முன்னாள் எல்லை பாதுகாப்பு வீரர், அண்ணனின் மெய்ப்பாதுகாவலர் அமல்ராஜ் அவர்களை அடித்து இழுத்துச் சென்றது காவலர்கள் தான். அதுமட்டுமில்லாமல் எந்த முகாந்திரமும் இல்லாமல், வீட்டின் கதவை எட்டி தள்ளி சட்டவிரோதமாக அத்துமீறிய காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் செய்த அட்டூழியங்களை மறைக்க ஊடகங்கள் (துப்பாக்கி) நாடகம் ஆடுகின்றன.
அண்ணன் வீட்டில் நடந்த முழு காணொளி..
பிரச்சனையோடும், கண்ணீரோடும், மனுக்களோடும் வீதியில் நின்று போராடும் மக்களோடு நான் கூட்டணியில் இருக்கிறேன்.
இங்கு எல்லாத் தலைவர்களையும் ஒரு சாதிக் குறியீடாக நிறுத்தி விட்டார்கள் . நான் தமிழ்த் தாயின் பிள்ளையாகவே இருக்கிறேன். என்னையாவது விட்டு விடுங்கள்.
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN
#Pressmeet
#NTK / #சீமான்
மக்களிடம் செல்! மக்களுடன் வாழு! மக்களிடம் கற்றுக்கொள்! மக்களுக்கு சேவையாற்று என்றார் அறிஞர் அண்ணா.
அரசியலில் ஆடம்பரமும், பட்டோபமும்கூடாது என்றும் அறிவுறுத்தினார் அந்தப் பெருந்தகை. ஆனால், அண்ணாவின் வழித்தோன்றல்களே இன்றைக்கு அரசியலை ஆடம்பரமானதாக்கி, கட்சிகளை நிறுவனமயமாக்கிவிட்டார்கள். அந்த அடிப்படையிலேயே, தேர்தல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்களைக் கொண்டு தேர்தலையும், அரசியலையும் எதிர்கொள்ளும் அபத்தமான முறை இங்கு கையாளப்படுகிறது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை. அதனையே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் வலியுறுத்தினார். அந்த நடவடிக்கைகளை, ‘பணக்கொழுப்பு’ என மொத்தமாகத்தான் வர்ணித்தார். அந்த விமர்சனம் பல நூறு கோடிகளைக் கொட்டி, தேர்தல் நிபுணர்களின் ஆலோசனைக்கேற்ப இயங்கும் எல்லாக் கட்சிகளையும்தான் குறிக்கும். அப்படி பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்கு தவெக எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது?
திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து வாய்திறக்க மாட்டோமென பத்து நாட்களுக்கு மேல் மௌன விரதம் இருந்தவர்கள், இப்போது பொத்தாம் பொதுவான விமர்சனத்திற்குப் பொங்குவதேன்? தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல; வாய்க்கொழுப்பும்கூட! பன்னாட்டு நிறுவனங்களிடமும், தனிப்பெரு முதலாளிகளிடமும்தான் கையேந்தக்கூடாதே ஒழிய, மக்களைப் பொருளாதரத்திற்காகச் சார்ந்திருப்பது ஒரு தவறும் இல்லை. தாங்கள் நம்புகிற அரசியல் வெல்ல வேண்டுமென எண்ணுகிற பொதுமக்கள், தாங்களே விரும்பி அளிக்கிற நன்கொடைதான் திரள்நிதி! தங்களால் களப்பங்களிப்பு செய்ய இயலாதபோது நிதிப்பங்களிப்பு தரும் சனநாயகப் பங்கேற்புதான் திரள்நிதி! திராவிட இயக்கங்கள் தொடங்கி, கம்யூனிச இயக்கங்கள்வரை இந்த முறையிலேயே அமைப்பைக் கட்டியிருக்கிறார்கள் என்பது அரசியல் அறிவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டத்தில் கல்லா கட்டுவதும், திரைப்படத்தின் டிக்கெட்டை பலமடங்கு ஏற்றி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த உறவுகளுக்கும் நினைவூட்டுகிறோம்.
மக்கள் மன்றத்திலேயே பேசத் துணிவற்ற சகோதரர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குப் போய் என்னப் பேசப் போகிறார்? முதலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசட்டும். அதற்குத் துணிவு இருக்கிறதா? உளறிக் கொட்டுவதைப் பற்றி யார் பேசுவது? “சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் போராடினார் அம்பேத்கர்” என மாநாட்டு மேடையில் உளறிக் கொட்டிய சகோதரர் விஜய்யின் தொண்டர்களா? எழுதிக் கொடுத்ததைக்கூட பிழையின்றி பேசாதவர், சட்டமன்றத்திற்குப் போய் பேசி, அரசியல் மாற்றத்தை சாத்தியப்படுத்தப் போகிறாரா? வெட்கக்கேடு!
தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது. நாம் தமிழர் கட்சி வெற்றியை இன்னும் சுவைக்காது இருக்கலாம். ஆனால், உறுதியாக வரும் தேர்தலில் வெல்வோம்! அதேசமயம், எந்த சமரசமும் செய்ய மாட்டோம். ஊழலை ஒழிப்போமெனக் கூறிவிட்டு அதிமுகவோடு உள்ளிட்ட எந்தக் கட்சியோடும் பேச்சு வார்த்தை நடத்தவும் மாட்டோம். குடும்ப அரசியலை ஒழிப்போமெனவும் கூறிவிட்டு, காங்கிரசின் மீது ஒருதலைக் காதல் கொள்ளவும் மாட்டோம்.
நிறைவாக, தவெகவுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு எதிரி நீங்கள் இல்லை. தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள். விழுந்தால், வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல!
சாட்டை துரைமுருகன்,
மாநில கொள்கைபரப்புச் செயலாளர்,
நாம்தமிழர் கட்சி.
24151 வாக்குகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நேர்மையின் பக்கம் நின்று விலைமதிப்பில்லா உங்கள் வாக்கை வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
@NaamTamilarOrg@Seeman4TN
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வழக்குகள் குறித்து நியூஸ் 9 ஆங்கில ஊடகத்தின் நேரடி அமர்வில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெனிஃபர் அவர்கள் பங்கேற்றார்.
@Seeman4TN@NaamTamilarOrg
https://t.co/W9Udps6gtc
பெரியார் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்?
தமிழை தமிழர்களை அழிக்க வந்த ஒருவர்தானே"
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்
@Seeman4TN
கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு, பன்மடங்கு வரியை அதிகரித்து வலுக்கட்டாயமாக வசூலிக்கும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அறநிலையத்துறை, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகள் மற்றும் சிறு கடைகள் அமைத்து, அவற்றையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கு உதவிடும் நோக்கத்துடன், கருணை அடிப்படையில் மிகக்குறைந்த தொகையில் அறநிலையத்துறையின் சார்பாக கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அக்கடைகள் மூலம் அன்றாடம் வியாபாரம் நடத்திக் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழ்ந்துவரும் மக்களிடம், தற்போதைய திமுக அரசு இலட்சக்கணக்கில் வரி கட்டச்சொல்லி மிரட்டுவதும், கடைகளைப் பூட்டி முத்திரை வைப்பதும் பெருங்கொடுமையாகும்.
‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதே இறைநெறி கூறும் அறநெறியாகும். எந்தக் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.
ஆகவே, தமிழ்நாடு அரசு கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையைத் திரும்பப்பெற்று, குறைந்த கட்டணம் வசூலிக்கும் பழைய அரசாணையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்துவதுதான் புரட்சி !
நான் எளிதானதை செய்ய வந்தவன் அல்ல சரியானதை செய்ய வந்தவன் . சரியானது வென்றே தீரும் !
#Seethalaksmi4ErodeEast#NTK#StatusVideo
கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
@CMOTamilnadu | @mkstalin
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு, பன்மடங்கு வரியை அதிகரித்து வலுக்கட்டாயமாக வசூலிக்கும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அறநிலையத்துறை, கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் குடியிருப்புகள் மற்றும் சிறு கடைகள் அமைத்து, அவற்றையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். மக்களுக்கு உதவிடும் நோக்கத்துடன், கருணை அடிப்படையில் மிகக்குறைந்த தொகையில் அறநிலையத்துறையின் சார்பாக கடைகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அக்கடைகள் மூலம் அன்றாடம் வியாபாரம் நடத்திக் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழ்ந்துவரும் மக்களிடம், தற்போதைய திமுக அரசு இலட்சக்கணக்கில் வரி கட்டச்சொல்லி மிரட்டுவதும், கடைகளைப் பூட்டி முத்திரை வைப்பதும் பெருங்கொடுமையாகும்.
‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதே இறைநெறி கூறும் அறநெறியாகும். எந்தக் கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது.
ஆகவே, தமிழ்நாடு அரசு கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையைத் திரும்பப்பெற்று, குறைந்த கட்டணம் வசூலிக்கும் பழைய அரசாணையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி
மதுரை அரிட்டாப்பட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவது, முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை.
மண்ணைக் காக்க தீரத்துடன் ஓரணியில் திரண்டு பேரெழுச்சியாக அறப்போர் புரிந்த மதுரை மக்களுக்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துகள்!
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
@Seeman4TN
#சீமான் / #NTK
#அரிட்டாப்பட்டி
மதுரை அரிட்டாப்பட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவது, முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை.
மண்ணைக் காக்க தீரத்துடன் ஓரணியில் திரண்டு பேரெழுச்சியாக அறப்போர் புரிந்த மதுரை மக்களுக்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துகள்!
🟡🔴 NTK TREND அறிவிப்பு
_கொத்துக்குறி_
#நமது_சின்னம்_மைக்
__________________________________________________________________
நாள் : 20-01-2025
நேரம் : மாலை 05 மணி முதல்
அன்பின் உறவுகளுக்கு வணக்கம்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 2025
நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னம்
வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்களுக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
#நமது_சின்னம்_மைக்
👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்!
@CMOTamilnadu@mkstalin
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அமெச்சூர் கபடி கழகச் செயலாளருமான சகோதரர் ஜகுபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதற்கு சகோதரர் ஜகுபர் அலியின் படுகொலையே மற்றுமொரு சான்றாகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு முற்றுமுழுதாக சீரழிந்துள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு கடன் வாங்குவதிலும், கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், டாஸ்மாக் மது விற்பனையிலும் அதன் காரணமாக நிகழும் சாலை விபத்துகளிலும் தான் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறிநிற்கிறது.
திமுக ஆட்சியில் பெண்கள் - குழந்தைகள் முதல் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஏன் தமிழ்நாடு காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் பெருங்கொடுமை.
கடந்த 2023 ஆம் ஆண்டு மணற்கொள்ளையை தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே மணற்கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது முதல், கடந்த ஆண்டு கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடிய திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது திருமயம் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளது வரை அடுத்தடுத்து படுகொலைகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன.
சமூக அவலங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் திமுக ஆட்சியில் சமானிய மக்களின் நிலை என்ன? கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடுபவர்களை அரசே கைது செய்வதும், கூலிப்படைகள் மூலமாக கொல்லப்படுவதும் தொடர்கதையாகிவிட்ட திமுக ஆட்சி மக்களுக்கானதா? அல்லது கனமவளக் கொள்ளையர்களுக்கானதா? அரசு அலுவலர் முதல் சமூக ஆர்வலர்கள் வரை உண்மையும் நேர்மையுமாக மக்களுக்கும் மண்ணிற்கும் போராடும் போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடலா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் சகோதரர் ஜகுபர் அலி மீது வாகனம் ஏற்றி படுகொலை செய்த குற்றவாளிகளையும், அதன் பின்னணியில் சதிபுரிந்த கனிமவளக்கொள்ளையர்கள் அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
முதன்மைச் செய்தி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 2025
நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னம் ஒதுக்கீடு!
வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர் (M.A, M.Phil.,) அவர்களுக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
இன்று ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட வ உ சி பூங்கா நுழைவாயிலில் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் மா கி சீதாலட்சுமி அவர்களை முன்னிறுத்தி மக்கள் பார்வைக்கு பதாகையோடு நின்ற நமது தொகுதி பொறுப்பாளர்கள் 😎💥
#erodebyelection#ஈரோடுகிழக்கு#Erodeastntk