ைகுண்ட ஏகாதேசி ஸ்ரீரங்கம் செல்லும் பக்தர்களுக்கு வசதி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஶ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நாளை 9ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் இரு மார்க்கத்திலும் 16101/16102 கொல்லம் மெயில் மற்றும் 12633/12634 கன்னியாகுமரி அதிவேக விரைவு ரயில் தற்காலிகமாக நின்று செல்லும் என அறிவிப்பு.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த பெண்
குஜராத் காட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேரை கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 18 வயது இளம் பெண்; ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் உதவியுடன் மீட்புப்பணிகள் தீவிரம்.
போராட்டம் நடத்தியதால் வழக்கு!
அண்ணா பல்கலை வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் 161 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்கு.
நேபாளத்தில் நிலநடுக்கம்!
நேபாளத்தின் கோகர்னேஷ்வர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவு; டில்லி, பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது.
இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடுவிப்பு
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்த உறுதுணை புரிவதற்காக மாவட்ட அளவில் செயல்பட்டு வந்த மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாணவர்கள் நலன் கருதி மாற்றுப் பணியில் இருந்து விடுவிக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு .இந்த பணியினை மேற்கொள்ள இல்லம் தேடிக் கல்வியில் நன்கு ஆர்வம் உள்ள தன்னார்வலர் ஒருவரை மாதம் ரூ., 12,000 மதிப்பு ஊதியத்தில் நியமிக்க ஆணை.
*பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும்- தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்*
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-எச்.எம்.பி.வி. வைரஸ் புதிது அல்ல. இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 2001-ம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நோய்த்தொற்றுகள் சுயக்கட்டுப்பாடு, உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்வது, ஓய்வு எடுப்பது உள்ளிட்ட கவனிப்புடன் சரிசெய்யப்படுகின்றன.தற்போது சென்னை, சேலத்தில் தலா ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது நிலையாக இருக்கின்றனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளில் பெரிய அளவில் பாதிப்புக்கான அறிகுறி இல்லை.மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அனைத்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் தமிழ்நாடு சார்பில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எச்.எம்.பி.வி. வைரஸ் நிலையாக இருக்கிறது என்றும், அதுகுறித்து பீதி அடையவேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கு போன்ற தடுப்பு நடவடிக்கைதான் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றுக்கும் உள்ளது.இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாக்கர் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
04--01--2025
மார்கழி மாதம் 20 தேதி சனிக்கிழமை
❤️ இடையன் விளை
அருள்மிகு ஸ்ரீ பேரழகன் மன்னராஜா சுவாமி திருக்கோவில் காலை 8 மணிக்கு அசைவ சமபந்தி விருந்து
❤️(10 கிடா 🙏
❤️ வெள்ளையன் தோப்பு
அருள்மிகு ஸ்ரீ வேம்படி சுடலை ஆண்டவர் திருக்கோவில் காலை 7 மணிக்கு அசைவ சமபந்தி விருந்து
❤️(1 கிடா 🙏
❤️ சோட்ட பணிக்கண் தேரிவிளை
அருள்மிகு ஸ்ரீ பல வேச சேர்வைக்கார சுவாமி திருக்கோவில் காலை 8 மணிக்கு சிற்றுண்டி மதியம் 1 மணிக்கு சமபந்தி விருந்து 🙏
❤️ தெங்கம் புதூர்
வடக்கு அஞ்சு குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ ஓடக்கரை இசக்கி அம்மன் திருக்கோவில் மண்டல பூஜை திருவிழா மதியம் 1 30 மணிக்கு சமபந்தி விருந்து 🙏
❤️ சொத்த விளை
அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் மண்டல பூஜை விழா மதியம் 1 30 மணிக்கு சமபந்தி விருந்து 🙏
*விக்கிரவாண்டியில்* தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பொது நிவாரண நிதியில் இருந்து ₹3 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவு
"அமைச்சர் துரைமுருகன் வீட்டில் 2 கதவுகள் உடைப்பு"
வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் தொடரும் அமலாக்கத்துறை சோதனை
சாவி இல்லாததால் உளி மற்றும் சுத்தியை பயன்படுத்தி 2 கதவுகள் திறப்பு.
டில்லி, பெங்களூரில் விமானங்கள் தாமதம்
கடும் பனிப்பொழிவால் டில்லியில் 90க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதம். பெங்களூரில் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்.
கேஸ் டேங்கர் விபத்து
லாரி டிரைவர் கைது!
கோவை கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் ராதாகிருஷ்ணன் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
பக்தர்கள் பஸ் கவிழ்ந்து விபத்து
திருக்கோவிலூரை அடுத்த அருதங்குடிபுதுரில், மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் படுகாயம்.