நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள் தலைமையிலான மாபெரும் முற்றுகை போராட்டம் !
தேச நலனுக்கு எதிராக செயல்படும் சக்திகளை விரட்டியடிக்க தேசப்பற்று கொண்டவர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம் !
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் X தள கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
18 X தள கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு..
#NDAWinning2026
இனி வீட்டிற்கு அடியில் கோடிக்கணக்கான பணம் மறைக்கப்படாது. இனி நிதி வழங்கும் பூத் பட்டியல்கள் இல்லை. இனி வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவில் அரசியல்வாதிகள் கையும் களவுமாகப் பிடிபட மாட்டார்கள். தமிழகம், காகித உறைகளால் அல்ல, செயல்வடிவத்தால் வெற்றி பெறும் அரசைத் தேர்ந்தெடுக்கிறது. #NDAWinning2026
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
நாளை மறுநாள் தேர்தல்.. இன்று திருவண்ணாமலையில், எட்டு நபரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 15 வயது சிறுமி காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதி.. கொடுரம்..
பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை, யாருக்குமே பாதுகாப்பளிக்காத இந்தத் திறனற்ற @arivalayam ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் தயார்! இன்னும் சில நாட்களில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
ஒட்டுமொத்த பெண்களும் தற்போது வெறுக்கும் ஒரே நபர் நீங்கள் தான் திரு. @mkstalin!
பெண்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதை சட்டப்பூர்வமாக்கும் மத்திய அரசின் “மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா” வை திட்டமிட்டே தடுத்து நிறுத்தி மாபெரும் வரலாற்று பிழையை செய்து விட்டீர்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி கண்களை மறைக்க, பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கத் துணிந்த உங்களைப் போன்ற பிற்போக்குவாதியை முதல்வராக பெற்றதற்கு தமிழகமே இன்று வெட்கித் தலைகுனிகிறது.
பெண்கள் பொருளாதார ரீதியாகவோ அல்லது அதிகாரமிக்க பொறுப்புகளிலோ முன்னேறினால் “ஆணாதிக்க” அறிவாலயத்திற்கு கை கால்கள் நடுங்கி வியர்த்து விடும் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக திமுக வாய் கிழிய பேசி வந்த பெண்ணியமும், பெண்கள் முன்னேற்றமும் வெறும் காற்றுப் போன பலூன்களாக இன்று தூள் தூளாக சிதறி கிடக்கின்றன.
அதுசரி சொந்த குடும்பத்திற்குள் இருக்கும் பெண் வாரிசுகளையே அரசியலில் முன்னேற விடாமல் தொலை தூரத்திற்கு துரத்தும் உங்கள் கோபலபுர குடும்பம், எங்கள் குடும்பப் பெண்களை மட்டும் முன்னேற விடுமா என்ன?
ஆண்கள் மட்டுமே ஆள வேண்டும், ஆண்கள் மட்டுமே அதிகாரத்தில் அமர வேண்டும், ஆண்களுக்கு மட்டுமே சுயமரியாதை உண்டு, ஆண்களுக்கு மட்டுமே மதிப்பும் மரியாதையும் உண்டு என்று நினைக்கும் நீங்களும் உங்கள் கட்சியினரும் தமிழகத்தின் சாபக்கேடு! தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரதப் பெண்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்த உங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது ஸ்டாலின்!
#DMKBetraysWomen
சாத்தூர் தொகுதியை அடுத்துள்ள PSR கல்லூரியில் எதோ பாரதிய ஜனதாக்கட்சி தூண்டிவிட்டு அங்கே வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை மேலும் தவறான ஒரு கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள்!
நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் உறவினர் ஒருவர் நெல்லையில் இருக்கிறார்!அவர் ஒரு பிரபல தொழிலதிபர்!! அவரது வீட்டிலும் நேற்று வருமானவரி துறையினர் ரெய்ட் நடத்தி கணக்கில் வராத ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
நயினார் அவர்களின் உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்துள்ளது. இம்மாதிரி சோதனைகளுக்கும் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஏனெனில் நெல்லையில் அவரது சொந்த உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்திருக்கிறதே? இது வருமானவரித்துறையினர் வழக்கமாக நடத்தும் சோதனைதான்! இதை பாஜக தான் தூண்டிவிட்டுச் செய்வதாகச் சொல்வது தவறான அதாவது வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எத்தை தின்றால் பித்தம் தீரும் என்பவர்கள் இது மாதிரி பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யும் மூடர்கள் அரசியலில் அநாகரிகம் மிகுந்தவர்கள்! நேர்மையற்றவர்கள் செய்யும் இந்த கேவலமான தந்திரங்களைப் நாம் முறியடித்துத் தான் ஆக வேண்டும்!
மாநில பாஜக தலைவரின் உறவினர் வீட்டிலேயே ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதில் தலையிட்டு தன் அதிகாரத்தைக் காட்டி இருக்க முடியாதா? அது அவர் வேலை அல்ல! அவரை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்! இது மாதிரியான விஷயங்களில் அவர் தேச நலனைத் தான் விரும்புவார்!
யார் யாரோ கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வருமான வரித்துறையை ஏய்த்து வருகிறார்கள்!அவர்களைப் பொது வெளியில் அடையாளப்படுத்துவதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் வந்து இம்மாதிரியான அவதூறுகளைச் சுமத்துவது அற்பத்தனத்தின் வெளிப்பாடுதான். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய கதைதான்.!
#itraid
#satturconstuency
#bjp
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-4-2026.
திமுக ஏன் கருப்பு கொடி ஏற்றுகிறது
பெண்களுக்கு பாராளுமன்றத்தில்
33 சதவீதம் இடம் கொடுக்கப் போகிறார்களே அதற்காகவா
அதற்கு சட்டம் இயற்றப் போகிறார்களே அதற்காகவா
மக்கள் தொகை கணக்கெடுப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கின்ற 82 வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்களே அதற்காகவா?
தனக்குத்தானே கருப்புக் கொடி ஏற்றி கொள்கின்ற கட்சி எதையாவது பார்த்திருக்கிறீர்களா?
பெண்களுக்கு எதிரான திமுகவை புறக்கணிப்போம்
மேற்கு ஆசியப் போரால் உலகமே எரிசக்தி நெருக்கடியில் தவிக்கும் நிலையில், இந்திய மக்களை விலைவாசி உயர்வில் இருந்து காக்க, பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுத்த காரணத்தினால் பாரதத்தில் விலைவாசி உயராமல் கட்டுக்குள் உள்ளது.
அறிவிக்கை
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே நியமனம் செய்யப்படுள்ள நிலையில் தற்பொழுது கீழ்க்கண்டவர்கள் கூடுதலாக மாநில செயற்குழுவிற்கு நியமனம் செய்யப்படுகிறார்கள்.
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்!
- மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்கள்
அறிவிக்கை
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பிரிவுகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் ஏற்கனவே நியமனம் செய்யப்படுள்ள நிலையில், தற்பொழுது கீழ்க்கண்ட பிரிவுகளுக்கு கூடுதலாக மாநில அளவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்..
- மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்கள்
அறிவிக்கை
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்கள். தற்பொழுது தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின் படி கீழ்க்கண்ட பொறுப்பாளர்களின் நீக்கம் ரத்து செய்யப்படுகிறது.
- மாநிலத் தலைவர் திரு.@NainarBJP அவர்கள்