Producer, Director, Actor - MOODAR KOODAM, KOLANJI, ALAUDHININ ARPUTHA CAMERA, AGNI SIRAGUGAL. strongly believe ‘It's better to travel well than to arrive’. DS
HAPPY BIRTHDAY LENI❤️
And Congratulations 👍🏿👏🏿👏🏿
மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் இரண்டு தங்கங்கள் வென்று எங்களை பெருமை படுத்தியுள்ள என் கடைக்குட்டித் தாக்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️❤️❤️❤️❤️
#HappyBirthdayLeni
பாரதிராஜா போன்ற ஒரு இமயம் மறைவதில்லை. காலமுள்ளவரை அவர் படைப்புகளில் நம் சிந்தனைகளில் நம் ரசனையில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். What an enviable journey!!!!
#BharathirajaForever
சிறுவயதில் கடவுளிடம் மண்டியிட்டு மன்றாடி கேட்டேன். கிடைக்கவில்லை!
ஒரு வீட்டு வாசலில் நின்று அம்மா தாயே என்று கத்தி கத்தி பிச்சையெடுத்து கொண்டிருந்தவனிடம், பக்கத்து வீட்டுக்காரர் சொன்னது காதில் விழுந்தது
“யாராவது இருந்தாதானடா நீ கத்தறது கேக்கும்! அது ஆளில்லாத வீடு ”
#Enlightment
விரகடுப்பை ரொமாண்டிசைஸ் செய்யும் இன்றய நவநாகரீக ஆண்கள், அதன் கஷ்டம் என்ன என்பதை அன்று அடுப்பூதிய பெண்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். என் பாட்டியின் விரகடுப்பில் ஊதாங்குழல் ஊதி, நாதக்கமலத்தில் புகை சென்று, மூச்சு முட்டி இருமிய சிறுவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.
தாடி வைத்தவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாகவும், இஸ்லாமியர்களெல்லாம் பாக்கிஸ்தான்பயங்கரவாதிகளாகவும் தெரியும் தங்களுக்கு, தங்கள் கட்சியிலுள்ள இஸ்லாமியர்களும் அவ்வண்ணமே தெரிகிறார்களா? நீங்கள் தமிழ் தேசிய போர்வையில் பார்ப்பன கடப்பாரை ஏந்துவதைவிட, RSS யூனிபார்மிலேயே வலம் வரலாம்.
பாக்க பாகிஸ்தான் ப***யங்கரவாதி மாதிரி இருக்கான்
நாய் election வந்துட்டா யாரு ரொட்டி போடுவான்னு திரியும் போல!
தனித்து நின்னு, ஓட்டுக்கு காசு கொடுக்காம மக்களிடம் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கிற கட்சியை விமர்சிக்கிறான்னா இவன் எவ்வளவு பெரிய எச்சையா இருப்பான்! நாய்! 😡😡😡
தந்தை பெரியார் மாற்றுக்கருத்துகளையும் விமர்சனங்களையும் நாகரிகமாக எதிர்கொண்டவர். பொதுக்கூட்டங்களில் எல்லோரையும் கேள்வி கேட்க வாய்ப்பளித்தவர். அப்படி கேள்வி கேட்ட பார்ப்பனர் ஒருவருக்கு பென்சில் உடைந்தபோது அவருக்கு பென்சில் தந்தவர். தன் மனைவி குறித்த ஆணாதிக்கத் திமிருடன் ஒருவர் கேள்வி கேட்டபோது பதட்டமின்றி பதில் தந்தவர். தன்னைவிட எவ்வளவோ வயது குறைந்த ஜெயகாந்தனுக்கு மாற்றுக்கருத்துகளை முன்வைக்க மேடை தந்தவர்.
அப்படிப்பட்ட பெரியார் குறித்து அவதூறுகள் முன்வைக்கப்படும்போது அதை கருத்தியல்ரீதியில் எதிர்கொள்வதுதான் பெரியாருக்கு பெருமை சேர்க்கும். எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களின் மனைவி குறித்து பாலியல் அவதூறு செய்வது, எதிர்க்கருத்துகளை முன்வைப்பவர் மீது செருப்பை வீசி எறிவது பெரியாருக்குப் பெருமை சேர்க்காது.
Persecuted ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டது போல், persecuted Brahmins அமெரிக்கா எனும் சேரியிலும் காலனியிலும் தள்ளப்பட்டனர். இங்கு தெருவில் நடக்க முடியவில்லை சட்டை போடமுடியவில்லை என்று ஒடுக்கப்பட்டதால், அமெரிக்கா சென்றவர்கள். அந்தோ பரிதாபம்!!
உழைக்கும் வர்க்கம் இருக்கும் இடமெல்லாம், 8 மணி நேர வேலை போனஸ் பென்ஷன் இருக்கும் இடமெல்லாம், உரிமைக்குரல் இருக்கும் இடமெல்லாம், சமத்துவம் உலாவும் இடமெல்லாம், மார்க்சுக்கு நன்றிக்கடன்பட்ட சம்பந்தப்பட்ட இடங்களே!!!
#KarlMarx#RedSalute
என் மகள் ‘சிவீன்’ #TerrorTamer என்ற தலைப்பில் #TEDtalk. அச்சத்தை வெல்வது எப்படி என்று speech கொடுத்தபடி, அவள் அச்சத்தை வெல்ல கற்றுக் கொள்ளும் தருணம் இது. இவ்வுலகே எதிர் நின்றாலும், ஒற்றை ஆளாக பயம் தவிர்த்து, அதை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளும் தருணம் இது.
https://t.co/mvWQdXdJtT
கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பெண்களின் உடையிலும் தொடையிலும் வைப்பது ஒரு பண்பட்ட வளர்ந்த நாகரீகத்தின் அடையாலமல்ல. பெண்களின் உடைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டுவிட்டு, சாமனியர்கள் மீது சுமத்தப்படும் ஆதிக்கங்களை விமர்சிப்பதும் எதிர்ப்பதுமே நம்மை நக்ர்த்திச் செல்லும்.
பராசக்தி பார்த்துவிட்டு பலர் என்னிடம் பகிர்ந்தது. “மொழிப்போர் என்பது மொழிப்பற்று மொழிவெறி காரணமாக நடந்தது என்று நினைத்திருந்தோம். சாமானியர்களின் முன்னேற்றம் அதில் அடங்கியுள்ளது என்பதை இப்போதான் உணர்கிறோம்”.
#ParasakthiBlockbuster#தீபரவட்டும்
ஹிதாயத் உங்கப்பன் பேரு உருது மொழியாடா என்று ஏளனம் செய்வோர்க்கு. அது என் அம்மா பெயர். அது அரபு மொழி. இங்கு சமஸ்கிருத பெயர்கள் வைத்துகொண்டும் தமிழ் பற்று பேசலாம், அரபி ஆங்கில பெயர்கள் வைத்துகொண்டும் தமிழ் பற்று பேசலாம். தமிழர் அடையாளம் ஒரு மதத்திற்குள் அடங்குவதல்ல.