நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கண்டிகை அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி நான்கு வெறிபிடித்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது.!
பட்டப்பகலில் அரசுப்பள்ளியின் கழிவறையில் வைத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தியை கூட வெளியே விடாமல் மாணவியின் பெற்றோரை தனிமைப்படுத்தி உள்ளது தவெக அரசு!
இன்று பரப்புரை மேற்கொள்ளும் முதல்வர் இதைக் குறித்து வாய் திறப்பாரா என்று பார்ப்போம்?
திரு @actorvijay அவர்களே இதுதான் உங்கள் ஆட்சியின் அவலம்..!!
காவல்துறை உங்கள் நேரடி கட்டுப்பாட்டில் தான் உள்ளதா? இல்லை சனி ஞாயிறு என்பதால் வார இறுதி விடுமுறை எடுத்து விட்டீர்களா?
பிளாக் டிக்கெட் வித்தவன் போஸ்டர் ஓட்டுனவன் எல்லாம் அமைச்சர் ஆயிட்டான் சரி பரவால்ல நம்ம தலையெழுத்து எதுவும் பண்ண முடியாது.!!
ஆனால் அமைச்சரான பின்னரும் இப்படி போஸ்டர் ஓட்டுறீங்களே டா கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா??
திமுக ஆட்சியில் அம்மாவை தவிர அதிமுக MLA க்கள் எல்லோரையும் சஸ்பெண்ட் செய்த கருணாநிதி, ஒரே ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும் என நினைக்க ஓட்டு மொத்த திமுக ஆட்சியாளர்களையும் ஒற்றை ஆளாக சட்டமன்றம் வந்து கர்ஜித்தார் அம்மா.
அப்பேர்ப்பட்ட சட்ட மன்றம் இன்று தற்குறிகளின் கையில் அதுவும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு பேச டூப் போட்டு பேச வேண்டிய நிலையில் தமிழகம்...
நல்ல மாற்றம் 😡
HELLO பனையூரா!
எப்ப சார் பெரம்பூர் தொகுதிக்கு நன்றி சொல்ல வர்றீங்க!
Content இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு...
நேத்து sunday வேற...
office Leave...
கொஞ்சம் சீக்கிரம் பாத்து பண்ணுங்க சார்!
Sorry For The Disturbance 😊
தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நடத்துவது என்ன மாதிரியான சக்தி?
#ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ @actorvijay?
கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞரை சுத்தி, அம்மிக்கல், பாட்டிலால் அடித்துக் கொன்ற கும்பல்.
‘ஜில்லா’ படத்தில் வரும் போலீஸ் மாதிரி @actorvijay ஒரே நைட்ல எல்லா ரவுடிகளையும் கைது செஞ்சு கிழிச்சுருவாருன்னு நம்பி ஓட்டு போட்டாங்கல்ல மக்கள் அவங்கள சொல்லணும்..!!
#TVKVijayFails
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை தனியாக அழைத்துச் சென்று நாசம் செய்த த.வெ.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள்..!!
கட்சியின் தலைவர் பெண் தோழியுடன் சகஜமாக வலம் வருகிறார்..!!
கட்சியின் தொண்டர்கள் பார்க்கின்ற பெண்கள் மீதெல்லாம் பாய்கின்றனர்..!!
#TVKVijayFails
NARCISSISTIC SPEECH!
இன்றைய முதல்வரின் உரையை குறிப்பிட சரியான வார்த்தை இது தான்!
தான் இருக்கும் பதவிக்கான பொறுப்பை கொஞ்சம் கூட உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?என்னயா புது உருட்டா இருக்கு இதெல்லாம்..?!!
இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே.. இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட உங்கள் முகத்திலோ, பேச்சிலோ கவலை, வருத்தம் தெரிந்ததா? இதை சரிசெய்ய வேண்டும் என்ற Responsibility தெரிந்ததா? இது Narcissism இல்லாமல் வேறென்ன?
“எல்லாத்துக்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்” என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியில் நிதி மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?
இதில், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என கூட்டு சதி செய்தார்களாம், சூழ்ச்சி செய்தார்களாம்… அப்புறம்?
கத்தி பேசுனா, கத்தி பட டயலாக் modulation-ல பேசுனா, பொய் எல்லாம் உண்மை ஆகிடுமா? தான் பேசுவதற்கு ஏதாவது ஆதாரத்தை இன்றைய முதல்வர் காட்ட முடியுமா ?
மாறாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்னே தவெக நடத்தத் துவங்கிய குதிரை பேரத்திற்கு அவர்கள் வெளியிட்ட அமமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் கையெழுத்து வீடியோவே சாட்சி நம்பர் 1!
இவ்வளவு வாய்கிழிய பேசும் மானஸ்தர், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்திய அரசியல் கேவலத்தை (வரப்போகும் வழக்கின் முக்கியமான சாட்சி) பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
எங்களை “மற்றும் பலர்” என்று வாயளவில் சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அஇஅதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்?
ஆனா ஒன்னு…
ரெண்டே பேருக்கு நடுவுல தான் போட்டியே…
எதுல? மக்களை ஏமாத்துறதுல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுல..!!
அதுல நீங்க திமுகவை மிஞ்சி தான் இருப்பீங்க போல!
எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க!
(பி.கு. : நீங்க கோட்டு போடுங்க.. போயஸ் கார்டன்ல வீடு கூட வாங்குங்க… யாரு கவலைப்பட்டா? உலகமே உங்களை சுத்தி தான் இயங்குற மாதிரி சும்மா நசநச ன்னு புலம்பிட்டு இருக்காதீங்க @actorvijay!)
தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் திரு. K.A.S.மகேந்திரன் தனது உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.
கழகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் என்பது அனைத்து தொண்டர்களையும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது என்பது உண்மை தான் என்றாலும், அதற்கு இதுபோன்ற முடிவுகள் ஒருபோதும் தீர்வு ஆகாது.
தியாகம் என்ற பெயரில் எந்த ஒரு தொண்டரும் தன்னை வருத்திக் கொள்வதையோ, உயிரை மாய்த்துக் கொள்வதையோ ஒருகாலும் ஏற்றுகொள்ள முடியாது.
எந்த ஒரு சோதனை என்றாலும் அதை மன உறுதியோடு எதிர்கொண்டு வெல்ல வேண்டும் என்பதே மாண்புமிகு அம்மா அவர்கள் நமக்கெல்லாம் கற்றுத் தந்த நெறி!