இந்த மண்ணின் மானம் காத���த மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்குப் பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வீரவணக்கங்கள்!
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் துணிச்சலுடன் எதிர்த்து��் தன் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகியைப் போற்றி வணங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்.
பேயான்பட்டியைச் சேர்ந்த இளம் குதிரை வண்டிப் பந்தய வீரர் கணேசா அவர்களின�� மறைவுக்கு பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் அரைகுறை சட்ட விளக்கம் தமிழகத்தின் காவிரி உரிமைக்கு ஆபத்தானது. மாநிலங்களவைப் பதிலைத் திரும்பப் பெறச் செய்து, அணைத் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாமல் தமிழக அரசு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு எம்-சாண்ட், ஜல்லி, கருங்கல் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொண்டு செல்ல மூன்று மாதங்கள் தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கையைப் பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி பாராட்டுகிறது.
@CMOTamilnadu@drtkprabhu_TVK
இந்த முக்கிய முடிவை எடுத்த முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அமைச்சர் டாக்டர் T.K. பிரபு அவர்களுக்கும் பாராட்டுகள். மூன்று மாதத் தடையுடன் நிறுத்தாமல், பிற மாநிலங்களுக்குக் கனிம வளங்களைக் கொண்டு செல்வதற்கு நிரந்தரத் தடை வித���க்க வேண்டும்.
தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் மக்களின் இதயத்தில் நிலைத்தவர் நவரச திலகம் முத்துராமன் அவர்கள்.
அன்னாரை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறோம்.
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி
வீரம்! விவேகம்! வெற்றி!
தமிழ்த் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என மக்களால் போற்றப்பட்ட பன்முக���் கலைஞர் திரு கே. பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி மன வேதனை அளிக்கிறது.
PMT கட்சி சார்பில், திரு. கே. பாக்யராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன.
தென்காசி கோவிலை காக்க உயிர்நீத்த திரு. குமார் பாண்டியன், திரு. செந்தில் பாண்டியன், திரு. சேகர் பாண்டியன், திரு. சுரேஷ் பாண்டியன் ஆகியோரின் தாயாரும், சொர்ணத் தேவரின் துணைவியாருமான திருமதி. அழகம்மாள் அம்மையார் அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி என் இதயத்தை கனக்கச் செய்கிறது.
நீதிக்காகவும் தர்மத்திற்காகவும் கர்பலா போர்க்களத்தில் இன்னுயிரைத் தியாகம் செய்த இமாம் உசே��் அவர்களின் புனித நினைவை மரியாதையுடன் போற்றுகிறோம். அநீதிக்கு எதிரான இஸ்லாமியச் சொந்தங்களின் உணர்வுகளோடு பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி என்றும் துணை நிற்கும்.
#Muharram #ImamHussain
சிவகங்கைச் சீமையின் மாவீரர் மாமன்னர் முத்து வடுகநாத பெரிய உடையார் தேவர் அவர்களின் 254வது நினைவு நாள்.
மாமன்னர் முத்து வடுகநாதர் அவர்களுக்கு வீரவணக்கம்!
K. N. இசக்கி ராஜா தேவர்
நிறுவனர் – தலைவர்
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி
#சிவகங்கைசீமை#SIVAGANGAI#Mukkulathor#Thevar
வரலாற்றை மறந்த தலைமுறை, எதிர்காலத்தை உறுதியாக கட்டியெழுப்ப முடியாது!
மன்னர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் அவர்களின் பிறந்த நாளில், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பெருமைமிகு வரலாற்றையும், அவரது தியாகத்தையும், நிர்வாகத் திறமையையும் பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி மரியாதையுடன் நினைவுகூர்கிறது.
ஒரு மன்னரின் பெருமை அவர் ஆட்சி செய்த அரண்மனைகளால் மட்டும் அளவிடப்படுவதில்லை; மக்களின் எதிர்கால நலனுக்காக அவர் எடுத்த வரலாற்றுச் முடிவுகளால் அளவிடப்படுகிறது. புதுக்கோட்டை சமஸ்தானத்தை தன்னார்வமாக இந்தியாவுடன் இணைத்த அவரது தூரநோக்கு சிந்தனை, தேசப்பற்று, சமத்துவ உணர்வு ஆகியவை இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டும் வரலாற்றுப் பாடமாகும்.
அதிகாரம் என்பது மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய பொறுப்பு என்பதையும், ஆட்சி என்பது தொண்டும் தியாகமும் கலந்த புனிதக் கடமை என்பதையும் தனது செயலால் நிரூபித்தவர் மன்னர் ஸ்ரீ பிரகதாம்பதாஸ் ராஜகோபாலத் தொண்டைமான் அவர்கள்.
அவரது புகழும், வரலாற்றுப் பெருமையும் என்றும் நிலைத்திருக்கட்டும்!
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி
K.N. இசக்கி ராஜா தேவர்
நிறுவனர் தலைவர்
#மன்னர்_ஸ்ரீ_பிரகதாம்பதாஸ் #ராஜகோபாலத்_தொண்டைமான் #புதுக்கோட்டை_சமஸ்தானம்
50 இளைஞர்களுடன் பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சியில் இணைந்த தேசிய கட்சியின் நிர்வாகி.
KN ���சக்கி ராஜா தேவர் தலைமையிலான பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் முன்னாள் OBC குழு உறுப்பினர், மாவட்ட OBC அணி செயலாளர் IT wing செயலாளர் ஆகிய பதவிகிகளை வகித்த தூத்துக்குடி S கண்ணன் பாண்டியன் அவர்கள் 25க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் KN இசக்கி ராஜா தேவர் தலைமையிலான பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சியில் வந்து உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
@esakkirajadevar
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
எளிய மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் தலைவராக உயர்ந்து நிற்கும் தாங்கள், தமிழர் வரலாறு, பாரம்பரியம், தேசியம், தெய்வீகம் ஆகிய உயரிய மதிப்புகளை காக்கும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் வழங்கிட நெஞ்சார வாழ்த்துகிறோம்.
பசும்ப���ன் தேவர் திருமகனார் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தியாகச் சிந்தனையை முன்னிறுத்தி, மக்கள் நலனும் மண்ணின் உரிமையும் காக்கும் தங்களின் அரசியல் பயணம் மேலும் மாபெரும் வெற்றி பெறட்டும்.
வாழ்த்துகளுடன்,
திரு. K.N. இசக்கி ராஜா தேவர்
நிறுவனர் - தலைவர்,
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி
#HBDVijay #HappyBirthdayVijay #josephvijay #ChiefMinisterVijay #TamilNaduCM #tvk #tamilagavetrikazhagam #ஜோசப்_விஜய் #முதல்வர்_விஜய் #தமிழக_வெற்றிக்_கழகம்
@TVKVijayHQ @CMOTamilnadu @actorvijay @esakkirajadevar
ஜூன் 16 — ஜம்புத���வு பிரகடனத்தை நினைவுகூர்வோம்!
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரத தேசத்திம் வீரக் குரலாக ஒலித்த மிக முக்கியமான அரசியல் பிரகடனம் தான் ஜம்புதீவு பிரகடனம். 1801 ஜூன் 16 அன்று, சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருது பாண்டியர்கள், ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க இந்த வரலாற்றுப் பிரகடனத்தை வெளியிட்டனர். இது வெறும் சிவகங்கை அரசின் பாதுகாப்புக்கான அழைப்பு அல்ல; “ஜம்புதீவு” எனும் பரந்த பார்வையில், நாட்டின் அனைத்து மக்களும் அந்நிய ஆட்சிக்கு எதிராக எழ வேண்டும் என்ற விடுதலை முழக்கமாக இருந்தது.
அன்றைய காலத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி வரி வசூல், ஆட்சியுரிமை, இராணுவ அழுத்தம், உள்ளூர் அரசர்களை பலவீனப்படுத்தும் சூழ்ச்சி போன்ற வழிகளில் தென்னகத்தின் சுதந்திரமான ஆட்சிக் கட்டமைப்புகளை உடைத்து வந்தது. இந்த நெருக்கடி நிலையில்தான் மருது பாண்டியர்கள் தங்கள் உயிருக்கும், நாட்டுக்கும், குடும்பத்திற்கும் ஏற்படும் அபாயத்தை அறிந்திருந்தும், “அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வதைவிட, உ��ிமைக்காக எழுவது மேல்” என்ற வீர முடிவை எடுத்தனர். 1801 ஜூன் 12 அன்று பிரிட்டிஷ் அதிகாரி அக்னியூ வெளியிட்ட எ��்சரிக்கைக்கு பதிலாக, ஜூன் 16 அன்று இந்த பிரகடனம் மக்கள் மத்தியில் வெளிப்படையாகப் பரப்பப்பட்டது என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த பிரகடனம் திருச்சி கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் மதில்களில் ஒட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் மக்களை சாதி, மதம், பிரிவு, பகுதி என்பவற்றைக் கடந்து ஒன்றிணைய அழைத்தது. அன்றைய காலத்திலேயே “ஒற்றுமை இல்லாததால் தான் அந்நியர் நம்மை ஆளுகின்றனர்” என்ற அரசியல் உண்மையை மருது பாண்டியர்கள் மக்களிடம் நேரடியாகச் சொன்னார்கள். அதனால்தான் ஜம்புதீவு பிரகடனம், ஒரு சாதாரண அறிவிப்பு அல்ல; அது தென்னக மண்ணில் எழுந்த ஒற்றுமை, சுதந்திரம், சுயமரியாதை, தியாகம் ஆகியவற்றின் புரட்சிகர ஆவணம்.
மருது பாண்டியர்களின் பெருமை வெறும் வாள்வீச்சில் மட்டும் இல்லை. அவர்கள் ஆங்கிலேயரின் ஆயுத வலிமையை மட்டும் எதிர்கொள்ளவில்லை; ஆங்கிலேயரின் சூழ்ச்சி அரசியலையும் எதிர்கொண்டார்கள். மக்கள் பிரிந்து இருந்தால் அந்நிய ஆட்சி நிலைத்துவிடும்; மக்கள் ஒன்றிணைந்தால் எந்த அடக்குமுறையும் நிலைக்காது என்ற அரசியல் அறிவை அவர்கள் 1801-லேயே உணர்ந்திருந்தார்கள். அதனால்தான் ஜம்புதீவு பிரகடனம், தமிழர் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய விடுதலை சிந்தனையின் வரலாற்றிலும் தனி இடம் பெற வேண்டிய ஆவணம்.
இன்றைய தலைமுறை இந்த வரலாற்றை நினைவு கூற வேண்டிய அவசியம் மிகப் பெரியது. ஏனெனில் சுதந்திரம் என்பது நமக்கு எளிதாகக் கிடைத்த பரிசு அல்ல; அது எண்ணற்ற முன்னோர்களின் இரத்தம், தியாகம், துணிவு, அறிவு, ஒற்றுமை ஆகியவற்றின் விளைவு. மருது பாண்டியர்கள் நமக்கு விட்டுச் சென்ற பாடம் ஒன்றுதான் — உரிமை இழக்கப்படும் முன் விழித்துக்கொள்ள வேண்டும்; மக்கள் பிரிக்கப்படும் முன் ஒன்றிணைய வேண்டும்; அநீதிக்கு முன் தலைகுனியாமல், உண்மைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
ஜம்புதீவு பிரகடனத்தை நினைவு கூறுவது, கடந்த காலத்தை மட்டும் போற்றுவது அல்ல. அது இன்றைய சமூகத்திற்கு அரசியல் விழிப்புணர்வை உருவாக்கும் கடமை. இளைஞர்கள் தங்கள் வரலாற்றை அறிந்தால் தான், தங்கள் உரிமையின் மதிப்பை உணர்வார்கள். தியாகிகளை நினைவு கூறினால் தான், தியாகத்தின் அர்த்தம் புரியும். மருது பாண்டியர்களை போற்றினால் தான், வீரமும் தைரியமும் மக்கள் நல அரசியலுடன் இணைந்தால் அது வரலாற்றை மாற்றும் என்பதை உணர முடியும்.
மருது பாண்டியர்களின் ஜம்புதீவு பிரகடனம், “அடக்குமுறைக்கு எதிராக மக்கள் எழ வேண்டும்” என்ற முழக்கம் மட்டுமல்ல; “மக்களின் ஒற்றுமையே சுதந்திரத்தின் அடித்தளம்” என்ற காலத்தை கடந்த அரசியல் உண்மை. அந்த வீர வரலாற்றை இன்றைய தலைமுறைக்��ு எடுத்துச் செல்வதும், தமிழர் மண்ணின் சுதந்திரப் போராட்ட மரபை மறக்காமல் காக்குவதும் நமது கடமை.
மருது பாண்டியர்களின் வீரமும், தைரியமும், தியாகமும் என்றும் தமிழர் வரலாற்றின் அழியாத ஒளிக்கோப்பு!
பசும்பொன் மக்கள் தேசம் (PMT) கட்சி
KN இசக்கி ராஜா தேவர்
#ஜம்புதீவு_பிரகடனம் #மருது_பாண்டியர்கள் #ஜூன்16 #தமிழர்_வீரவரலாறு #சுதந்திர_போராட்டம் #PMT #பசும்பொன்_மக்கள்_தேசம் #kn_இசக்கி_ராஜா_தேவர் #வீரம் #தைரியம் #தியாகம்
@esakkirajadevar