தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!
...............................................................
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், துணைத் தலைவர் மு.ரவி சங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் எனது நீண்டகால நண்பர். 2011 முதல் 2016 வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், அவரும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மிகவும் இனிய நண்பரான அவர், இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2026
@CMOTamilnadu@TVKVijayHQ விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் புதுப்பாளையம் கிராமம் பிரசித்தி பெற்ற வேட்டைப் பெருமாள் கோவில் அருகில் 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடை எண்: 12117 கடையை அகற்ற நடவடிக்கை எடுங்கள். ஏனெனில் இந்த ஏரியாவில் மதுபான கடையால் பணிக்கு செல்லும் பெண்கள் பள்ளி குழந்தைகள்பாதிப்பு
தமிழகத்தின் கடன் சுமை 10.7 லட்சம் கோடி
ஆண்டுக்கு வட்டி மட்டும் 70+ ஆயிரம் கோடி
தமிழகத்தில் மாதம்தோறும் ஓய்வூதியம் பெரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் எண்ணிக்கை 600 லிருந்து 650 அவர்கள் பெரும் மாத ஓய்வூதியம் 30000 லிருந்து 35000
தோராயமாக 625*32500 = 2 கோடி - மாதத்திற்கு
கல்லூரி, வணிக வளாகங்கள், கல்குவாரி அரசு காண்ட்ராக்ட் என்று பல தொழில்களை நடத்திவருபவர்களுக்கு இது ஒன்றும் பெரிய தொகை அல்ல. இதை வைத்துதான் அவர்கள் குடும்பம் நடத்த வேண்டியது என்றில்லை. உண்மையில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்தை அரசு தொடரலாம் மற்றவர்களுக்கு மருத்துவ காப்பீட்டை மட்டும் தொடரலாம். ஓய்வூதியத்தை ரத்து செய்வதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 25 கோடிக்கு மேல் மிச்சப்படும்.
வெறும் 25 கோடி தானே என்று அரசு நினைக்காமல் ஒவ்வொரு அரசு துறையிலும் தேவை இல்லாத வேண்டாத செலவுகளை குறைக்க இதை செய்வதே முதல் தொடக்கமாக இருக்கும்! @TVKVijayHQ
"மக்களின் தீர்ப்பை ஏற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தாமல் அழைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்."
தேவையற்ற காலதாமதம் என்பது மறைமுகமாகக் குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்கும் செயலாக முடிந்துவிடும். எனவே, ஆளுநர் அவர்கள் சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் விஜய் அவர்களை முதல்வராகப் பொறுப்பேற்கவும், அமைச்சரவையை அமைக்கவும் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ
புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து.!
உழைப்பின்றி உலகம் இயங்குவதில்லை. ஓரறிவு உயிரினங்கள் முதல் ஐந்தறிவு உயிரினங்கள் வரை அனைத்தும் உயிர் வாழவும், உணவுக்காக மட்டுமே உழைக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் தன் வயிற்றுப் பசிக்காக மட்டுமின்றி, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்காகவும் உழைக்கிறான்.
இருப்பினும், எல்லாக் காலகட்டங்களிலும் மனித வாழ்க்கை அவ்வாறு அமைந்ததில்லை. மிருகங்களைக் காட்டிலும் கொடுமையான வாழ்க்கையைப் பல காலம் அனுபவிக்க நேர்ந்தது. அதிலிருந்து விடுதலை பெற உழைப்பாளிகள் - மனித குலம் விடுதலை பெற பல நூறு ஆண்டுகள் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
1886-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில், பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே, '8 மணி நேர வேலை' என்பது உலகெங்கும் சாத்தியமானது. அந்த மகத்தான நாளையே 'மே தினம்' அல்லது 'உலக உழைப்பாளர் தினம்' எனக் கொண்டாடுகிறோம்.
இந்த மே தின நன்னாளில், தமிழகம் உட்பட உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
01.05.2026
"தமிழகத்தில் பணபலத்தின் மூலம் பட்டப்பகலில் ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்படுகிறது. நவீன ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து தமிழகத்தை மீட்க இன்னொரு சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம்."
தீபக் பாண்டியன் அவர்களின் கொள்கை முழக்கத்தை முன்னெடுத்து, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார் புதியதமிழகம் கட்சி வேட்பாளரும் தீபக்பாண்டியன் அவர்களின் சகோதரியுமான இரா. தமிழ்ச்செல்வி அவர்கள்...
இதோ ஆரம்பிச்சிட்டானுங்க......அரசாணை கொடுத்தோம்னு......
ஏன்டா டேய், தேவேந்திர குல வேளாளர்களை கூட்டணியில் இணைத்துக்கொள்ள விருப்பமில்லை,
தேவேந்திர குல வேளாளர்களுக்கு உரிய விருப்பத் தொகுதிகளைக் கொடுக்கவும் மனமில்லை,
எங்கே தேவேந்திரர்கள் அரசியலில் அங்கீகாரம் பெற்று விடுவார்களோ என்று சூழ்ச்சியும் செய்வாய்,
ஆனால் உங்களுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு மட்டும் வேண்டுமாடா?
எப்படி?? தேவேந்திர குல வேளாளர் அரசாணையை நீங்கதான் கொடுத்தீங்களா? எங்கே வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு நாங்கதான் கொடுத்தோம்னு சொல்லித்தான் பாரேன்...பாமக காரன் உன்னை எதால அடிப்பான்னு அப்புறம் தெரியும்.
ஏன்டா, உங்களுக்கு தேவேந்திர குல வேளாளர்கள்னா காலம் முழுவதும் இலவச வாக்குவங்கியா மட்டுமேதான் இருக்கனுமா? ஏன் எங்களுக்கும் அதிகாரம் வரக்கூடாதா?ஏதோ தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயரையே இவனுங்க தான் கண்டுபிடிச்சேன்னு சொன்னாலும் சொல்லுவானுங்க போல.....
தேவேந்திர குல வேளாளர் மக்களே!
நாம்தான் உஷாராக இருக்கவேண்டும், இனி மீதமிருக்கும் 20 நாட்களும் உங்களை விலை பேச சுற்றி சுற்றி வருவார்கள், ஏதேதோ சொல்லி ஆசையைத் தூண்டுவார்கள்,
இன்னும் டெல்லியில் இருந்து ஒருவர் வேற வருவார்.......
. பாருங்க உங்க பேரும் என் பேரும் ஒரே மாதிரி இருக்குன்னு தேர்தல் வந்தா மட்டும் முழங்குவார், ஆனா பட்டியல் வெளியேற்றம் கேட்டா காது கேட்காது என்பார்.
எனவே நாம்தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து நமது வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் புதிய தமிழகம் கட்சிக்கு செலுத்தவேண்டும்.
1990 - 2000 காலகட்டங்களில் இருந்த ஒற்றுமையை நாம் இப்போதும் காட்டினால் நிச்சயம் நமக்கான அரசியல் அதிகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைக்கப்போவதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது.
சிந்தித்து வாக்களிப்போம்! நமக்கான புதிய தமிழகத்தையும் நாமே படைப்போம்!!
- தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி
2026 – சட்டமன்றத் தேர்தல்
மார்ச் 29, சென்னையில்,
புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
.........................................................
2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21-ஆம் தேதி மதுரையிலும்; 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் & நேர்காணல் கூட்டம் நடைபெற்றது.
கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு, கூட்டணியில் நமது கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளச் சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும், நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே ”உண்மையான அரசியல் வெற்றி” என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு நேர்காணலில் கலந்துகொண்டனர்.
புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு; அத்தொகுதிகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை 29-ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் வெளியிட உள்ளார்கள்.
எனவே, புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஒன்றுபட்டு நின்று, நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்!
- தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
27.03.2026
தென் தமிழகத்தில் @AIADMKOfficial ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெபாசிட் இழந்தது பலவீனமாக உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்,தேவர் ,நாடார்,முத்தரையர்,கோனார்,பறையர் உள்ளிட்ட பெரும்பான்மையான சமூகங்களிடையே எதிரான மனநிலையே அதிமுக மீது நிலவுகிறது.
இத்தகையச் சூழலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது சரியானதாக இருக்குமா? என்று புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளிடையே பேசப்படுகிறது.
குறைந்தபட்சம் பத்து தொகுதிகளிலாவது போட்டியிடாமல், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதால் எந்தப் பலனும் கட்சிக்கு இல்லை என்பதே அரசியல் வட்டாரங்களிலும், கட்சிக்குள்ளும் நிலவும் கருத்தாக உள்ளது.
@AIADMKITWINGOFL
அதிமுகவுடன் கூட்டணிக்கு புதிய தமிழகம் தயக்கம். தென்மாவட்டங்களில் பலவீனம் காரணமா? தென்மாவட்டங்கள் முழுவதும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் @AIADMKOfficial எதிர்கொண்ட கடுமையான பின்னடைவு இந்த தயக்கத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. @EPSTamilNadu@PTpartyOfficial
ஒரு கட்சியை வீழ்த்திவிடலாம் என்று நினைத்துக்கொண்டு, ஒரு பெரும் தமிழ்ச் சமூகத்தையே ஓரங்கட்ட @AIADMKOfficial துடிப்பதையே இச்செய்திகள் வெளிப்படுத்துகிறது
எடப்பாடிக்கு சந்தனப் பிரியாதான் விருப்பம் என்றால் ,அவரை தனது கட்சியில் இணைத்துக்கொண்டு, அனைத்து சமயங்களிலும் அவரது அருகிலேயே கூடவே வைத்துக் கொள்ளலாமே? இதற்கு புதிய தமிழகம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறது?
புதிய தமிழகம் கட்சியை தனிமைப் படுத்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சமூகத்திற்குள் சிண்டு முடிகிற வேலையை அதிமுக நிறுத்தினால் அவர்களுக்கு நலம்
அது எப்படி ? மதுரை விமான நிலையத்திற்கு யாருடைய பெயரையாவது வைக்கச்சொல்லி ஊடகங்களில் பேட்டி கொடுப்பீர்கள்,அதை புதிய தமிழகம் வேடிக்கை பார்க்க வேண்டுமா?
மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தது தேவேந்திர குல வேளாளர் மக்கள்....எம்மக்கள் போற்றி வணங்கும் தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை வைப்பதை விடுத்து ,ஓட்டு அரசியலுக்காக வாய்க்கு வந்ததையெல்லாம் நீங்கள் பேசுவீர்களா?
EPS இல்லத்திற்கு OPS இல்லம் என்று பெயர் வைத்தால் அவர் அதற்கு ஒத்துக்கொள்வாரா?
மதுரை விமான நிலைய பெயர் விஷயத்தில் புதிய தமிழகம் கட்சி என்றும் சமரசமே செய்துகொள்ளாது, தேர்தல் கூட்டணிக்காக எங்கள் கொள்கையை காற்றில் பறக்க விடமாட்டோம்
அப்புறம் கள் இறக்குவதை புதிய தமிழகம் எதிர்ப்பதால் நாடார் ஓட்டுக்கள் விழாதாம்?
அடேய் அறிவுஜீவிகளா! இந்தக் கருத்தைப் போய் நாடார் சமூக மக்களிடமே கேட்டுப்பாருங்கள்..... அவர்கள் கள் இறக்க ஒப்புதல் தருகிறார்களா என்று.
எந்தச் சமூகமும் தனது சந்ததிகள் போதைக்கு அடிமையாகாமல் இருக்கவேண்டும் என்றுதானே விரும்பும்? உங்களின் கருத்து நாடார் சமூகத்தையே இழிவு படுத்துவதாகத்தாகவே இருக்கிறது
இன்றைக்கு நாடார் சமூக மக்கள் தமிழக பட்ஜெட்டையே தீர்மானிக்கும் இடத்திற்கு தங்களது தொழில் திறமை மூலம் நகர்ந்திருக்கிறார்களா? இல்லையா? மீண்டும் அவர்களை பிற்போக்கிற்கு தள்ளுவது நாடார் சமூகத்திற்குச் செய்யும் அநீதி ஆகாதா?
இப்படித்தான் நீட் தேர்வு விஷயத்தில் எங்கள் கருத்துக்களை எதிர்த்து குய்யோ முறையோ என்று கூச்சல் போட்டார்கள், இப்போது அவர்கள் நவ துவுரங்களையும் மூடிக் கொண்டுவிட்டார்களே ஏன்?
ஒரு டாக்டர், கள் மனித உடலுக்குத் தீங்கு என்று ஏன் சொல்கிறார் என்பதை எடப்பாடி யாரிடமாவது கேட்டாவது தெரிந்துகொள்ளலாமே?
எதையாவது குழப்பங்களை விளைவித்து ,புதிய தமிழகம் கட்சியை தனிமைப்படுத்த அதிமுக நினைத்தால்......
ஏற்கனவே கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென் தமிழகம் முழுவதும் டெபாசிட் இழந்த மாதிரியே
நடைபெறப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனது டெபாசிட் டை இழக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
கூட்டணிக்காக அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் வழக்கம் புதிய தமிழகம் கட்சிக்கு இருந்ததே இல்லை....
வெளிப்படையான திறந்த மனதுடன் எங்களை அதிமுக அனுகினால் தேர்தலில் அவர்களையும் வெற்றிபெற வைப்போம்
நயவஞ்சக வேலையைச் செய்தால் அதிமுகவை தென்தமிழகத்தில் தடமே தெரியாமல் அழிப்போம் .....இது உறுதி.....
- தகவல் தொழில்நுட்ப பிரிவு
@PTpartyOfficial
17 வயது பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை!
விளாத்திகுளம் - குளத்தூர் காவல் நிலையம் மெத்தனப்போக்கால் அநியாயமாக இளம்பெண் உயிர் இழப்பு.!
.........................................
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வேடநத்தம் கிராமம் சுப்புராஜ் - காளீஸ்வரி தம்பதியினரின் 17 வயது மகள், நேற்றைய தினம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தனது வீட்டில் இருந்து 200 அடி தொலைவில் உள்ள வயல்வெளிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். வயல்வெளிக்குச் சென்ற மகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உற்றார் உறவினர்களுடன் அவ்வூர் முழுவதும் தேடியுள்ளனர். எனினும் மாணவியைக் கண்டுபிடிக்க முடியாததால், அருகில் உள்ள குளத்தூர் காவல் நிலையத்தில் அம்மாணவியின் தந்தை சுப்புராஜ் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், அவரது புகாரைப் பெற்றுக்கொண்டு மாணவியைத் தேடிக் கண்டுபிடிக்க உரிய முயற்சியை மேற்கொள்ளாமல், அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சொல்லியுள்ளனர். விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்களை அவமரியாதை செய்யும் வகையில் பேசியதோடு, காலை 10 மணிக்கு வருமாறு கூறி அனுப்பிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்கு வேடநத்தம் கிராமத்தின் காட்டு பகுதியில், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளி மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை விளாத்திகுளம் மற்றும் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதே காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தேடியிருந்தால், அந்த மாணவிக்கு நேர்ந்த இக்கொடூரம் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காவல்துறையின் மெத்தனப்போக்கால் 17 வயது மாணவிக்கு இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாங்குநேரி பெரம்பத்தூர் தாக்குதல், மானாமதுரை காவல் நிலையச் சாவு, இன்று விளாத்திகுளத்தில் மாணவி கற்பழித்துக் கொடூரக் கொலை என வன்சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொடூர கொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்து விரைந்து நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
11.03.2026
அதே சிவகங்கை மாவட்டம்......
திருப்புவனம் அஜீத் எப்படி காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டாரோ , அதைப் போன்றே மானாமதுரை ஆகாஷ் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்
சரி, இச்சம்பவங்களிலிருந்து தேவேந்திர குல வேளாளர்களாகிய நமக்கு கிடைக்கப்பெற்ற படிப்பினை என்ன? என்பதைப் பகுத்தாய்வோம்
திருப்புவனம் அஜீத் கொலைக்கு ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள்,சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள் என கண்டனம் தெரிவிக்காத ஆட்களே இல்லை எனலாம்
ஆனால் தற்போது ஆகாஷ் படுகொலைக்கு திராவிட தேசியம் ,இந்து தேசியம், தமிழ் தேசியம் என ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுமே ஒப்புக்கு ஒரு அறிக்கையை கொடுத்துவிட்டு ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுவிட்டார்களே ஏன்?
அப்படியானால் இங்கே நீதிக்கான போராட்டமும் ஜாதியைப் பார்த்துதான் முன்னெடுக்கப்படுமா? என்கிற சிந்தை நமக்குள்ளே இயற்கையாகவே எழவேண்டும் தானே? அப்படி எழாவிட்டால் நாம் இன்னும் அடிப்படை அரசியலைக்கூட கற்றுக்கொள்ளவில்லை என்பதுதானே பொருள்?
இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கும் நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், அப்படி இருக்கையில் இந்த தமிழக கட்சிகள் ஒருவருக்குக் கூட ஆகாஷ் காவல்நிலைய மரணத்திற்கு கடுமையான நடவடிக்கைகளை அரசுக்கு எதிராக மேற்கொள்ளவேண்டும் என்கிற பயமே இல்லாமல் இருப்பது எப்படி?
திருப்புவனம் அஜீத் விஷயத்தில் முதல்வரே அலைபேசியில் அழைத்து அந்தக் குடும்பத்தாரிடம் Sorry கேட்டாரா இல்லையா? ஆனால் ஆகாஷ் விஷயத்தில் ஒரு கண்டிப்போ ,எச்சரிக்கையோ கூட இல்லையே ஏன்?
இன்னும் சொல்லப்போனால் ஆகாஷ் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் மீதும் இன்றுவரை FIR கூட பதிவுசெய்யப்படவில்லையே ஏன்?
தேவேந்திரர்ளுக்கு தேர்தல் நேரத்தில் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்கிற அலட்சியமே இன்றி வேறென்ன?
தேவேந்திர குல வேளாளர்களின் அரசியல் முகவரியாக இருக்கும் புதிய தமிழகம் கட்சி சாத்தான்குளம் பெனிக்ஸ் ,ஜெயராஜ் படுகொலைக்கும் போராடியது, மடப்புரம் அஜீத் மரணத்திற்கும் போராடியதே......நாம் எங்குமே ஜாதியோ மதமோ பார்க்கவே இல்லையே.....
ஆனால் ஆகாஷ் மரணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜாதி பார்த்து கள்ள மௌனம் சாதிப்பதை நாம் என்றுதான் உணரப்போகிறோம்?
நமக்கு ஒரு பாதிப்பு எனில் நாம் மட்டும்தானே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு போராடுகிறோம்....இவர்கள் எத்தனை நாட்கள் போராடி விடுவார்கள்? அடிப்படை வருமானமே இவர்களுக்கு தின வேலைக்கு சென்றால்தானே? ஒருவாரம் கத்திவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்கிற மிதப்புதானே அரசாங்கத்தை அயர்ந்து தூங்க வைத்திருக்கிறது?
இதே போன்று சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் படுகொலை விஷயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து,பாதிக்கப்பட்ட குடும்பங்களை அழைத்துக்கொண்டு சென்னையில் முதலமைச்சரிடம் முறையிடும் வேலையை புதிய தமிழகம் கட்சி செய்துகொண்டிருந்த அதே வேளையில்.....
நம் சமூகத்திலேயே ஊடுருவியிருக்கும் ஒரு சில பிணவண்டிகள் கச்சநத்தத்தில் இறந்தவர்களின் உடல்களைப் பெற்று எரியூட்டும் வேலையை செய்தார்களே..... நீங்கள் அவர்களையும் தலைவராகப் பார்த்தால் எப்படி நமக்கு தீர்வும், நியாயமும் கிடைக்கும்?
நமக்கான குரல் சட்டமன்றத்திலோ ,நாடாளுமன்றதிலோ ஒலிக்காதவரை நாம் தெருவில் இறங்கி கத்திக்கொண்டே தான் இருக்கவேண்டும்
கச்சநத்த பிணவண்டி புரோக்கர் தற்போது மானாமதுரை ஆர்பாட்டக் கூட்டத்திலும் களம் இறங்கியிருப்பதைப் காணமுடிகிறது, எப்போதெல்லாம் நம்முடைய போராட்டம் தீவிரமடைகிறதோ அப்போதெல்லாம் நம் சமூகத்து புல்லுறுவி.... பிணவண்டி புரோக்கர்..... அரசுக்கு ஆதரவாக ஆஜராவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்,
நம்முடைய பெரிய பின்னடைவே மறதி ஒன்றுதான், பிரச்சனை வந்தால் வீதியில் இறங்கி போராடுவது பிறகு அவன் ஏதாவது சொல்வதைக்கேட்டு நம் பிரச்சனையை கண்டுகொள்ளாவனுக்கே ஓட்டுப்போடுவது.........
இதே போன்றுதான் சங்கரன்கோவில் வேன் டிரைவர் முருகன் பொதுமக்கள் முன்னிலையிலேயே போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்...
வழக்கம்போலவே நாமும் பந்தல் அமைத்துதான் போராடினோம், சுற்றுவட்டார கிராமங்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய பேரணியை ீசங்கரன்கோவிலே அதிரும்படி நடத்தியும் காட்டினோம்.......என்ன பயன்? அந்த அரசு அடித்த காவலர்கள் மீது FIR கூட போடவில்லையே? மேலும் அவர்களுக்கே நம் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக வாக்குகளையும் அளித்தனர் என்பதை எவராலும் மறுக்க முடியுமா?
ஏம்பா, துக்க வீட்டில் நின்றுகொண்டு அரசியல் பேசலாமா?என்று நீங்கள் கேட்பீர்களேயானால்,ஆம் வேறு வழியே இல்லை....உங்கள் மறதியை மறக்கடிக்கும்வரை நேரம் காலம் பார்க்காமல் உங்களிடம் உண்மை அரசியலைப் பேசுவதைத் தவிற வேறு வழியே இல்லைதான் திக்கற்ற எம் சொந்தங்களே!!