மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கலை - இசை - பண்பாடு - இலக்கியம் - ஓவியம் போன்றவற்றை அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையிலான ‘ஆதிக்கலைக்கோல்’ பயிற்சி பட்டறையை சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி வைத்தோம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதிக் கழகம் சார்பில் நடத்தப்படுகிற இந்த பயிற்சி பாசறை வெல்லட்டும் என வாழ்த்தினோம்!
எளிய மக்களின் கலை - இலக்கியம் - பண்பாட்டை போற்றுவோம். அவற்றை உலகெங்கும் எடுத்துச் செல்வோம்!
@thamoanbarasan@MMathiventhan@ilaiyadmk #LakshmipriyaIAS
🗓️இன்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 95-வது பிறந்தநாள்.
🤝அரச குடும்பத்தில் பிறந்தாலும் அடித்தட்டு மக்களின் விடுதலை குறித்தே சிந்தித்தவர், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனையைப் போற்றியவர் வி.பி.சிங்.
💗முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் நம் கழகம் மீதும் மாறாத அன்பு கொண்டவர். கலைஞரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவத்தைத் திரும்பப்பெற்றவர், காவிரி நடுவர் ஆணையம் அமைத்தவர்.
🧨மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசு பணியிடங்களில் 27% இட ஒதுக்கீடு அளித்து சமூகநீதிச் சாதனையை நிகழ்த்தியவர். அதனாலேயே மதவாத பா.ஜ.க பாபர் மசூதி பிரச்சினையைக் காரணம் காட்டி அவர் ஆட்சியைக் கவிழ்த்தது.
📖கலைஞரைப் போலவே வி.பி.சிங் அவர்களும் இலக்கியவாதி. இறுதிவரை மதவாதத்தை எதிர்த்த, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னை மாநிலக்கல்லூரியில் சிலை அமைத்தார் கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் போற்றுவோம்!
#vpsingh #SocialJustice #HBDVPSINGH
உழவர் பெருங்குடி மக்கள் வரவேற்க, வேளாண் கண்காட்சி - கருத்தரங்கம் 2025-ஐத் தொடங்கி வைத்து, ஈரோடு மாவட்டத்தில் -
ரூ.175.23 கோடி செலவில் 16 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து,
11 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
4524 பயனாளிகளுக்கு, ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்!
உழவே தலையென வாழும் உழவர் மேன்மையுற இந்த மண்ணை வளப்படுத்துவோம்!
@MRKPanneer