இன்று (19.07.26), ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் அமைக்கப்பட்டுள்ள SC/ST தொழில்முனைவோருக்கான ஆயத்தநிலை வசதிகள் கொண்ட தாட்கோ தொழில் பூங்காவில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தற்போது அங்கு நடைபெற்று வரும் குடிநீர் பணி, வடிகால் பணி, தெருவிளக்கு, நுழைவுவாயில் முகப்பு, காவலர் தங்கும் அறை, அணுகு சாலை, சுற்றுச்சுவர் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
அத்துடன், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து, பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி பணியாற்ற வேண்டும். குறிப்பாக ஹெல்மெட் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
@tahdco
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
இன்று (19.07.26), மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள், சமூக நீதித்துறை சார்ந்த ஆய்வு பணிக்காக ஈரோடு சென்ற போது, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. @Balajierodetvk அவர்களையும் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் @arunraajkg அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
- திருவள்ளுவர்
எல்லா உயிர்களும் பிறப்பால் சமமானவை. அவர்களின் உயர்வு, தாழ்வு என்பது பிறப்பால் அல்ல; என்பது வள்ளுவரின் வாக்கு
கடந்த 30.05.26 அன்று, கோவை மாவட்டத்தில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள், சமூகநீதி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, 'தீண்டாமை வன்கொடுமை காரணமாக தங்கள் பகுதிக்கு பேருந்து இயக்கப்படுவதில்லை' என்று தொண்டாமுத்துார் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பனுார் அண்ணாநகர் பகுதி மக்கள் மாண்புமிகு நமது அமைச்சர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்திற்குட்பட்டு அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுங்கள் என்று மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் பல ஆண்டுகள் கழித்து, கடந்த மாதம் கெம்பனூர் அண்ணாநகர் வரை எண். 21 பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.
இன்று (18.07.26), மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து தொண்டாமுத்தூர் கெம்பனூர் முதல் அண்ணா நகர் வரை இயக்கப்பட்டு வரும் எண். 21 பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
@tvksampathcbe
#TNGovt #officeofsocialjusticeminister #socialjusticeministervanniarasu
திண்டிவனம் - ரோஷனையில் அமைந்துள்ள தாய்த் தமிழ் பள்ளியில் பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்கள் ஒருங்கிணைத்திருந்த 'காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள்' நிகழ்வில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் இன்று (18.07.26) பங்கேற்றார். இந்நிகழ்வில் ஒலக்கூர் - மயிலம் - மரக்காணம் ஆகிய ஒன்றியங்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்தினார்.
#TNGovt #socialjusticeministervanniarasu #ministervanniarasu
இன்று(18.07.26) பிறந்த நாள் காணும்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @BussyAnand அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை
தொலை பேசி வாயிலாக
தெரிவித்தேன்.
மிக்க பண்பாடுள்ள மனிதர்.
எல்லோரையும் அரவணைக்கும் மாண்பு என செயற்படும்
தாங்கள் பல்லாண்டு வாழ்க.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #ministervanniarasu
திண்டிவனம் – தாய்த் தமிழ் பள்ளியில் இன்று (18.07.2026) காலை நடைபெற்ற காமராசர் பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வைத் தொடர்ந்து, மாண்புமிகு சமூகநீதி அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்களிடம் தொகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், அவை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
திண்டிவனம் - ரோஷனையில் அமைந்துள்ள தாய்த் தமிழ் பள்ளியில் பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்கள் ஒருங்கிணைத்திருந்த 'காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள்' நிகழ்வில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் இன்று (18.07.26) பங்கேற்றார். இந்நிகழ்வில் ஒலக்கூர் - மயிலம் - மரக்காணம் ஆகிய ஒன்றியங்களில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்தினார்.
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
நேற்று (17.07.26), சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள, சமூகநீதித்துறை கீழ் இயங்கும் எம்.சி.ராஜா சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியிலும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத் குமார் அவர்களும் மற்றும் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்களும் உடனிருந்தனர்.
@CMOTamilnadu
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
நேற்று (17.07.26), சென்னை வருகை தந்த மாண்புமிகு ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு. @RamdasAthawale அவர்களை மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் அரசு விருந்தினர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அத்துடன்,
1. பட்டியலின மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் & போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கை உரிய நேரத்தில் விடுவிக்க வேண்டும்
2. பட்டியலின மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் & போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக அதிகரிக்க வேண்டும்
3. விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை கீழ் வழங்கப்படும் Maintenance படியை உயர்த்தி வழங்க வேண்டும்
4. பட்டியலின மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றிய அரசு திட்டமான PM-AJAY கீழ் நிலுவையில் உள்ள ரூ.154.08 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்
5. சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1955 மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.61 கோடி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும்
6. தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகங்களின் பெயர்களில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றுவதற்கு, உரிய சட்ட நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை நமது சமூக நீதித்துறையின் சார்பில் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. அதாவலே அவர்களிடம் வழங்கினார்.
நமது கோரிக்கைகளை கவனத்தோடு கேட்டறிந்த மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. அதாவலே அவர்கள், துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து நல்லதொரு முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், இச்சந்திப்பின்போது சமூக நீதித்துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் உடன் இருந்தார்.
@RamdasAthawale
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
நேற்று(17.07.26), சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள, சமூகநீதித்துறை கீழ் இயங்கும் எம்.சி.ராஜா சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியிலும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத் குமார் அவர்களும் மற்றும் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்களும் உடனிருந்தனர்.
@CMOTamilnadu@tvksampathcbe
#TNGovt #officeofsocialjusticeminister #socialjusticeministervanniarasu
நேற்று (15.07.26) திருச்சி - பஞ்சப்பூர் பகுதியில் சமூகநீதித்துறையின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி மாணவர் விடுதி பணிகளை மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்ததோடு, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மாணவர்களின் பயன்பாட்டுக்கு விடுதியை கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
நேற்று (15.07.26) திருச்சி - கண்டோன்மென்ட் பகுதியில், சமூகநீதித்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி மாணவியர் விடுதியில், மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், விடுதி மாணவிகளோடு இரவு உணவு உண்டு, அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#TNGovt #socialjusticeministervanniarasu #ministervanniarasu #officeofsocialjustice
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தம்பி திரு. லயோலா மணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வித் துறையில் புதிய, நல்ல மாற்றங்களை கொண்டு வருவார் என்று தம்பி மீது நம்பிக்கை உள்ளது.
- @VanniTamizhVCK
சமூகநீதித் துறை அமைச்சர்
தமிழ்நாடு
(File Photo)
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister #ministervanniarasu
10.07.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளிமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேல்தேவனூர் என்ற குக்கிராமத்தில் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர்
திரு. @VanniTamizhVCK அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அக்கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்தார்.
#TNGovt #socialjusticeministervanniarasu #ministervanniarasu #officeofsocialjusticeminister
09.07.26 அன்று கள்ளக்குறிச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் மாண்புமிகு சமூகநலத்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, விடுதியில் உள்ள வசதிகள், உணவின் தரம் மற்றும் குறைகளை கேட்டறிந்ததோடு, விடுதியிலிருந்து கல்லூரிக்கு செல்வதற்கு பேருந்து வசதி வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
#TNGovt #socialjusticeministervanniarasu #ministervanniarasu
நேற்று (12.07.26) விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகே உள்ள அயன்ரெட்டியபட்டியில், ‘சமூகநல கூடம்’ அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிலத்தை மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு உறுதி செய்தார்.
மேலும், நூலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு நீண்டகாலமாக பயன்பாட்டுக்கு வராததை பொதுமக்கள் நமது அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, உடனே அதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
#TNGovt #socialjusticeministervanniarasu #ministervanniarasu
இன்று (12.07.26) விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வட்டம், மேலப்புதூர் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசனார் கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழாவில் மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்தினார்..
#TNGovt #socialjusticeministervanniarasu #ministervanniarasu