#JUSTIN | கள்ளக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் தனது வேட்புமனுவை ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்
#SunNews | #Kallakurichi | #Elections2024
தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத ,காவிரியில் தண்ணீர் தர மாட்டோம் என சொல்கிற கன்னடரை தலைவராக கொண்ட கன்னட கட்சி தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்துகிறது இதற்கு பின்னால் எந்த அரசியலும் இல்லை இதை நாங்கள் நம்ப வேண்டும் ?
திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புமகள் சந்தியா, திருநெல்வேலி மாநகரில் உள்ள அழகு நிலைய பொருள் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்த நிலையில், ஒரு தலைகாதல் காரணமாக அதே பகுதியில் பணிபுரிந்து வந்த இளைஞரால் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இளம்பெண்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துவருவது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது.
18 வயது நிரம்பாத இளம் பிள்ளைகள் அதிக அளவில் கொலை செய்யப்படுவதும், கொலை செய்யும் அளவிற்குக் கொடூர குணமுடையவர்களாக ஆகிவிட்டதும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதையே காட்டுகிறது.
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆண்டுவரும் இரு திராவிடக் கட்சிகளின் நெறிதவறிய ஆட்சியால் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை சந்தையாக தமிழ் நிலத்தை மாற்றி நிறுத்தியுள்ளதன் விளைவே தற்போது இளைய தமிழ்ச்சமூகம் சீரழிந்துள்ளதற்கான முக்கியக் காரணமாகும். மதுபானத்தை அரசே விற்கும் திராவிடக் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடே தமிழ்நாட்டில் நடக்கின்ற அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகும். குறிப்பாக, திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்பதே முற்றாகச் சீரழிந்துள்ளது.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டுக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. காவல்துறையைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களே தற்போதைய சட்டம்-ஒழுங்கு சீரழிவிற்கான முழுபொறுப்பையும் ஏற்று, அதனைச் சீர்செய்வதற்கான முயற்சியை இனியாவது துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
ஆகவே, அன்புமகள் சந்தியாவைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், சந்தியாவின் குடும்பத்தினருக்கு துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கலீமா சொல்லாத சீமான் ஒரு பழனிபாபாவாக வந்து நிற்கிறான்!
மார்க்கத்தோடு வாழ்வது எவ்வளவு அவசியமோ, மானத்தோடு வாழ்வதும் அவ்வளவு அவசியம்!
உயிரோடு வாழ்வது எவ்வளவு அவசியமோ? உரிமையோடு வாழ்வதும் அவ்வளவு அவசியம்!
- இமாம் சபியுல்லா
தமிழ் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு
@Seeman4TN#Seeman4TN
ஒரு சந்தர்ப்பத்தை வைத்து, உங்கள் நடத்தையைத் தீர்மானிக்கும் யாரும் நிச்சயம் உங்களுடன் இருக்கத் தகுதியற்றவர்களே!
சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்திக் கொள்வதைவிட, அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை சிறக்கும்!
@Seeman4TN@drramadoss மக்கள் தொலைக்காட்சியின் மூலமாக தானி, பார உந்து, பேருந்து, வானூர்தி, என நிறைய சொற்களை பழக்கத்தில் கொண்டு வந்து ,சன் டிவி ராஜ் டிவி இன்று இருந்த காலத்தில் மக்கள் தொலைக்காட்சி என பெயர் வைத்து தூய தமிழை மக்களிடம் பரப்பியது மிகப்பெரிய தொண்டு!
#ManipurViolence: Was it Tribal Women who Were Stripped Naked? Or Was it Bharat Mata?
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்!
https://t.co/Ws7umpBEdU
தம்பி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அதிகார முறைகேடு!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்
https://t.co/VrVfiJFsIn
#Governor#RNRavi#SenthilBalaji#Tamilnadu#Seeman
நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் பாசறையின் சார்பில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி இன்று திங்கட்கிழமை (12.06.2023) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளிக்கப்பட்டது.
#NTKFights4_TasmacBan#NTK_DemandLiquorFreeTN#ntk#நாம்தமிழர்
இசுலாம் எங்கள் வழி!
இன்பத் தமிழே! எங்கள் மொழி!
என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்!
உண்மையும், நேர்மையும், தூய்மையும், எளிமையுமான மகத்தான அரசியல் தலைவர்!
எங்கள் ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்குப் புகழ் வணக்கம்!
நாம் தமிழர்!
பண்ணைபுரம் தந்த பைந்தமிழ்ப் பாட்டிசை மேதை!
காலத்தைக் கடந்து நிற்கும் காவியப் பாடல்களை உயிர்ப்பிக்கும் தங்கத் தமிழிசையின் தாயகம்!
உலகம் தழுவி தமிழினத்தின் முகவரியைத் தனது தேனிசைக் கரங்களால், தன் ராக வரிகளால் பொறித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன்!
(1/4) @ilaiyaraaja
@NTKSeeman4TN@ilaiyaraaja இசை உலகில் தமிழர்களின் பெருமையை பாருக்கு உணர்த்திய இசை வேதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.