செப்டம்பர் 5 ஆசிரியர் நாள் வரப் போறது. இப்போது முதலே கொண்டாடலாமா?
வெரியர் எல்வின் (Verrier Elwin) பற்றி ட்விட்டர் குறிப்பு:காட்டின் நடுவே பள்ளி திறந்த மானுடவியல் அறிஞர் வெரியர் எல்வின். ஆங்கிலேயராகப் பிறந்தவர், இந்தியப் பழங்குடி மக்களின் வாழ்வில் ஊன்றி வாழ்ந்தவர். மத்திய இந்தியாவின் காடுகளில் கோண்டு, பைகா மக்களிடையே ஆசிரமம் அமைத்து, குழந்தைகளுக்குப் பள்ளி தொடங்கினார். அவர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், கல்வி கொடுக்கவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். பழங்குடி உலகை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.
#வெரியர்எல்வின் #காட்டுப்பள்ளி
பெத்லகேம் குடும்ப யூனிட் | சிரிப்பும் சின்னச் சின்ன உணர்வுகளும்!
எளிய கதை + சிறந்த நடிப்பு + மென்சிரிப்பூட்டும் தருணங்கள் = குடும்பத்துடன் சங்கோஜமின்றிக் காண, ஒரு இயக்குநரின் படம். அதில் நன்கு நடிக்கத் தெரிந்த நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இந்தக் குடும்ப யூனிட் தரும் டானிக்!
Bethlehem Kudumba Unit | lighter Laughter and little feelings.
Simple story + fine acting + quietly funny moments = a director’s film you can watch with family, no awkwardness. The real tonic? Actors who actually know how to act in romantic comedy of Gen Z's.
visit and read the full review in 2 minutes: https://t.co/ASKnMV0Rcv
#BethlehemKudumbaUnitreview #NivinPauly #MamithaBaiju
சென்னையின் ஒரே பெரிய வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு உங்கள் குழந்தைகளுடன் ஒருமுறை விசிட் அடித்துப் பாருங்கள்: 3 கோடியில் உருவாக்கப்பட்ட அந்தப் பூங்காவில் என்னவெல்லாம் பார்க்கலாம் என்பதை இணைப்பில் சென்று வாசியுங்கள்:
https://t.co/0TwVNh7q2D
#Chennaibutterflypark#vandalur
NEET 2027 உயிரியல்: 360/360 மதிப்பெண் பெற 10 'ஸ்மார்ட்' சூத்திரங்கள்!
தமிழ் - ஆங்கில ஆகிய இரண்டு மொழிகளிலும் வாசியுங்கள். 3 நிமிட வாசிப்பு. இணைப்பில் வாருங்கள்..
#NEET2017
https://t.co/PcImPfNrp8
'அமரம்’ படத்தை தவறவிடாதீர்கள்!
3 நிமிடத்தில் முழு விமர்சனத்தையும் வாசித்துவிடலாம்.
ஒரு சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என்பது வெறும் இரண்டு மணி நேரக் கதை மட்டுமே அல்ல. அதுவொரு முழுமையான திரை அனுபவம். பார்வையாளர் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, கதை மட்டும் நினைவில் நிற்காது; அது கொடுத்தனுப்பும் உணர்வில், ஒரு நிலப்பரப்பும் அங்கு வாழு மனிதர்களும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நாம் அறிந்திராத வாழ்க்கையும் இருக்கும். இதுபோன்ற படங்களில் ஒளிப்பதிவும் இசையும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும். இந்தப் பிணைப்புக்கு முதல் தேவை அழுத்தமான கதைக் கரு.
அடுத்து அந்தக் கருவைத் தாங்கி நிற்கும் திரைக்கதை தேங்காமல் ஓட வேண்டும். நாயகன்-நாயகி மட்டுமல்ல, துணைக் கதாபாத்திரங்களும் முழுமையுடனும் சர்வைவலுக்காக ஓடுகிறவர்களாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நடிகர்கள் அந்தப் பாத்திரங்களாகவே மாற வேண்டும். ஏற்கெனவே இயற்கையும் நிலப்பரப்பும் ஒரு முக்கிய கதாபாத்திரம் போல் பேச வேண்டும். பின்னணி இசை கதையின் பாதியைச் சொல்ல வேண்டும். இவை ஒன்ற��சேரும்போதுதான் ஒரு படம் உண்மையான பொழுதுபோக்குப் படமாகவும் ஒரு முழுமையான திரையரங்க அனுபவம் தரும் சினிமாவாகவும் உயர்கிறது.
- இந்த அம்சங்கள் அனைத்தையும் ‘அமரம்’ படத்தில் கண்டு உணர முடிந்தது! எப்படியென்று பார்க்கலாம் வாருங்கள்.
https://t.co/3t5Zq56UUX
#Amaram #Amarammoviereview @TejeshRajan @rcinemas23 @am_vkrish @barathkumar2705 @BalajiSura @tridentartsoffl @MangoMusicLabel
@prosathish
data shows that the high-risk decisions driven by the desire for quick profits are often ending in significant financial losses for this group. The number of investors under the age of 30 in the Indian stock market is increasing much faster than expected. https://t.co/wZg6wm1hmq
த லாஸ்ட் அவுஸ்: நெட்ஃபிளிக்ஸ் | திரைக்கதையின் பொறுப்பின்மைக்கு இவ்வளவு வரவேற்பா?
நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் ஒரிஜினல் ஆங்கில உள்ளடக்கங்களி���் ஒன்றாக கடந்த 7ஆம் தேதி வெளியாகியுள்ளது The Last House (2026) திரைப்படம். ஒரு சாதாரண குடும்பத்தின் வீட்டை ‘பாதுகாப்பான இடம்’ என்பதிலிருந்து சில தீய சக்திகளின் ‘கண்ணி’யாக மாறும் சுவாரஸ்யமான கதைக் கருவை மையமாகக் கொண்ட ‘சயின்ஸ்-பிக்’ ஹாரர் முயற்சி.
ஒரு நாள் திடீரென, உலகமே மர்மமான சக்தியால் முடக்கப்பட்டதுபோல், ஒரு குடும்பம் அவர்களுடைய வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது. வெளியே செல்ல முடியாது, ஜன்னல்களைத் திறக்க முடியாது, தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன. குறைந்து கொண்டே வரும் உணவு, த��்ணீர், மனஅழுத்தம் ஆகிய சிக்கல்களோடு போராடிக் கொண்டு உயிர் பிழைக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இந்த சற்றும் எதிர்பாராத ‘லாக்டவுன் ஹாரர்’ அமைப்பு, கோவிட் கால அனுபவங்களை நினைவூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனால்...
எனது முழுமையான விமர்சனத்தை வாசிக்க வாருங்கள். https://t.co/fgFsT7VSFa
#Thelasthouse #Netflix #OTTmovie
ராம் லீலா விமர்சனம் (சிறிய அளவில் ஸ்பாய்லர்கள் உள்ளடங்கியது. எனினும் கதை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. வாசி��்பதும் தவிர்ப்பதும் உங்கள் விருப்பம்)
காதல், சூழல் நகைச்சுவை (சில இடங்களில் அடல்ட் நகைச்சுவையும் தூவப்பட்டுள்ளது), அறிவியல் புனைவு - இந்த மூன்றையும் ஒன்றாகக் கலக்க முயலும் திரைப்படங்கள் தமிழில் அரிது. அதேபோல் மனிதக் கதாபாத்திரங்களும் வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரங்களையும் தமிழில் முயன்ற முதல் படம் என்றால் அது ‘அயலான்’. இப்போது ‘ராம் லீலா’. அந்த முயற்சியில்தான் இயக்குநர் ரா���ச்சந்திரன் கண்ணன் இயக்கிய ‘ராம் லீலா’ திரைப்படத்தைச் சராசரிக்கும் சற்று மேலே கவனத்தை ஈர்க்க வைக்கிறது.
30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத இளைஞன் ராம்( ரியோ), அவரது காதல் தேடல் , அதற்குள் நுழையும் ஒரு அசாதாரண ஆனால் அழகான பெண்ணும் அவளின் குடும்பமும் என இந்தப் படம் கொண்டுள்ள தொடக்கும் மையத் திருப்பமும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ஆனால், படத்தின் தொடக்கம் பல படங்களில் பார்த்துப் ���ழக்கப்பட்ட ஒரு ரொமான்டிக் காமெடி தளத்தில் சின்னச் சின்ன சிரிப்புகளோடு நம்மை இழுத்துச் செ��்கிறது. ஆனால், திரைக்கதையில் இந்த மென்மையான தொடக்கப் பயணம் திடீரென ஒரு வித்தியாசமான ‘டாப் கியர்’ திருப்பத்தில் வேகமெடுக்கிறது. அறிவியல் புனைவையும் காதலின் உணர்வையும் இணைக்கும் அந்தத் திருப்பமும் அதில் கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்துக்கு இயக்குநர் தரும் சுவாரசியமான, நம்ப வைக்கும் அனிமேஷன் பின்னணியும் படத்தை மனத்தடங்கள் இன்றி தொடர வைக்கிறது. அந்த வகையில் இது தனித்த அடை���ாளத்துடன் தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு புதிய முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
ரியோ ராஜ் நடித்திருக்கும் ராம் கதாபாத்திரம், இன்றைய நகர இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. காதல் தேடலில் தோல்வி அடையும் அவனது முயற்சிகள், குடும்பத்தின் அழுத்தம்—இவை அனைத்தும் சிரிப்பூட்டும் தருணங்களாகவே முதல் பாதியில் நகர்கின்றன. உள்ளூர் மின்சாரத் தொடர் வண்டியில் லீலாவை (வர்ஷிகா) சந்திக���கும் தருணத்திலிருந்து கதைக்கு வேகம் கிடைக்கிறது. வர்ஷிகா சென்னையில் வாழும் ஒரு ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது நிறம், கண்கள், தோற்றம் எல்லாமே அவரது கதாபாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. க��ாநாயகியைத் தேர்வு செய்த விதம் படத்துக்கு பலம். வர்ஷிகா, லீலாவாக, அமைதியான கவர்ச்சியுடன் திரையில் தோன்றுகிறார், பின்னர் தன்னுடைய காதலைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். “மாலை 6 மணிக்குப் பிறகு என்னை வீட்டில் எங்கேயுமே விடமாட்டார்கள் என அவர் கூறுவதற்கான காரணத்தை நாம் அறியும்போதுதான் அந்த அறிவியல் புனைவின் மர்மம் வெளிப்பட்டு, இனி இந்தப் படத்தில் காண என்ன இருக்கப் போகிறது என்கிற எண்ணத்தைப் படம் தருகிறது.
இடைவேளைக்குப் பிறகு கதை எடுக்கும் இந்தத் திருப்பமே இந்தப் படத்தின் பலமும் பலவீனமும் ஆகிறது. லீலாவும், அவளது குடும்பமும் வேற்றுக் கிரகவாசிகள், தவிர, மாலை நேரத்திற்குப் பிறகு லீலாவுக்கு ஏற்படும் மாற்றம் என்ற கருத்தாக்கம், தமிழ் சினிமாவில் அரிதாக முயலப்பட்ட ஒன்று. திரைக்கதையின் முக்கியத் திருப்பத்துடன் இந்��� இரண்டாவது திருப்பம் அறிவியல் புனைவுக் களத்தில் இரண்டாம் பாதிப் படத்தை மேலும் சுவாரசியமாக நடத்திச் செல்கிறது. அதேநேரம், இந்த இரண்டாம் திருப்பம் கதைக்குத் தனித்தன்மை கொடுத்தாலும், திரைக்கதை அதை முழுமையாகவும் சீராகவும் கையா��்வதில் இயக்குநர் இன்னும் கூடுதலாக ‘இன்புட்’களைப் பெற்று திரைக்கதை வலிமையாக்கியிருக்கலாம். இந்த போதாமையே இரண்டாம் பாதிப் படத்தின் சில இடங்களில் கதையின் ஓட்டத்தைத் தடுமாறச் செய்கிறது.
சூழல் நகைச்சுவை இப்படத்தின் முக்கிய அம்சம். ரியோ அதை உணர்ந்து தன் உடல்மொழியில் ஒரு நவீன வைகைப் புயலைக் கொண்டு வர முயன்றுள்ளார். குறிப்பாகக் கிராமத்தில் ராமின் மாமா வீட்டில் நடக்கும் திருமண��் காட்சிகள், குழப்பமான சூழ்நிலைகள், கதாபாத்திரங்களின் அதிரடி எதிர்வினைகள், ஆகிய நன்றாகவே நன்றாகவே சிரிக்க வைக்கின்றன. முனிஷ்காந்த், சூப்பர் சுப்பராயன் போன்ற துணை நடிகர்கள் சுவாரஸ்யமான நிமிடங்களை உருவாக்கிவிடுகிறார்கள். அதே சமயம், சில நகைச்சுவை ஐடியாக்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ‘கேக்’களாக மாறி சோர்வூட்டுகின்றன. இந்த சீரற்ற தன்மையே புதிய கதைக்களத்தில் பயன்படுத்தப்படும் சூழல் நகைச்சுவையின் தாக்கத்தைச் சற்றே குறைக்கிறது.
ரியோவின் காமெடி டைமிங் பல இடங்களில் வேலை செய்கிறது. ஆனால், அவரது கதாபாத்திரம் எப்போதும் அதிக சத்தத்துடன் உலா வருகிறது. எனக்கு இந்த உணர்வு ஏற்பட்டது. சிலருக்கு அது த���ன்றாமலும். லீலாவாக வரும் வர்ஷிகா ஜெயின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்புடன் ஒரு இனிய சூழலை ‘ராம் லீலா’ உலகில் உருவாக்கி விடுகிறார். ராமின் தங்கையாக வரும் தீபா வெங்கட், இவர்களின் பெற்றோரான சேத்தன், மாளவிகா அவினாஷ், ராமின் நண்பனாக வரும் பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் ‘ராம் லீலா’வின் உலகைத் தங்கள் நடிப்பால் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், வழக்கமான ரொமான்டிக் காமெடியில் ஒரு வித்தியாசமான, புதுமையான அறிவியல் புனைவு ஐடியாவை சேர்க்க முயன்று அதில் 80 விழுக்காடு வெற்றிபெற்றுவிடுகிறார். அதன் மூலம் அவர் பாராட்டுக்குரியவர். ஆனால், இந்தப் புதுமையை ஒரே சீராகக் கொண்டு செல்லும் திரைக்கதையில் அவர் இன்னும் உழைத்திருந்தால் கிளைக் கதைகளில் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும். எனினும், இரண்டாம் பாதியின் இறுதிப் பகுதியில் கதை மீண்டும் சுறுசுறுப்பைப் பெற்றுவிடுகிறது. குறிப்பாகக் கடைசி அரைமணி நேரம், எதிர்பாராத திருப்பங்களால் விறுவிறுப்பாக மாறுகிறது.
தொழில்நுட்ப ரீதியாக படம் நிறைவு தரக்கூடியதாக உள்ளது. வண்ணமயமான ஒளிப்பதிவு, ��ென்மையான இசை ஆகிய அனைத்தும் படத்தின் தங்கு தடையிட்ட ஓட்டத்துக்கு ஏற்றவையாக இருக்கின்றன. காதல் காட்சிகளில் நாயகன்-நாயகியின் இணைவும் இணக்கமும் நன்றாகவே வேலை செய்திருக்கிறது.
மொத்தத்தில், ‘ராம் லீலா’ ஒரு பாதுகாப்பான ரொமான்டிக் நகைச்சுவையாகத் தொடங்கி, துணிச்சலான அறிவியல் புனை திருப்பத்துடன் வேறுபட முயலும் தமிழ்ப்பட முயற்சி. அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை என்றாலும், அசலான சிரிப்பூட்டும் தருணங்கள், புதுமையான கதைக்கரு, மற்றும் இறுதிப் பகுதிகளில் கிடைக்கும் விறுவிறுப்பு இவற்றால் இப்படத்தை மனத்தடையின்றிக் குடும்பத்துடன் கூட ‘ஒருமுறை பார்க்கலாம்’ என்ற தகுதியை ராம் லீலா பெற்றுவிடுகிறது.
மதிப்பெண் 3.3/5
ஐந்து பேர் கொண்ட 'நியூஸ் ஃபெல்ட்' https://t.co/M5L6h5Sek6 குழுவினரின் விமர்சனம் முதன்மை ஆசிரியர் சோழ யாழினியால் தொகுக்கப்பட்டுள்ளது.
#RamLeela #RamLeelaReview #TamilMovieReview #Kollywood #RioRaj #VartikaJain #RomCom #SciFiTamil #TamilCinema #KollywoodMovies #MovieReviewTamil #TamilFilm #CinemaReview #TamilAudience #MovieLovers #WeekendWatch #TamilMovies2026 #NewRelease #FilmCritics #IndianCinema
சென்னை வாசி GenZ's மறந்தும் நேரு ஸ்டேடியம் பக்கமாக நாளைக்கு போயிடாதீங்க.. செண்ட்ரல் பெரியமேடு வழியா வடசென்னை போறவங்க மாலை மணி 5 முதல் 8 மணிவரை வேற வழியை தேர்ந்தெடுங்க.. வயலென்ஸ் சாம்பிக் கூட்டம் சங்கமிக்கும் நேரம்..
#Chennai#ToxicPreRelease#YASH
A proud moment for Tamil Cinema
Just watched ‘ONE’, a remarkable Tamil film by Sangagiri Rajkumar, who has written, directed, acted in every character, and single-handedly handled almost every department of the filmmaking process.
What makes ‘ONE’ truly special is that it tells an engaging story for audiences of all ages while delivering a meaningful takeaway. More than a film, it feels like an extraordinary one-man cinematic endeavour that deserves to be seen and celebrated beyond Tamil cinema.
Now, I sincerely hope our Tamil cinema mass heroes and celebrated filmmakers watch ‘ONE’ and speak about it without ego or hesitation. Only then can such an audacious, sincere and quality-driven effort reach a truly global audience.
Don’t miss this, film lovers. Take your children along. ‘ONE’ deserves to be seen. ❤️
#ONE #ONETheMovie #TamilCinema #SangagiriRajkumar #TamilFilm #IndependentCinema #IndianCinema #FilmLovers #SupportGoodCinema
வரலாற்றுப் பிழையில்லாமல் ‘வேள் பாரி’யை எடுப்பீர்களா?
தமிழ் சினிமாவின் பெருந்துயரம் என்னவென்றால் வரலாற்றை திரித்து வரலாற்றுப் படங்களை எடுப்பது. ‘வேள் பாரி’ தொடராக வந்தபோது அதில் வரலாற்று ரீதியாக பல திரிபுகள் (நாவலாசிரியரின் கற்பனை மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை) இருந்தன என அசலான தம��ழ் வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்தை வெறும் காட்சிகளால் மட்டுமல்ல, சிறந்த அறிவியல் புனைவு என்பதை எதிர்காலக் கண் கொண்டிருந்த சிறந்த கற்பனையாலும் கட்டமைத்த இயக்குநர் நீங்கள். ‘வேள்பாரி’ - உங்கள் நீண்ட நாள் கனவுத் திரைப்படம். ஒரு மாபெரும் தமிழ் வரலாற்றுப் படைப்பை உலகத் திரையில் அதன் வரலாற்று உண்மைகளுடன் நீங்கள் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே தமிழ் ரசிகர்களின் விரும்பம். அதற்காக சிறந்த வரலாற்றாசிரியர்களை அருகில் வைத்து திரைக்கதை எழுதி முடித்தபின் ‘கிராஸ் செக்’ செய்துகொள்ளுங்கள்.
‘வேள்பாரி’ திரையில் பிறக்கும் நாளை எதிர்பார்ப்போம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷங்கர் சார்.. @shankarshanmugh @LycaProductions #shankarcinimeticuniverse
#Shankar #வேள்பாரி #Velpari #ShankarBirthday #TamilCinema #தமிழ்சினிமா