தென்னங்குரும்பை மிகவும் கடினமான ஒன்று. இந்த வீடியோவில் காண்பிப்பது போல் வெகு எளிதாக, பிரயத்தனம் செய்யாமல் அதனுள் ஊசியை சொருக இயலாது. மேலும் விரலால் ஊசியை மறைத்து வெகு எளிதாக மருந்தை பீய்ச்சி அடிக்கிறார்கள். குரும்பையின் மேல்புறத்தில் அந்த திரவம் பரவியிருப்பதையும் பார்க்க முடிகிறது. சென்ற கோடையில் தர்பூசணி பழங்களின் வியாபாரத்தை சுகாதார அலுவலரின் பரிசோதனை என்ற முறையில் சீரழித்தார்கள். தற்போது இளநீருக்கு வந்து விட்டார்கள். இதில் விவசாயியின் நிலை தான் பரிதாபம்.