காலம் தந்த கையிருப்பு!
தமிழர் பகை முடிக்க வந்த பெருநெருப்பு!
தலைவர் தந்த தமிழ்க்கொடை!
தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை!
தன்னலமற்ற தூயத்தமிழ்த்தேசிய அரசியல் கொள்கையை உயிர்மூச்சாக கொண்ட எங்கள் கொள்கைத்தலைவன் அண்ணன் சீமான்!
எங்கள் உயிர் அண்ணன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#கொள்கைத்தலைவன்_சீமான்
தமிழ்நாட்டை தமிழர் ஆள்வது அடிப்படை அரசியல் உரிமை Fundamental Political rights என்ற கொள்கை வகுத்த எங்கள் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..
#கொள்கைத்தலைவன்_சீமான்
🔴🟡 Trend Alert
நாள் : 07-11-2024 மாலை 6 மணி முதல்
ஐப்பசி 22 (நவம்பர் 8 )
நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்த நாளுக்கான பொதுவான முகப்புப் படம் மற்றும் கொத்துக்குறி
#கொள்கைத்தலைவன்_சீமான்
என்ற கொத்துக்குறியை பயன்படுத்தி உறவுகள் தங்களது கீச்சு (X) பக்கத்தில் பெருமளவில் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம் .
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.
திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.
சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
செஞ்சி நெல் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12000 நெல் மூட்டைகள் கோடை மழையில் சேதம்.
தமிழ்நாடு அரசு கருணாநிதி அவர்களுக்கு சிலைகள் வைப்பதிலும், நினைவிடங்கள் அமைப்பதிலும் காட்டும் அக்கறையை உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளிலும் காட்ட வேண்டும் .
@mkstalin@Seeman4TN@NaamTamilarOrg
எங்களை விட பெரிய இயக்கம் , எங்களை போல் 40 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் துணிவு வேறு எந்த கட்சிகாவது உண்டா இந்திய நிலப்பரப்பில் .
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
@Seeman4TN#seeman | #NTK |
#சீமானே_எங்கள்_சின்னம்
அறிவிப்பு -
ஆணும் பெண்ணும் சமம் என்கிற விகிதாச்சார அடிப்படையில்
20 பெண் வேட்பாளர்கள் ,
20 ஆண் வேட்பாளர்களோடு
தனித்து களமாடும் ஒரே கட்சியான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்
இன்று 23.3.2024 சனிக்கிழமை
மாலை - 5.00 மணியளவில்
பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை
200 அடி ரேடியல் சாலை
(காவேரி மருத்துவமனை அருகில் )
சென்னை .
#திசையெங்கும்_நாம்தமிழர்
டாஸ்மாக் பொருளாதார கொள்கையை கொண்ட திராவிட கட்சிகளையும், உழலில் திளைத்த ஆரிய கட்சிகளையும் புறக்கணிப்போம்!!தற்சார்பு பொருளாதார கொள்கையை கொண்ட நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்💪 #திசையெங்கும்_நாம்தமிழர்
மது-வை கொடுத்து போதை ஆக்கினான்!!தேவையற்ற இலவசத்தை கொடுத்து சோம்பேறி ஆக்கினான்!!ஓட்டுக்கு காசு கொடுத்து நம்மை அடிமை ஆக்கினான்!!இது தான் ஆரிய, திராவிட கட்சிகளின் அரசியல்.!மாற்றம் தேடி #திசையெங்கும்_நாம்தமிழர்
மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது என்பதை சிந்தியுங்கள்!!இயற்கை வளங்களை காக்கும் நாம் தமிழர் கட்சியின் வாக்களிப்போம்!! #திசையெங்கும்_நாம்தமிழர்