தமிழ்நாட்டின் வளமான இளைஞர்கள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள திருச்சியில் கலைஞர் நூலகம் & அறிவுசார் மையம்!
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னேற ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்!
வளமார் சிந்தனைகளும் வளம் தரும் உட்கட்மைப்புகளும் என நமது #1TrillionUSD பொருளாதார இலக்கை நோக்கி விரைந்து நடைபோடுவோம்!
தலைவர் கலைஞரின் மனசாட்சியான பெரியவர் #முரசொலிமாறன் அவர்களின் வழியில் சமூக நீதிக்கான குரலாக, நாடாளுமன்றத்தில் முழங்கும் கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் அருமை அண்ணன் மாண்புமிகு @Dayanidhi_Maran MP அவர்கள், கழகத் தலைவரால் கழக மக்களவைக் குழுத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் 🌄 எப்போதும் போல அடிச்சி ஆடுங்க அண்ணா 😍🌄🔥
ஜூன் 15 - கோவையில் முப்பெரும் விழா!
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா!
மகத்தான வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா!
உழைப்பை வழங்கிய உடன்பிறப்புகளுக்கான பாராட்டு விழா!
கழகக் கூட்டங்களும் விழாக்களும் கூடிக் கலையும் நிகழ்வுகள் அல்ல; அடுத்த களத்திற்கான ஆயத்தப் பயிலரங்கங்கள்!
வாருங்கள் உடன்பிறப்புகளே… 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்திற்குத் தயாராவோம்!
https://t.co/KLYiRyZeZG
#LetterToBrethren
வலுவான கூட்டணி~
வெற்றி கூட்டணி -
தர்மபுரி வெற்றியே சான்று.
40/40
தலைவர் தோழர் திருமாவளவன் @thirumaofficial அவர்களை சந்தித்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்த இனிய நிகழ்வு.
நன்றி 😊🙏
💙🖤❤️
*கழகத் தகவல் தொழில்நுட்ப அணி நாள்*
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கவனத்தில்கொண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடனும், கழகத் தலைவர் திராவிட நாயகன் அவர்களின் முயற்சியாலும் உருவாக்கப்பட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி இன்று (ஜூன் 12) 8ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் கழகம் பெற்று வரும் மாபெரும் வெற்றிகளுக்குத் துணை நின்று, தலைவர் அவர்களின் கட்டளைக்கேற்பவும், இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு இளைஞர்நலன் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்பவும் சமூக வலைத்தளத்திலும் நேரடியாகக் களத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது🙏🏾
என்ன செய்கிறது ஐ.டி.விங் என முந்தைய காலங்களில் கேட்கப்பட்டாலும், என்னவெல்லாம் செய்கிறது பார் ஐ.டி.விங் என்று எதிரணியினர் பதறும் வகையிலான சம்பவங்களை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் கழகத் தலைமையின் அறிவுறுத்தலுக்கேற்பவும், கழக நிர்வாகிகளின் ஒத்துழைப்புடனும் ஐ.டி.விங் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது🎊
கழகத் தலைவர் திராவிட நாயகன் அவர்கள் ஒவ்வொரு நாளும் களத்தின் நிலவரத்திலிருந்து வியூகம் அமைத்து தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டதை இலட்சக்கணக்கான மக்கள் நேரில் கேட்டனர். அதுபோலவே கழகத்தின் இளந்தலைவைர்-இளைஞரணிச் செயலாளர் அவர்கள் முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் மோசடிகளை அம்பலப்படுத்தி, திரண்டிருந்த மக்களிடம் கலந்துரையாடும் வகையில் பரப்புரை செய்தார்🔥
தமிழ்நாட்டு வாக்காளர்களைக் குறிப்பாக, பெண் வாக்காளர்களைப் பெரிதும் ஈர்த்த இந்த பரப்புரைகளை கோடிக்கணக்கான மக்களிடம் சமூக வலைத்தளம் வாயிலாகக் கொண்டு சேர்த்து, தேர்தல் களத்தின் போக்கைத் தீர்மானிப்பது (narrative setting) தி.மு.க தலைமைதான் என்பதை கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் பணி உறுதி செய்தது. தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து இதனை வைரலாக்கியது. ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் ஆலோசனைகள் மேற்கொண்டு அவற்றை செயல்படுத்திய தோழமைக் கட்சிகளின் சமூக வலைத்தளப் பொறுப்பாளர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றி. தேர்தல் களத்தில் எதிரணியின் கதறல்களே நமக்கான நற்சான்று 🌟
நாற்பதுக்கு நாற்பது என்ற கழகத் தலைவர் திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இலக்கினை முழுமையாக எட்டும் வகையில் 24 மணி நேரமும் உழைத்த கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர், ஆலோசகர்கள், மாநில துணைச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உள்ள அணியின் அனைத்து நிர்வாகிகளின் அயராத உழைப்பிற்கு மிகப் பெரிய நன்றி தெரிவித்துப் பாராட்டுகிறேன். கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் #Wing2point0 வுடன் இணைந்து கழகக் கூட்டணியின் பெரும் வெற்றிக்காக சமூக வலைத்தளத்தில் களமாடிய தன்னார்வலர்களான உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி 🌄🙏🏾
சமூக வலைத்தளம் என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் என்பது போல கழகத்தின் மூத்த முன்னோடிகள் பலர் வரலாற்றுத் தரவுகளுடன் தேர்தல் வெற்றிக்கானப் பதிவுகள் போட்டுக் களமாடி, இளைய தலைமுறைக்கு இணையாக சமூக வலைத்தளங்களில் செயல்பட்டது பெரும் ஊக்கமளித்தது.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நாற்பதுக்கு நாற்பது என்ற கழகத் தலைவரின் இலக்கை வெற்றிகரமாக அடைய உழைத்தது போல, அடுத்து நாம் எதிர்கொள்ளவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கழக அணி முழுமையான வெற்றி பெறுவதற்கும், 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக கழகத் தலைவர் திராவிட நாயகன் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் வகையில் அவர் தலைமையிலான தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கும் நம்முடைய உழைப்பை, தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கப்பட்ட இந்த நன்னாளிலிருந்தே நாமும் தொடங்குவோம்.
எதிரணியினரின் பொய்ப் பரப்புரைகளுக்குப் பதிலடி தந்து, திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அவை எளிய மக்களை அதிகம் சென்று சேரும் வகையில் யூ-டியூப் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அணியின் நிர்வாகிகள் முனைப்பாக செயல்பட வேண்டுகிறேன்.
எதிர்வரும் களங்கள் அனைத்திலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் கழகத் தலைவர் அவர்களின் கட்டளைப்படி, இலக்கை நோக்கி பாயும் கணைகளாக செயல்படுவோம். வாழ்த்துகள் 🌄🙏🏾
#DMKITWing #DMK
இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்!
உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்!
அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்!
எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கிச் சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்!
Strongly condemn Union BJP Minister @ShobhaBJP's reckless statement. One must either be an NIA official or closely linked to the #RameshwaramCafeBlast to make such claims. Clearly, she lacks the authority for such assertions. Tamilians and Kannadigas alike will reject this divisive rhetoric of BJP.
I also urge for an appropriate legal action against Shobha for causing threat to peace, harmony and national unity.
From the Prime Minister to cadre, everyone in the BJP should stop engaging in this dirty divisive politics at once.
ECI must take note of this hate speech and initiate stringent action immediately.
#எல்லோருக்கும்_எல்லாம்
161 பொதுக்கூட்டங்கள்,
90 பேச்சாளர்கள்,
இலட்சக்கணக்கான மக்கள்!
தமிழ்நாட்டை வளமாக்கும் நமது #TNInclusiveBudget-ஐ விளக்கும் பொதுக்கூட்டங்கள்!
#DravidianModel நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனைகளைத் தோலுரித்த நமது பேச்சாளர்கள்!