும் சோற்றுக்கும் ஆபத்து, குடிக்கும் தண்ணீருக்கும் ஆபத்து. ஆனால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மௌனம் விரோதம் இருக்கிறார், நீர்வள துறை அமைச்சர் சிரிக்கிறார்!!
சோற்றுக்கும், நீருக்கும் பிரச்சனை வந்த பிறகும்…தமிழ்நாட்டின் உரிமைக்காக வலிமையாகக் குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில்..
இந்த மௌனம் ஏன்? @CMOTamilnadu
#Cauvery #TamilNadu #WaterRight
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், தமிழ்நாட்டுக்குரிய காவேரி நீரை தர முடியாது என்று அடம்பிடிக்கிறது. ஆனால் அதே காங்கிரஸின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் எந்த எதிர்ப்புமின்றி தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
தமிழர்களின் உரிமையை பறிக்கும் அரசியலுக்கு எதிராக குரல் எழாத நிலை தொடர்ந்தால், அது தமிழர் அரசியலின் வீழ்ச்சியையே காட்டும். காவேரி நீர் என்பது எங்கள் உரிமை; யாருடைய கருணையும் ,பிச்சையும் அல்ல.!
@RahulGandhi
“நீட்டின் ரகசியம் தெரியும்” என்று சொல்லிவிட்டு சும்மா இருந்தது இல்லை திமுக காரான்!!!
திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கிற எங்கள்மீது கல் எறியும் யோக்கியசிகாமணிகள், முதலில் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
பாஜக அரசால் நீட் கட்டாயமாக்கப்பட்டபோது, அதை முதலில் எதிர்த்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான். தி.மு.க. தொடர்ந்து போராடிய வரையில்தான் நீட் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்கப்பட்டது.
பின்னரும், நீட் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட பிறகும், நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து எதிர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
“நீட்டின் ரகசியம் எங்களுக்குத் தெரியும்” என்று எங்கள் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கூறியபோது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மீண்டும் மத்திய ஆட்சிக்கு வந்தால், நீட்டை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த கூட்டணி ஆட்சிக்கு வராததால், அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இருந்தபோதிலும், வாய்ப்பு கிடைத்த ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், “நீட் வேண்டாம்” என்ற குரலை தொடர்ந்து ஒலித்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான். போராட்டம்,ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரம்,கையெழுத்து இயக்கம் நடத்தினோம்.
தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, அதன் அறிக்கையின் அடிப்படையில் சட்டமன்றத்தில் மசோதா மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றி, ஆளுநருக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பியது. நீதிமன்றத்திலும் சட்டப்பூர்வமாக தொடர்ந்து போராடியது.
தமிழ்நாட்டில் “நீட் கூடாது” என்ற உறுதியான அரசியல் நிலைப்பாடு இன்று உயிருடன் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர்ச்சியான போராட்டம்தான். தி.மு.க.வில் யாரும், எந்தக் காலத்திலும், “நீட் வேண்டும்” என்று ஆதரித்ததில்லை.
இவ்வளவு காலமாக நீட்டுக்கு எதிராக தொடர்ந்து போராடிய திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் யோக்கியசிகாமணிகள், தி.மு.க. செய்த பணிகளில் ஒரு துளியாவது செய்திருந்தால் மட்டுமே அந்த வரிசையில் நின்று பேசுவதற்குத் தகுதி உண்டு.!
@Udhaystalin
The resignation of the Union Education Minister is a significant victory for the youth and students of this country.
The young people and students who protested in Delhi have sent a strong message to the Narendra Modi-led Central Government, which had functioned with the arrogance that no one could question or challenge its decisions. Through their democratic struggle, they have made the government listen to the voice of ordinary citizens and acknowledge their concerns.
However, this should not be seen as a victory against NEET. Rather, it is a victory for democracy—a reminder that when ordinary people unite and raise their voices, even those in power can be compelled to respond.
The real victory against NEET will come only when this deeply flawed examination system is abolished. Only then will students from poor, marginalized, government school, and State Board backgrounds have a fair opportunity to pursue their dream of becoming doctors.
Only on that day can we truly say that the struggle against NEET has achieved its ultimate victory.
தன்னை எதிர்த்து யாரும் பேச முடியாது, மக்களின் குரலுக்கு செவிசாய்க்கத் தேவையில்லை என்ற அகங்கார மனநிலையுடன் செயல்பட்ட மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கும், டெல்லியில் போராடிய இளைஞர்களும் மாணவர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
தங்களுடைய உரிமைக்காக அமைதியான, ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்த இளைஞர்களும் மாணவர்களும், சாமானிய மக்களின் உணர்வுகளை ஆட்சியாளர்கள் புறக்கணிக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். கல்வி அமைச்சரின் ராஜினாமா என்பது, இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்த முக்கியமான வெற்றியாகும்.
ஆனால், இதை நீட்டுக்கு எதிராகக் கிடைத்த வெற்றி என்று கூற முடியாது. இது, மக்களின் ஒற்றுமையும் ஜனநாயகப் போராட்டமும் எந்த அதிகாரத்தையும் பதிலளிக்க வைக்க முடியும் என்பதற்கு கிடைத்த வெற்றியாகும்.
நீட் என்ற மோசடியான தேர்வுமுறை முழுமையாக ரத்து செய்யப்படும் நாளில்தான், எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்விக் கனவு முழுமையாக நனவாகும். அந்த நாளில்தான், நீட்டுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் உண்மையான வெற்றி கிடைத்ததாக சொல்ல முடியும்!
“ஜனநாயகன் படத்தின் புரொட்யூசரும் டெல்லி பிரதிநிதியுமான விஜய் நண்பர் எங்கே இருக்கிறார்கள்?
நீட் விவகாரம் குறித்து டெல்லியில் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், அவர்களை யாராவது பார்த்திருக்கிறீர்களா?”
பாடகர் தோழர் @Arivubeing அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களே,
அறிவு அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் போராடி வரும் மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் குரல் கொடுக்க வேண்டும் என்பதும்..
அப்படி தான் அவர் முழக்கம் இட்டார்…
ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கைகள் குறித்து தங்களிடமிருந்து தெளிவான பதில் ஏன் வரவில்லை?
அறிவு அவர்களைச் சந்தித்த நீங்கள், அவர் வைத்த கோரிக்கையை மட்டும் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
டெல்லியில் மாணவர்கள் போராடும் இந்த நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை?
மாணவர்களின் எதிர்காலம் குறித்த இந்த முக்கியமான பிரச்சினையில் ஏன் இந்தக் கள்ள மௌனம்?
மோடி அரசின் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?
டெல்லியில் மாணவர்கள் நீட்டுக்கு எதிராக போராடுகிறார்களாம்… அது நமக்கென்ன பங்காளி?
எவன் செத்தா நமக்கென்ன… எவன் பாதிக்கப்பட்டா நமக்கென்ன…
நமக்கு முக்கியம் என்ன தெரியுமா?
‘ஜனநாயகன்’ படம்!
ஃபர்ஸ்ட் டே… ஃபர்ஸ்ட் ஷோ… காலை 4 மணிக்கே தியேட்டரில் இருக்கணும்!
இந்த நாட்டில் ஜனநாயகம் உயிரோட இருக்கிறதா?
மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகிறது?
நீட் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?
இதையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்…
இப்போ நமக்கு முக்கியம், ‘ஜனநாயகன்’ படம் பார்த்து கொண்டாடுவதுதான்!
மக்களின் பிரச்சினைகளை விட, தளபதி படம் தான் முக்கியம்….
கால கொடுமை 🤦🏻🤦🏻🤦🏻
வியட்நாம் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்தியப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பெருந்துயரால் பாதிக்கப்பட்ட அனைவரின் துயரிலும் நானும் பங்கேற்கிறேன்.
உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர போராட்டத்தில் முதல் வீரனாய் விடுதலைக்காக குரல் எழுப்பி அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் தூத்துக்குடி மாவட்டம் கட்டாங்குளத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்!
மாவீரன் அழகு முத்துக்கோன் புகழ் ஓங்கட்டும்!