கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், கும்பகோணத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK
பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை ஆரத்தழுவி மகிழ்ந்த மருத்துவர் அய்யா அவர்கள். மருத்துவர் அய்யா மற்றும் கல்வித் தாய் சரசுவதி அம்மையாரின் திருமண நாளில், தைலாபுரம் தோட்டத்தில் அவர்களது ஆசி பெற்ற பா.ம.க தலைவர் குடும்பத்தினர்.
சபரிமலை ஐயப்பனை வழிபடுவதற்காக, சென்னை உத்தண்டியில் உள்ள விநாயகர் கோவிலில், பேரன் பேத்தியுடன் மாலை அணிந்து கொண்ட பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களுடன் வழிபாடு செய்த போது.!
சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும்!
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படாததைக் கண்டித்து அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமாக ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். உழைத்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 10 நாள்களுக்கு மேலாகியும் ஊதியம் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மருத்துவப் பணியாளர்களின் போராட்டத்தால் சென்னையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் இன்று காலை முதல் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் தவறால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது.
மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும் உழைத்த பணியாளர்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைப்பதோ, வழங்க மறுப்பதோ நியாயமல்ல; அது மனித உரிமைகளுக்கு எதிரானது.
எனவே, சென்னை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் பிற கோரிக்கைகளையும் மாநகராட்சியும், அரசும் இணைந்து நிறைவேற்ற வேண்டும். @CMOTamilnadu
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு
தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்!
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளப்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 27 ஆயிரம் போக்சோ சட்டப்படியான குற்றங்கள் உள்பட மொத்தம் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்தன. அதே போன்ற நிலை இனியும் தொடராமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப் பெண் சிறப்புப் படை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோவை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தூக்கு தண்டனை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
சோமாசிபாடி புதூர் பாண்டுரங்கன் மறைவுக்கு இரங்கல்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்ப்பெண்ணாத்தூரை அடுத்த சோமாசிபாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சா.பாண்டுரங்கன் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளிலேயே அதில் தம்மை இணைத்துக் கொண்ட பாண்டுரங்கன், பாட்டாளி மக்கள் கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டவர். வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஒருவார தொடர் சாலை மறியல் போராட்டம் உள்பட ஏராளமான போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். சிறந்த மேடைப் பேச்சாளரான பாண்டுரங்கன், பாட்டாளி மக்கள் கட்சிக்காக பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி கட்சியின் கொள்கைகளை பரப்பியவர்.
சா.பாண்டுரங்கன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திருவண்ணாமலை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், மேற்கு ஆரணி ஒன்றிய குழு துணை பெருந்தலைவருமான ஆ.வேலாயுதம் - சாந்தி தம்பதியரின் மகன் மற்றும் கோ.கதிரவன் - கலைவாணி தம்பதியரின் மகள், வே.சண்முகம் - க.மீனாட்சி இணையரின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த போது.!
சுரண்டல்வாதிகளை ஒழித்து பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க தொழிலாளர் நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்!
உலகை உயர்த்த உழைக்கும் பாட்டாளிகளின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட நாளான மே நாளைக் கொண்டாடும் பாட்டாளிகள் அனைவருக்கும் தொழிலாளர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி. ஆனால், களச்சூழல் அத்தகையதாக இல்லை. உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது; பெரு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் நிலை மட்டும் மாறவில்லை. அவர்கள் இன்னும் சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். இன்னும் கேட்டால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியத் தேவை 19&ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிகத் தேவை இன்றைக்கு இருக்கிறது. உலகம் பல்வேறு தளைகளிலிருந்து விடுதலை பெற்று வரும் நிலையில் தொழிலாளர்களின் விலங்கு மட்டும் உடையவில்லை.
எந்த ஒரு இன்னலுக்கும் முடிவு உண்டு. அதேபோல், உழைக்கும் பாட்டாளிகள் மீது கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்ட சுரண்டலுக்கும் முடிவு உண்டு. அந்த முடிவு இப்போது நெருங்கி விட்டது என்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணி, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தையும் வென்றெடுத்துக் கொடுப்பதன் மூலம் சுரண்டல்வாதிகளின் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டி, பாட்டாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம் என்று கூறி, உலகெங்கும் வாழும் பாட்டாளிகளுக்கு மீண்டும் ஒரு முறை மே நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சி.பிரகாஷ் - தங்கம் தம்பதியரின் அன்பு மகள் P.லிக்கிதா மஞ்சள் நீராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று வானூர் வட்டம், கோட்டக்கரை கிராமத்தில் உள்ள அவர்களது இல்லத்துக்கு சென்று வாழ்த்தினேன்.!
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்ற, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட, இரண்டாம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், மதுரையில் பங்கேற்று உரையாற்றிய போது
#PMK #ADMK #BJP #election2026
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்ற, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட, இரண்டாம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், மதுரையில் பங்கேற்று உரையாற்றிய போது.!
@narendramodi@EPSTamilNadu@PiyushGoyal
#PMK #ADMK #BJP #election2026
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்ற, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட, இரண்டாம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், மதுரையில் பங்கேற்று உரையாற்றிய போது.!
@narendramodi@EPSTamilNadu@PiyushGoyal
#PMK #ADMK #BJP #election2026
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் பங்கேற்ற, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட, இரண்டாம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், மதுரையில் பங்கேற்று உரையாற்றிய போது.!
@narendramodi@EPSTamilNadu@PiyushGoyal
#PMK #ADMK #BJP #election2026