‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
“வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவுசெய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்துகொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும்"
-தந்தை பெரியார்
(குடி அரசு, 7.2.1948)
#வெல்லும்_சொல்
கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், தமிழக இளைஞர்களின் நம்பிக்கை, அண்ணன் மாண்புமிகு @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற நெகிழ்வான நேரத்தில்..
விடுதலைப் போராட்ட வீரர், கொடிகாத்த குமரன் அவர்களின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவர் வாழ்ந்த இல்லத்தில் உள்ள திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, இல்லத்தையும் பார்வையிட்டோம்.
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சியில் உள்ள சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமையலறையுடன் கூடிய இருப்பு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
#திராவிட_மாடல்#திமுக