ரிஷபம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028.
பாவத்திற்கு பரிகாரம் இல்லை எத்தனையோ ஜென்மம் எடுத்தாலும் தொடர்ந்து வரும்
2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற விருக்கும் சனி பெயர்ச்சி, ரிஷப ராசி நேயர்களுக்கு ஒரு நிம்மதி பெருமூச்சைத் தரும் காலமாக அமையப்போகிறது.
வாழ்க்கையில ஜெயிக்கணும்னா ரெண்டு விஷயத்தை மறந்திடாதே.
ஒன்னு, அடுத்தவன் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படாதே.
ரெண்டு, அடுத்தவன் பேச்சைக் கேட்டு உன் பாதையை மாத்திக்காதே.
உன் வளர்ச்சி உன் கையில தான் இருக்கு.
உன் முழு கவனத்தையும் உன் வேலையில வை. காலம் உனக்கான பதிலைச் சொல்லும்.
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் தேவைகள் பெருகி கொண்டே தான் போகும் ஆனால் எளிமையில் தான் நிம்மதியும் அமைதியும் கிடைக்கும்
நாமும் யாரையும் காயப்படுத்தாமல் நம்மையும்
யாரையும் காயப்படுத்த
அனுமதிக்காமல் ஒரு வாழ்க்கை
வாழ்ந்துவிடுங்கள் போதும் ..
கடந்த காலங்களில் நீங்கள் அனுபவித்த 'பத்தாமிடத்து சனி' (கர்ம சனி) முடிவுக்கு வந்து, சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்திற்கு (மீன ராசி) செல்கிறார்.
ரிஷப ராசிக்கு சனி பகவான் தர்ம-கர்மாதிபதி என்பதால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்கப்போகிறது.
பொதுவான பலன்கள்
இதுவரை உங்கள் தொழிலில் இருந்து வந்த மந்தநிலை மற்றும் மன அழுத்தம் நீங்கும். 11-ம் இடத்து சனி என்பது பொதுவாகவே "லாபச் சனி" என்று அழைக்கப்படும், இது அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளித் தரும்.
* தடைகள் விலகும்: நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
* சமூக அந்தஸ்து: சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். பெரிய மனிதர்களின் நட்பு மற்றும் ஆதரவு கிடைக்கும்.
* மூத்த சகோதரர் ஆதரவு: உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த சகோதர அல்லது சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும்.
தொழில் மற்றும் பொருளாதாரம் :
* பொருளாதார உயர்வு: வருமானம் பல வழிகளில் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
* பதவி உயர்வு: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் அல்லது பதவி உயர்வு (Promotion) கிடைக்க வாய்ப்புள்ளது.
* தொழில் விரிவாக்கம்: சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய கிளைகளைத் தொடங்கலாம் அல்லது தொழிலை நவீனப்படுத்தலாம். முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைத் தரும்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம்
* குடும்ப மகிழ்ச்சி: வீட்டில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். சுப நிகழ்ச்சிகள் (திருமணம், வளைகாப்பு போன்றவை) கைகூடி வரும்.
* குழந்தை பாக்கியம்: நீண்ட நாட்களாக குழந்தை வரத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
* ஆரோக்கியம்: நீண்ட கால நோய்களில் இருந்து முன்னேற்றம் காண்பீர்கள். உடல் மற்றும் மன உறுதி அதிகரிக்கும்.
கவனமாக இருக்க வேண்டியவை
11-ல் சனி அமர்வது நன்மைகளைத் தந்தாலும், அவருடைய பார்வைகளை கவனிக்க வேண்டும்:
* பார்வை பலன்கள்: சனியின் 3-ஆம் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால், அவ்வப்போது ஒருவித மந்தநிலை ஏற்படலாம். அதைத் தவிர்க்கவும்.
* பயணங்கள்: 8-ஆம் வீட்டின் மீதான பார்வையால், நெடுந்தூரப் பயணங்களின் போது கவனமாக இருப்பது நல்லது.
எளிய பரிகாரங்கள்
* மகாலட்சுமி வழிபாடு: ரிஷப ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
வாழ்க்கை
...................
எல்லோருக்கும் எளிதில் நடக்கும் சில நல்லவைகள் கூட, நமக்கு வாதாடி, வழக்காடி, கடல் மேல் நடனமாடி அப்புறம் தான் நடக்கும்!!
* தானம்: ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவுவது சனியின் அருளை இன்னும் அதிகரிக்கும்.
சுருக்கமாக: ரிஷப ராசிக்கு இது "பொற்காலம்" என்றே சொல்லலாம். கர்ம சனியின் பிடியிலிருந்து விடுபட்டு லாப சனியின் ஆதிக்கத்திற்குள் வருவதால், தொட்டதெல்லாம் துலங்கும்.
வீண் வதந்திகளும், பிறரோடு ஒப்பீடும்... சக்தியையும் நிம்மதியையும் உறிஞ்சிவிடும்.
எப்போது கவனம் அடுத்தவர் பக்கம் திரும்புகிறதோ,அப்போதே வெற்றி தாமதமாகிறது. கவனம் உன் மீது மட்டுமே இருக்கட்டும்!
வாரியார் சுவாமிகள் காட்டிய தினசரி வழிபாட்டு முறை! 🔱✨
தினமும் காலையில் நாம் சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த துதிகள் மற்றும் வழிபாட்டு முறைகளை 'அருள்மொழி அரசு' கிருபானந்த வாரியார் சுவாமிகள் விளக்கியுள்ளார்.
https://t.co/j5l4xunhV8
#VariyarSwamigal#Murugan
In Tiruvannamalai, Arunachala is revered as Shiva in His living form.
For generations, devotees have undertaken Giri Pradakshina the sacred walk around the Hill that unfolds over nearly 12 to 14 kilometres. Each step is taken with shraddha, inner attentiveness, and surrender to Arunachala's grace.
Along this time-honoured path stand the Ashta Lingams, eight potent manifestations of Shiva placed around the Hill. Each lingam is aligned with a specific direction and carries subtle cosmic energies that influence time, movement, and the rhythm of life itself.
Beyond these eight, two other sacred forms are present the Surya Lingam and the Chandra Lingam. The Surya Lingam embodies the solar principle of vitality, clarity, and life force, while the Chandra Lingam reflects lunar qualities of stillness, balance, and emotional harmony.
It is believed that these lingams were installed in accordance with planetary positions and celestial laws, forming a sacred cosmological mandala around Arunachala. Walking this pradakshina with awareness allows the seeker to attune to these subtle forces, while entering a living continuum of devotion shaped by countless souls who have walked this path in reverence and remembrance.
Har Har Mahadev 3ॐ
🌹கட்டாரிமங்கலம்:
மன்னன் ராமபாண்டியன் தான் தினமும் வழிபடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும், அதே போன்றதொரு நடராஜர் செப்புச் சிலையை அமைக்க விரும்பினான். அதே போல் ராமபாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசனான வீரபாண்டியன் என்பவனும், தன்னுடைய ஆளுகையில் உள்ள கட்டாரிமங்கலத்தில் ஒரு நடராஜர் சிலையை வைத்து வழிபட எண்ணினான். இதையடுத்து மன்னன் ராமபாண்டியன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு ஒன்றும், சிற்றரசன் வீரபாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப கட்டாரிமங்கலத்துக்கு ஒன்றும் ஆக இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து தரும்படி அதே சிற்பியிடம் சொன்னான்.
சிற்பியும், நடராசர் தோற்றத்திலான இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து முடித்தார். தனக்குரிய செப்புச் சிலையை வாங்கிப் போக வந்திருந்த சிற்றரசன் வீரபாண்டியனுக்கு, சிலைகளின் அழகைக் கண்டதும் மதி மயங்கியது. இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் செல்ல எண்ணினான். மேலும் இதே போன்ற சிலையை வேறு யாருக்கும் செய்து கொடுத்து விடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கையையும் அவன் துண்டித்து விட்டான். பின்னர் அவரது படை வீரர்கள் இருபிரிவாக பிரிந்து இரண்டு சிலை களையும் எடுத்துச் சென்றனர். ஒரு பிரிவினர் கட்டாரிமங்கலம் சென்று அங்குள்ள ஆலயத்தில் செப்புச் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பேய்குளம். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கட்டாரிமங்கலம் திருத்தலம்.
🌹கரிசூழ்ந்தமங்கலம் சிற்றரசன் வீரபாண்டியனின் மற்றொரு படைப்பிரிவினர், இன்னொரு செப்புச் சிலையுடன் வேறு வழியில் சென்றபோது, இடையில் தாமிரபரணி ஆறு குறுக்கிட்டது. அப்போது ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், படைவீரர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் படைவீரர்கள் அனைவரும் சிலையோடு, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சில நாட்களுக்குப் பின்பு, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்ததும், நடராஜர் தோற்றத்திலான செப்புச்சிலை ஒரு கரையில் ஒதுங்கிக்கிடந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதை ஒரு இடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர். இதைப் பற்றி அறிந்ததும் மன்னன் ராமபாண்டியன், அந்தச் சிலையைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தான். ஆனால் அது முடியவில்லை. அன்றிரவு அவன் கனவில் தோன்றிய ஈசன், ‘கரிய மேகங்கள் சூழ்ந்த இந்த இடத்திலேயே இருக்க நான் விரும்புகிறேன். அங்கு எனக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடு’ என்றார். அதன்படி அங்கு ஒரு ஆலயத்தை எழுப்பினான் ராமபாண்டியன். சிற்பியால் செய்யப்பட்ட நான்காவது செப்புச் சிலை கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் பாதையில் உள்ளது பத்தமடை. இந்த ஊரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றால் கரிசூழ்ந்தமங்கலத்தை அடையலாம்.
🌹கருவேலங்குளம்:
இந்த சம்பவங்களுக்குப் பிறகு கையை இழந்த சிற்பிக்கு, மன்னன் ராமபாண்டியன் மரக்கை ஒன்றைத் தயாரித்துப் பொருத்தினான். மரக்கை பொருத்தப்பட்ட பின்பு, அந்தச் சிற்பி மரக் கைகளின் உதவியுடன் ஒரு நடராசர் செப்புச்சிலையைத் தன் உதவியாளர்களுடன் சேர்ந்து செய்யத் தொடங்கினார். அந்த செப்புச் சிலை இதற்கு முன்பு செய்யப்பட்ட நான்கு செப்புச் சிலைகளைக் காட்டிலும் அழகுற காட்சியளித்தது.
அந்தச் சிலையில் அழகில் மயங்கிய சிற்பி, சிலையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார். அவர் கிள்ளிய வடு, அந்தச் சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. கிள்ளிய வடுவுடன் கூடிய அந்தச் சிலை கருவேலங்குளம் எனும் ஊரிலிருக்கும் கோவிலில் நிறுவப்பட்டது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில், சேரன்மகாதேவி வழியாகக் களக்காடு செல்லும் பாதையில் இருக்கிறது கருவேலங்குளம் திருத்தலம்.
செல்வமே சிவபெருமானே..
திருச்சிற்றம்பலம்
🌺ஒரே சிற்பி செய்த 5 நடராஜர் சிலைகள்! சிதம்பரத்தில் ஒன்று; நெல்லையில் நான்கு...எப்படி? பார்ப்போம்.🌺
நற்றுணையாவது நமசிவாயவே🙏
🌹பல்லவ மன்னன் சிம்மவர்ம பல்லவன் மிகச்சிறந்த சிவபக்தர். ஒரு முறை அந்த மன்னனுக்கு, நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை வடிவமைத்து சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய எண்ணம் வந்தது. அதற்காக மிகச்சிறந்த சிற்பி ஒருவரைத் தேடினார். அப்போது சோழ தேசத்தைச் சேர்ந்த நமச்சிவாய முத்து என்ற சிற்பியைக் கண்டறிந்தார். அந்தச் சிற்பியும் மிகச்சிறந்த சிவபக்தர்.
மன்னன் சிற்பியிடம், நடராஜர் திருவுருவத்தை வடிவமைத்துக் கொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சிற்பியும், மன்னனின் விருப்பப்படி, மிக அற்புதமான நடராஜர் சிலையை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த செப்புச் சிலையில் மிகவும் அழகாக இருந்த நடராஜரைப் பார்த்த மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்
செப்புச் சிலையிலேயே இறைவன் இவ்வளவு அழகாக இருக்கும்போது, தங்கத்தில் வடித்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருப்பார் என்று ஒரு ஆசை மேலிட்டது மன்னனுக்கு. அதனால் சிற்பியிடம் தங்கத்தைக் கொடுத்து நடராஜர் சிலையை தங்கத்தில் வடித்துத் தரும்படி சொன்னார்.
🌹சிதம்பரம் நடராஜர் :
சிற்பியும் தூய தங்கத்தில் நடராஜர் சிலையை செய்தார். சிலையை முடித்துப் பார்த்தபோது, அதுவும் செப்புச் சிலையாகவே தோற்றமளித்தது. இதைக் கண்ட மன்னன், தங்கத்திற்கு ஆசைப்பட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணி சிற்பியை சிறையில் அடைத்தான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘சிற்பியின் மீது தவறில்லை. அவர் வடித்த தங்கச் சிலையை நான்தான் செப்புச் சிலையாக மாற்றினேன். நான் செப்புச் சிலையாக இருக்கவேவிரும்புகிறேன். ஏற்கனவே செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து தென் பகுதிக்குக் கொண்டு செல்லச் சொல்’ என்றார்.
இதையடுத்து மன்னன், தங்கம் செப்பாக மாறிய சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தான். முதலில் செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து, ஈசன் கட்டளைப்படி தென்பகுதிக்கு கொண்டு செல்ல பணித்தான்.
🌹செப்பறை :
முதன் முதலில் வடிக்கப்பட்ட செப்புச் சிலையுடன் சிற்பி தென் பகுதி நோக்கி புறப்பட்டார். அவருடன் மன்னனின் படைவீரர்கள் சிலரும் பாதுகாப்புக்காகச் சென்றனர். திருநெல்வேலியை நெருங்கியபோது, படைவீரர்கள் சுமந்து வந்த சிலையின் எடை அதிகரிப்பது போல் தோன்றியது. இதுபற்றி அவர்கள் சிற்பியிடம் கூறினர். அவரும், படைவீரர்களை சற்று ஓய்வெடுக்க பணித்தார். சிலையை இறக்கி வைத்து விட்டு அனைவரும் ஓய்வெடுத்தனர்; கண்ணயர்ந்தனர். விழித்துப் பார்த்தபோது நடராஜர் சிலையைக் காணவில்லை.
இது பற்றி சிற்பியும், படைவீரர்களும் அந்தப் பகுதியை ஆண்டு வந்த ராமபாண்டியனிடம் சென்று தெரிவித்தனர். நெல்லையப்பரின் தீவிர பக்தரான ராமபாண்டியன், நடராஜர் சிலை காணாமல் போனது பற்றி கேள்விப்பட்டதும் வருந்தினான். தானும், படைவீரர்களுடன் சேர்ந்து சிலையை மீட்கும் பணியில் ஈடுபட்டான். சிலை திருட்டுப் போன பகுதிக்கு மன்னனும் மற்றவர்களும் சென்றடைந்தனர். அப்போது, அருகிலிருந்த காட்டுக்குள் இருந்து சிலம்பொலிச் சத்தம் கேட்டது. மன்னன், தனது படைவீரர்களுடன் காட்டுக்குள் சென்று பார்த்தான்.
அங்கு ஓரிடத்தில் இருந்து எறும்புகள் வரிசை, வரிசையாகக் குறிப்பிட்ட இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அந்த எறும்புகள் சென்ற வழியில் போய்ப் பார்த்த மன்னன், அங்கு சுயம்புலிங்கம் ஒன்றும், அதன் அருகில் நடராஜர் செப்புச்சிலை இருப்பதையும் கண்டு வியந்து போனான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மன்னனே! இந்த இடத்தில் எனக்குக் கோவில் அமைத்து வழிபாடு செய்’ என்றது அந்தக் குரல். அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோவில் அமைக்கப்பட்டது. செப்பால் ஆன நடராஜருக்குத் தனிச்சன்னிதி ஏற்படுத்தப்பட்டது. சிற்பியால்செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அமைந்திருக்கும் இந்த ஊர் ‘செப்பறை’ என்றழைக்கப்படுகிறது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ராஜவல்லிபுரம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் செப்பறை திருத்தலம் உள்ளது.