கோவை கலெக்டர் உடன் கலந்து ஆலோசித்து , ESI மருத்துவமனை Corona சிறப்பு வார்டு வேண்டிய அத்தியாவசிய உபகரணங்களை வாங்குவதற்கு தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் (1 crore) வழங்கி உள்ளேன்.
இன்று எனது 76 வது பிறந்தநாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் சி.பத்மநாபன் , மாநிலக் குழு உறுப்பினர் தோழர் அ.ராதிகா மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் எனது இல்லத்திற்கு வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் நன்றி!
நேற்று (30-10-25) எனது தலைமையில் 100 CPIM தோழர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்தான ஒப்புதல் படிவங்களை ஒப்படைத்தனர். உடன் CPIM கோவை மாவட்ட செயலாளர் தோழர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
#CPIM#உடல்தானம்#Comrade
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜூனியர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபாடி அணிக்கு வாழ்த்துக்கள்! அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சென்னை கண்ணகி நகர் கார்த்திகா விற்கு இனிய வாழ்த்துக்கள் 💐🎉 மென்மேலும் வளர்க!!
#Kabaddi
CITU சார்பில் கோவையில் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை மாநாடு..
இன்று (செப்.26) மாலை 6 மணிக்கு...
சித்தா புதூர் V.K.K. மேனன் சாலையில், ஜெயா பேக்கரி சந்திப்பு.
இன்று தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள். அதை முன்னிட்டு, உடல் தான இயக்கத்தை கட்சி முன்னெடுத்துள்ளது. புகழஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு, எனது உடலை மரணத்திற்கு பிறகு மருத்துவ ஆய்வுக்காக தானம் செய்ய விருப்பப் படிவத்தை ஒப்படைத்தேன்.
#SitaramYechury#Cpim
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் முதல் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு. செப்.02 . காலை 9 மணிக்கு..
கோவை CPIM மாவட்ட குழு அலுவலகத்தில்..
#SitaramYechury#Comrade#CPIM
எனது அன்புத் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி. தமிழ் இலக்கிய பரப்பில் முற்போக்கான நூல்களை வரும் நாட்களில் அவர் படைத்திட வாழ்த்துகிறேன்.
#Velpari#Vikatan#SuVenkatesan
தீக்கதிர் நாளிதழின் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.
ஊடக உலகில் உண்மையின் பேரொளியாக விளங்கும் தீக்கதிர் நாளிதழ் சந்தா தாரர் ஆவீர்!
#Theekkathir
கோவை மாவட்ட சிஐடியு அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் M.A.பாபு , சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர், நெருக்கடி நிலை காலத்தில் 20 மாதம் சிறை சென்ற காலம்.. தோழர் M.A.பாபு அவர்கள் காலமானார். அவருக்கு எனது செவ்வணக்கம்.
#Comrade#CITU#CPIM