முன்னாள் பிரதமர், பாரத் ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் நினைவு ஜோதியை கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு KV தங்கபாலு அவரகள் முன்னிலையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தலைநகர் தில்லியில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கும் எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச்செயலாளர் திரு. கே.சி. வேணுகோபால், திருமதி. பிரியங்கா காந்தி ஆகியோரின் வாழ்த்துகளை பெற்று இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு. எம்.எஸ். திரவியம் அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் வருகை தந்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ், துணைத் தலைவர்கள் திரு. உ. பலராமன், திரு. ஆ. கோபண்ணா, மகிளா காங்கிரஸ் தலைவர் திருமிகு சுதா ராமகிருஷ்ணன், SC துறை தலைவர் திரு MP ரஞ்சன்குமார் பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்ஜீவி, திரு. எஸ்.ஏ. வாசு, வட. சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திரு. ஜெ.டில்லிபாபு MC சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. சிவராஜசேகரன் MC, சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் இன்று வரை மணிப்பூர் செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை நாட்டில் ஒரு பகுதியாக மணிப்பூர் இல்லை.
மணிப்பூரில் இந்தியாவைக் கொன்று விட்டீர்கள்.
மணிப்பூரை இரண்டாகப் பிரித்து விட்டீர்கள் -நீங்கள் பிரித்து விட்டீர்கள்.
நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேச துரோகிகள். - திரு @RahulGandhi
பாஜக, ஊடகங்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நாம் நேசிக்கும் நாடு முழுவதும் வெறுப்பு மண்ணெண்ணையை ஊற்றியுள்ளனர்.
அன்பினால் மட்டுமே வெறுப்பின் நெருப்பை அணைக்க முடியும்.
- திரு @RahulGandhi
2 மாதங்களாக வன்முறை நீடித்துவரும் மணிப்பூர் மாநிலத்திற்கு ஜூன்29,30 தேதிகளில் செல்கிறார் தலைவர் @RahulGandhi
இவர்தான் மக்களின் பிரதமர் !!!
@narendramodiஎன்கின்ற கேடி அதானி அம்பானியின் வேலைக்காரன்,அவனுக்கு நாடு அழிந்து போனால் என்ன #அதானி#அம்பானி குடும்பம் நன்றாக இருந்தால் போதும்
மத்திய பிரதேசத்தில் #பாஜக_எம்எல்ஏ 400_கார்களில் பேரணியாக சென்று காங்கிரஸில் இணைந்தார்..!!
காங்கிரஸை நோக்கி படையெடுக்கிறது #பாஜக_நிர்வாகிகள் கூட்டம்...!!
#RSS_கூட்டம் இந்தியாவை விட்டு ஒழிகிறது என அர்த்தமோ..!!
I thank all the leaders of our Secular Progressive Alliance for having registered their protest against the Union BJP Government's blatant misuse of investigating agencies for political ends.
The unity and solidarity shown in Coimbatore today will spread everywhere and shake the foundation of BJP's invincible 'image' constructed by false narratives.
BJP has realised that an impending defeat stares them in the face. To hide the failures of BJP, it is resorting to acts of cowardice and arrogance, instead of fighting the opponents politically. The coming together of opposition all over India will be the final nail in the coffin of 'autocratic' BJP.
அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி!
இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும்.
வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்.
தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடி சமூகங்களில் இருந்து இந்திய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவதை மோடி அரசு உறுதி செய்துள்ளது போல் தெரிகிறது.
புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் திரு கோவிந்த் அழைக்கப்படவில்லை... 1/4
கர்நாடகாவின் நம்பிக்கை மிகுந்த பெண்களுடன் BMTC பேருந்தில் பயணம் செய்து சிறந்த பெங்களூரு அனுபவத்தை பெற்றேன்.
5 காங்கிரஸ் உத்திரவாதங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
: திரு @RahulGandhi
திருமாவை தூற்றும் நாய்களா..!!
நீங்க எல்லாம் நிம்மதியா சோறு சாப்பிடுறீங்க டா..!!
பாருங்கடா உட்கார்ந்து கூட சாப்பிட நேரம் இல்லடா..!!
மனசாட்சி இல்லாத சங்கி பசங்களா..!!
தன் வாழ்க்கையே அர்ப்பணித்து விட்டார் டா உங்களுக்காக தான்டா பரதேசிங்களா..!!
பெறுதல்
ஆசிரியர் அவர்கள்,
தினமலர் நாளிதழ்,
சென்னை.
அன்புடையீர்,
வணக்கம். நேற்றைய (7.5.2023) தினமலரில் பேச்சு, பேட்டி, அறிக்கைகள் என்ற பகுதியில் மதுவிலக்கு குறித்து நான் கூறிய கருத்துகளுக்கு ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறீர்கள். பொதுவாகவே உங்களுடைய செய்தித்தாளில் வருகிற ஒரு பகுதி தான். அது பல நேரங்களில் சுவைப்படவும் இருக்கும்.
தமிழக காங்கிரசின் சார்பாக மதுவிலக்கை பற்றி நான் கூறியிருந்த கருத்துகள் தமிழக காங்கிரசிற்கு பொருத்தமானது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, காங்கிரஸ் ஆளுகிற பல மாநிலங்களில் மதுக்கடைகள் நீக்கப்பட்டு மதுவிற்பனை நடைபெற்றது. ஆனால், தொடர்ச்சியாக இந்தியாவில் குஜராத் மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் அந்த மாநில அரசுகள் மதுவை அனுமதிக்காமல் இருந்தார்கள். பெருந்தலைவர் காமராஜரிடம், பிற காங்கிரஸ் மாநிலங்களில் மதுவை அங்கீகரிக்கிற போது, நீங்கள் மறுப்பது ஏன் ? அந்த வருமானத்தின் மூலம் பல நன்மைகளை மக்களுக்கு செய்யலாமே ? என்று பலர் கேட்டார்கள்.
ஆனால், காமராஜர் அவர்கள் ஒரு பதிலை உறுதியாக திரும்பப் திரும்பச் சொன்னார். ஒரு சமூகத்தை சீரழித்து அதன்மூலம் வருகிற வருமானத்தில் சில நன்மைகள் செய்வது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய கட்சியைச் சார்ந்த பல முதலமைச்சர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நானும் அதனை செய்ய முடியாது. வலிமையான ஒரு சமூகம் தான் நாட்டை முன்னேற்ற முடியும். மது அருந்துவதால் இளைய சமூகத்தினர் தங்களுடைய வலிமையை இழப்பதோடு, நெறி சார்ந்த வாழ்க்கை முறையையும் இழக்கிறார்கள்.
எனவே, மற்றவர்கள் செய்கிற தவறை நான் செய்ய மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறினார். தமிழக காங்கிரசின் பெருமை அதுதான். அதனால் தான் பெருந்தலைவர் காமராஜரை 'கருப்பு காந்தி' என்று இந்தியா முழுவதும் அழைத்தார்கள். நாங்களும் அதனையே பின்பற்றுகிறோம். இந்தியாவில் எந்த காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அந்த தவறை செய்தாலும், தமிழக காங்கிரஸ் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தம்முடைய பல்வேறு பேட்டிகளில் மதுவை ஒழிப்பது சம்மந்தமாக உறுதியான கருத்தை கொண்டிருக்கிறார். எந்த சீர்திருத்தத்தையும் படிப்படியாகத் தான் கொண்டு வர முடியும். ஒரே அடியாக அனைத்து சீர்திருத்தங்களையும் புகுத்தினால் நாட்டின் நிதிநிலை மட்டுமல்ல, அரசாங்க நடைமுறைகளும் சீர்குலையும்.
சோவியத் ரஷ்யாவில் சீர்திருத்தம் என்கிற பெயரில் கோர்ப்பசேவ் அவர்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அமல்படுத்தினார். அதனால் சோவியத் யூனியன் என்ற அமைப்பே சிதறிப் போனது. தமிழகத்தில் அந்த நிலை வரக்கூடாது என்று தான் முதல்வரும் விரும்புகிறார், நாங்களும் விரும்புகிறோம்.
ஆனால், அதேநேரத்தில் மக்கள் மன்றத்தில் மதுவுக்கு எதிரான சமூக கடமையை தோற்றுவிக்க வேண்டியது நமது கடமை. ஈரோட்டில் நாகம்மையார் எவ்வாறு தமது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டி எறிந்தாரோ, அதே போன்ற ஒரு சூழலை, மனநிலையை தமிழக மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அறம் சார்ந்தவர்களின் கடமை என்று தமிழக காங்கிரஸ் கருதுகிறது. அதற்காக எங்கள் கட்சி முன் முயற்சி எடுத்து வருகிறது.
எனவே தான் ஒரு பேட்டியின் போது அந்த கருத்தை நான் சொன்னேன்.
நன்றி. வணக்கம்.
தங்கள் அன்புள்ள,
கே.எஸ். அழகிரி
தலைவர்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி