#possiblelove
Burning படத்துக்கு பிறகு எட்டு வருட இடைவெளியில் Lee Chang dong இயக்கியிருக்கும் படம் . Venice Film Festival 2026 ல் Silver Lion – Grand Jury Prize வென்ற இந்த படம் இப்போது Netflix ல் வந்துருக்கு.
வேலை இழந்த ஒரு தொழிற்சாலை ஊழியரும் அவரோட மனைவியும் ஒரு பக்கம். வசதியான வாழ்க்கை வாழும் ஒரு Documentary இயக்குநரும் அவரோட கணவரும் இன்னொரு பக்கம்.
ஒரு Documentary படப்பிடிப்புக்காக இந்த இரண்டு ஜோடிகளும் சந்திக்குறாங்க. கேமரா ஓடத் தொடங்கியதும், இரண்டு வாழ்க்கைகளுக்கும் இடையிலான வர்க்க வேறுபாடுகள், புதைந்து கிடக்கும் ஆசைகள், உறவுகளுக்குள் இருக்கும் விரிசல்கள் என எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பிக்குது. திருமணம், உழைப்பு, பணம், சுயமரியாதை என்று பல விஷயங்களை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பேசுது படம்.
Jeon Do yeon, Seol Kyung gu, Jo In sung, Jo Yeo jeong என நான்கு பேர் Performance ம் கதையை அழகாக நகர்த்தி செல்கிறது.
Lee Chang dong படங்களின் தனித்துவமே கதாபாத்திரங்களை நல்லவர், கெட்டவர் னு பிரிக்காமல், அவங்கவங்க பலவீனங்களையும் வலிகளையும் புரிஞ்சுக்க வைக்கிறது தான். இந்த படத்திலும் அதே அணுகுமுறைதான். பெரிய வசனங்களோ, அழுகையோ, கத்தலோ இல்லாம ஒரு பார்வையிலும் அமைதியிலும் கதாபாத்திரங்களின் மனநிலையை நமக்கு கடத்திடுறார்.
நிறைய உரையாடல்கள், நிதானமான திரைக்கதை னு படம் நகர்கிறது. பெரிய திருப்பங்கள் னு எதுவும் இல்லை. சில இடங்களில் ஒரு சின்ன பார்வைக்கு பின்னால் இருக்கும் அர்த்தம் கூட இரண்டு சீன்கள் கழிச்சுத்தான் புரியும். Micro aggression, தவறான புரிதல்கள், சொல்லப்படாத ஆசைகள் னு உறவுகளுக்குள் இருக்கும் நுணுக்கமான விஷயங்களை எழுத்திலும் காட்சிகளிலும் மிக அழகாக கொண்டு வந்துருக்கார் இயக்குநர்.
வேகமான திரைக்கதையையும், சுவாரஸ்யமான திருப்பங்களையும் எதிர்பார்க்குறவங்களுக்கு படம் கொஞ்சம் சோதனையாக இருக்கும். . Parasite மாதிரியான ஒரு Stylish படத்தை எதிர்பார்த்து போனா ஏமாற்றம்தான். இது முற்றிலும் வேறொரு அனுபவம். Lee Changdong படங்களை பழகியவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். மற்றவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொஞ்சம் பொறுமையாக பார்க்கலாம்.
இது இரண்டு ஜோடிகளின் கதை மட்டுமில்ல. காதல் என்பது உண்மையிலேயே சாத்தியமா? அப்படியே இருந்தாலும், பணம், வர்க்கம், சமூக அந்தஸ்து, சுயமரியாதை இவற்றுக்கு நடுவில் காதலுக்கு எவ்வளவு இடம் இருக்குது ன்ற கேள்விகளை நமக்குள்ள விதைச்சுட்டு போற படம்.
படம் முடிஞ்சதும் அந்த தலைப்பின் அர்த்தம் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்.
#Ranabaali - Average ⭐️ ⭐️ ✨ (2.5/5)
OTT : Netflix
Tamil Dub : ✅
வரலாற்றுப் பக்கங்களை ஆராய்ந்து, அதைத் திரை வடிவில் நமக்குச் சொல்ல முயற்சித்திருக்கும் படம்…
1870-ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.
கதை ரொம்ப சாதாரணம்தான். நம்மிடம் இருக்கும் நெல் மணிகளைப் பறித்து லண்டனுக்குக் கொண்டு செல்ல பிரிட்டிஷ்காரர்கள் செய்யும் சதித் திட்டங்களை நாயகன் எப்படித் தடுத்து நிறுத்துகிறான் என்பதுதான் படத்தின் கதைக்களம்.
இயக்குநரின் முயற்சிக்குப் பாராட்டுகள். கதைக்களம் நன்றாக இருக்கிறது, ஒளிப்பதிவும் சிறப்பு 👌🏻 ஆனால், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இந்த மாதிரியான கதைக்களத்துக்கு மூன்று மணி நேரம் தேவையா?
படம் முடிஞ்சு போச்சுனு TV-யை OFF பண்ணப் போனா, மறுபடியும் Chapter 6 ஓடுது! டேய், நான் சுகர் பேஷண்ட் டா… 😭😭😭
ஒரே Repeat Mode-ல ஆக்ஷன் காட்சிகள். வில்லன் ஆளுங்க வராங்க, ஹீரோ தீட்டுன கத்தியை வச்சு கோழிக்கறி வெட்டுற மாதிரி வெட்டிக்கிட்டே இருக்காரு. ஒரு கட்டத்துக்கு மேல முடியல சாரே 😢😢
விஜய் தேவரகொண்டா அந்தக் காலத்து ஹீரோ கணக்கா வாட்டசாட்டமாக இருக்கிறார். ஒரே குறை அவரோட Reaction தான். சுத்தமா பார்க்க முடியல! அவர் கோபப்படும் காட்சிகளெல்லாம் நமக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்குது பாருங்க.
ரஷ்மிகா வரும் சில காட்சிகள் ஓகே.
பஞ்சம், பட்டினியால் பல பேர் இறக்கிறாங்க. ஆனால், அதை பார்க்கும்போது நமக்குத்தான் எந்த வருத்தமும் வரவில்லை.
Mummy-யை வில்லனாகக் கூட்டிட்டு வந்து, கடைசியில் டம்மி வில்லனாகவே ஆக்கி வச்சிருக்காங்க!
முதல் பாதி ஓரளவுக்கு நன்றாக இருக்கேனு சொல்ல வச்சிட்டு, இரண்டாம் பாதியில் நம்மளையே டயர்டு ஆக்கிட்டாங்க.
மொத்தத்தில், நல்ல கதைக்களம் இருந்தும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் சோதிக்கும் ஒரு சராசரியான வரலாற்றுப் படம்.