FOLLOW 👉 https://t.co/aDxdVghSJZ
#DMKITWing WhatsApp Channel!
கழகத் தகவல் தொழில்நுட்ப அணியுடன் கரம் கோர்ப்போம்! கழக செய்திகள், பதிலடிகள் என அனைத்தையும் உடனுக்குடன் பெற QR code-ஐ ஸ்கேன் செய்து அல்லது லிங்க்கை கிளிக் செய்து உடனே இணையுங்கள். 🌄
👉 #FollowDMKITWing
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13-06-2026), கழக மகளிரணி - மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரை:
மகளிர் அணியின் சார்பில், இந்த எழுச்சிமிகுந்த கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி செயலாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தேர்தலுக்கு முன்னர், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மண்டல மாநாடுகள், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம், சமூக வலைத்தளங்களின் வழியான செயல்பாடுகள் என மகளிர் அணியைச் சேர்ந்த நீங்கள் அனைவரும் பல்வேறு பணிகளைச் செய்யும் அணியாக மிக எழுச்சியோடு செய்து முடித்தீர்கள். கழகம் பெற்றிருக்கும் வாக்குகளுக்கு உங்களுடைய முயற்சிகளும் முக்கிய காரணமாக அமைந்தது என்பதை, யாரும் மறுத்திட மறைத்திட முடியாது. அதற்காக முதலில் என்னுடைய மனப்பூர்வமான நன்றியை உங்கள் அத்தனை பேருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிற நாம், மீண்டும் ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும். அதற்கான களமாகத்தான் இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
“ஆறு மாதம் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கிற மாதிரி இந்த ஆட்சி நடக்குமா?” என்று, ஏற்கனவே நான் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசினேன். உடனே, அதை உண்மைக்கு மாறாகத் திரித்து, “ஆட்சியைக் கவிழ்க்க சதியா?” என்று கேட்டு நமது எதிரிகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். நான் ஏற்கனவே நிறைய முறை சொல்லிவிட்டேன். இன்னொரு முறையும் இந்தக் கூட்டத்தில் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தி.மு.கழகம் பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகத் தன்னுடைய கடமையை உறுதியாகச் செய்யும். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம்; கேள்விகளைப் கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் நடந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகாலம் நடைபெற்ற நம்முடைய திராவிட மாடல் ஆட்சியே மகளிருக்கான ஆட்சிதான் என்பதைப் பற்றி, இங்கே எனக்கு முன்பு தலைமையேற்றுப் பேசிய தங்கை கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்தான விடியல் பயணத்தில் தொடங்கி, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் என்று ஏராளமான புதுமையான திட்டங்களை நாம்தான் உருவாக்கினோம். அது மக்களுக்குச் சரியாகச் சென்றடைகிறதா என்று பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்தோம். அதுமட்டுமல்ல, இப்போது நடந்து முடிந்த தேர்தலில் கூட பெண்களுக்குத்தான் நிறைய வாக்குறுதிகள் நாம் கொடுத்தோம். குறிப்பாக, 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுக்கிற இல்லத்தரசி திட்டம், அதுமட்டுமா, உரிமைத்தொகை உயர்வு என்று நிறைய இருக்கின்றன.
ஆனால், இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று, நீங்களே சோஷியல் மீடியாவில் நிறைய வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், சென்னையையும் பல ஊர்களையும் இருட்டில் மூழ்கடிக்கிற மின்வெட்டு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என்று நடந்த நாடகம் என்று இப்படிப் பலதரப்பட்ட மக்களும், “ஏன்டா இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம்” என்று கோபமாக, ஆவேசமாக, வருந்திக் கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்டவர்களும் வருத்தப்படுகிறார்கள்; ஓட்டு போடாதவர்களும் வருத்தப்படுகிறார்கள். அதுதான் இப்போது இருக்கும் நிலை!
சாதாரணமாக சொல்கிறார்கள்... “ஏதோ இரண்டு ஓட்டு போட்டோம். நீங்கள்தான் ஆட்சிக்கு வருவீர்கள் என்று நினைத்தோம். இப்படி ஆகிவிட்டதே!”
இப்போது இந்த ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டன. நியூஸ் சேனல்களை வைத்தாலே, கொடூரமான குற்றச்சம்பவங்கள்தான் செய்திகளாக வருகின்றன. எனக்கு முன்பு பேசிய தங்கை கனிமொழி சொன்னார்கள், சமீபத்தில் திருவைகுண்டத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அந்தக் கட்சியினரே பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி இரண்டு அமைச்சர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. நேற்று கூட, ஆலந்தூரிலும், சேலத்திலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்தன.
தேர்தலுக்கு முன்பு இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பு பற்றித்தான் தொடர்ந்து பேசினார். இன்னொன்றும் சொன்னார்; “எங்கு நல்ல விஷயம் நடந்தாலும் அது நம்ம பசங்கதான் செய்ததாக இருக்க வேண்டும்” என்று சொன்னார். ஆனால் இன்றைய நிலை என்ன? தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரசாரத்தில் பேசும்போது, “த.வெ.க. ஆட்சி பாதுகாப்பு கொடுக்கும்” என்று சொன்னார்கள். ஆனால், இப்போது த.வெ.க.விடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கிற நிலைக்கு இன்றைக்குத் தமிழ்நாடு இருக்கிறது.
பொதுவாக எல்லோரும் ஷாப்பிங் போனால் என்ன வாங்குவார்கள்? டிரெஸ் வாங்குவார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால், இப்போது நம்முடைய முதலமைச்சர் என்ன செய்கிறார் தெரியுமா? அ.தி.மு.க. MLA-க்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார். நமக்கு என்ன சந்தேகம் என்றால், அவர் ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிற மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? முதலில் அவர் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க. MLA-க்களை த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தார். இப்போது, அவர்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அடுத்த நொடியே தன்னுடைய கட்சியில் இணைத்திருக்கிறார்.
இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்குக் முதலமைச்சர் விஜய் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார். அதாவது, பா.ஜ.க.வின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார். உதவி என்று கேட்டபோது அவருக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் எல்லாம், இதைப் பற்றிப் கேட்கும்போது, தர்மசங்கடத்தில் தவிக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துக் பாருங்கள். ஒரு கட்சியில் பல பேருக்கு இடையில் ஒருவருக்குத்தான் வேட்பாளராக வாய்ப்புக் கிடைக்கிறது. எத்தனையோ தொண்டர்கள் உழைக்கிறார்கள், கூட்டணிக் கட்சிகளும் இவர்களது வெற்றிக்காக உழைக்கிறார்கள். இத்தனை பேரின் உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, வாக்குப்பதிவின் போது கைவிரலில் வைத்த மை அழிவதற்குள், ரிசைன் செய்துவிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் நியாயமாக இதைக் கேள்வி கேட்க வேண்டுமா, வேண்டாமா? ஒரே மாதத்தில் MLA-க்கள் ரிசைன் செய்துவிட்டு த.வெ.க.வில் சேர்கிறார்களே, அந்தளவுக்கு அப்படி என்ன ஆஃபர் த.வெ.க.வில் கிடைத்திருக்கும் என்று பேச வேண்டுமா வேண்டாமா? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிற அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது.
முதலமைச்சர்தான் மேடைக்கு மேடை “கான்ஃபிடண்ட்டா இருங்க” என்று சொல்கிறாரே தவிர, அவரே முதலில் கான்ஃபிடண்ட்டாக இருக்கிறாரா! அதனால்தான், தீர்ந்துபோன சக்தி என்று சொன்னவர்களுடைய உறுப்பினர்களையே திருடிக் கொண்டிருக்கிறார். தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிற இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள். பாலியல் வன்முறைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என்று நடப்பதையெல்லாம் பார்த்தால், யாராலாவது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு டைம் தரலாம்; ஆனால், பொதுமக்களுடைய பாதுகாப்பு பற்றி எப்படிப் பேசாமல் இருக்க முடியும்?
நேற்று முன்தினம், டெல்லியில் பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் எல்லாம் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு இங்கிருக்கும் முதலமைச்சரும் போயிருக்கிறார். அங்கு சென்று என்ன பேசினார் என்று உங்களுக்குத் தெரியும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு உரிமைகளுக்காக நாம் வைத்த கோரிக்கைகளில் சிலவற்றையும், நமது ஆட்சியில் செய்த சாதனைகளில் சிலவற்றையும் தன்னுடைய உரையில் முதலமைச்சராக இருக்கும் விஜய் பேசியிருக்கிறார். அதை நாம் வரவேற்கிறோம். அதே சமயத்தில், நான் முதலமைச்சராக இருக்கும்போது, இதே மாதிரி டெல்லி சென்று பேசியபோது, இப்போது முதலமைச்சராக இருக்கிறவர் என்னவெல்லாம் பேசினார் என்று தெரியுமா? அவருக்கு நான் ஞாபகப்படுத்துகிறேன்.
“அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகப் போனார்கள்”, “பா.ஜ.க. காலில் விழுந்து மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிறார்கள்”, “அதனால்தான் குரூப் ஃபோட்டோ எடுக்கும்போது முன்வரிசையில் நிற்க ஸ்டாலினுக்கு இடம் கொடுத்தார்கள்”. இதெல்லாம் யார் சொன்னது? அவர் சொன்னது. இப்போது நீங்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள், நான் கேட்கவா? இப்போது நான் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். Mr. Chief Minister, மாண்புமிகு முதலமைச்சர், கரூர் சி.பி.ஐ. வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் நீங்கள் டெல்லிக்குச் சென்றீர்களா? பா.ஜ.க.வை உறுதியாக விமர்சித்துப்பேசினால் உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? இந்தக் கேள்வியையெல்லாம் கேட்டு, ஒரு முதலமைச்சராக நீங்கள் அரசுக் கூட்டத்தில் கலந்துகொண்டதை உங்களைப் மாதிரி நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.
மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மறுத்த காரணத்திற்காகத் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு விடுவிக்காமல் பிளாக்மெயில் செய்தார்கள். தி.மு.க. அரசு அதை எதிர்த்துப் போராடினோம். அதில் கூட இப்போது இருக்கும் முதலமைச்சர் என்ன சொன்னார்? பா.ஜ.க. அரசைத் கண்டிக்காமல், “கொடுப்பது அவர்கள் கடமை, வாங்குவது இவர்களது உரிமை. ஆனால் பாசிசமும் பாயாசமும் எல்.கே.ஜி. – யூ.கே.ஜி. பசங்க மாதிரி சண்டை போடுகிறார்கள்” என்று நக்கல் நையாண்டி செய்தீர்களே... இப்போது நீங்கள் மட்டும் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறீர்கள்? நிபந்தனைகள் இல்லாமல் நிதியைக் கொடுக்க வேண்டும் என்றுதானே நீங்களும் கேட்டிருக்கிறீர்கள்?
இப்படித்தான் செய்ய முடியும்; ஏனெனில், இது சினிமா இல்லை, ஆட்சி நிர்வாகம். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள். மாநில உரிமைகள் சார்ந்த எதுவாக இருந்தாலும் திராவிட மாடல் அரசு போட்டுத் தந்த ப்ளூப்ரிண்ட் படிதான் யாராக இருந்தாலும் செயல்பட முடியும். சொல்லப்போனால், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் தமிழ்நாடு, பெண்கள் அதிகம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு, நமது மாணவர்களுக்கு நீட் விலக்கு என, தி.மு.க. அரசின் பாலிசி நோட் மாதிரிதானே முதலமைச்சரின் ஒட்டுமொத்த பேச்சும் இருந்தது? ஈயடித்தான் காப்பியாக இருந்தால் நன்றாக இருக்காது என்று, 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று நான் சொன்னதை மட்டும், 2036-க்குள் ஒன்றரை ட்ரில்லியன் டாலர் என்று, காரில் பட்டி பார்ப்பது போன்று, முதலமைச்சர் கொஞ்சமாக மாற்றி பேசிவிட்டு வந்திருக்கிறார். இருந்தாலும் அதற்காக என்னுடைய வாழ்த்துகள். Mr. Chief Minister அவர்களுக்கு நன்றி. Oh, Sorry மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
இப்போது நான் கேட்ட கேள்விகளையெல்லாம் இங்கு வந்திருக்கிற மகளிரணி உடன்பிறப்புகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நம்மை நம்பி ஒரு கோடியே 55 லட்சம் பேர் வாக்களித்திருக்கிறார்கள்; அவர்களுடைய நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும். எனவே, விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது; லட்சக்கணக்கான இளம் பெண்களைத் தி.மு.க.வை நோக்கி ஈர்த்து வர வேண்டும். அதுமாதிரி நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். நம்மிடம் வரலாறு இருக்கிறது, கொள்கை இருக்கிறது, சாதனை இருக்கிறது, எதிர்காலத்திற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. இது எல்லாவற்றையும் அவர்களுக்குப் புரிகிற மாதிரி சொல்லுங்கள். புரிந்து கொள்ள ஆரம்பித்தால், அவர்கள் நிச்சயம் தி.மு.க.வை நோக்கித்தான் வருவார்கள். அதற்கான பொறுப்பும் கடமையும் மகளிரணியினரான உங்களிடம்தான் இருக்கிறது.
நம்முடைய இயக்கம், அறிவியக்கம் என்பதைக் காட்டுங்கள். எல்லோரையும் நம்முடைய இயக்கத்தை நோக்கி அழைத்து வாருங்கள். தலைவர் கலைஞர்தான் அடிக்கடி சொல்வார்: “கட்சி என்பது தலை! ஆட்சி என்பது கிரீடம்! தலை இருந்தால் கிரீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் கிரீடத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தலையைத் தேட முடியாது.” இப்போது, நாம் தலையைப் பலப்படுத்துகிற பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். நம்முடைய பலம், நம்முடைய கட்சியின் அமைப்பு முறை. அதனால்தான், “இந்தக் கருணாநிதியின் வாழ்க்கையே முடிந்தாலும் தி.மு.க.வின் வாழ்க்கை முடியாது” என்று தலைவர் கலைஞர் சொன்னார். தி.மு.க.வின் பயணம் தொடர உங்களுடைய உழைப்பைக் கொடுங்கள், கொடுங்கள், கொடுங்கள் என்று கூறி, நான் எப்போதும் உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, சகோதரனாக, ஒட்டுமொத்தமாக உங்களின் உடன்பிறப்பாக இருப்பேன் என்ற உறுதியைச் சொல்லி, உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
திராவிட மாடல் ஆட்சியின் சாதனையை ஒப்புக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய். டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய் பேச்சில் இவை வெளிப்பட்டது.
#முரசொலி
The engagement with HD Hyundai intensified with meetings with key personnel in February 2025 and this illustrated how in principle every serious investment promotion effort must internalise. Large investors require absolute confidentiality, as premature disclosure can affect stock valuations and jeopardise transactions built over years. Tamil Nadu’s shipbuilding policy was simultaneously prepared to complement the then imminent Union Government’s national framework, ready to be released the moment the national policy was announced thus mirroring the approach taken with the Electronics Components Manufacturing Scheme.
The MoU was formalised at the #TNRising event, followed by a detailed engagement in Korea in January 2026 where HD Hyundai shared the full massive scale of their vision for future of NSHIP TN and the proposed Tamil Nadu facility.
Since model code was in place MD Guidance TN attended the formal signing between NSHIP TN (National Shipbuilding & Heavy Industries Park Tamil Nadu), Sagarmala Finance Corporation Ltd. (SMFCL) of India and HD Hyundai which was timed to be a part of the summit held between South Korean President Thiru.Lee Jae Myung and Indian Prime Minister Thiru.Narendra Modi in New Delhi in April 2026.
Tamil Nadu’s shipbuilding story carries broader lessons for how industrial strategy should be conducted. Sectors of this complexity are not won through reactive policy or opportunistic pitching. They are won through early conviction, sustained institutional effort, intelligent use of diplomatic channels and the discipline to build a proposition quietly before presenting it publicly.
The foundation has been laid by then CM Honourable Thiru M.K.Stalin. We must now build on it with the same rigour and long-term commitment, ensuring Tamil Nadu’s maritime ambitions translate into lasting industrial capacity, deep employment generation and a supply chain ecosystem that benefits the broader regional economy.
I reiterate my leaders words that when it comes to the growth of the state we must work as one cutting across political lines. The state of Tamil Nadu will always cherish the unique path breaking #DravidianModel governance of DMK Leader Thiru. MK Stalin avargal. He will forever remain the best CM that TN has seen under whose rule industry and people thrived with the economy reaching newer greater heights every single day🙏🏾
5/5
https://t.co/ucF7pWrqPy
Opening up opportunities for the highly educated workforce of TN was also essential and hence in early 2025 we added Scandinavian engagements which added another dimension via meetings with DNV, Kongsberg, Affinity, Innovation Norway and the Norwegian Ministry of Trade, Industry and Fisheries which opened up conversations on green shipping technology, Oil &Gas Shipping, hydrogen applications, and next-generation vessel design and this also spread the word on TN and Tuticorin. This will soon open up opportunities in the IT Services and design segment of the shipping Industry.
Time was ripe for us with the world moving towards a china + 1 strategy on literally every manufacturing front and personally felt that time was right for Tamil Nadu to position itself at the top of the list for companies divesting out of China. I personally pitched with the Chennai ++ = China +1 narrative. We were also aware that when it comes to the ship building sector the only other countries with massive shipbuilding capabilities comparable to or better than China were Japan and Korea.Hence, Team industry also focused heavily on engagement with all the Japanese and Korean shipbuilding giants.
4/n
Tamil Nadu’s emerging Shipbuilding sector will be built over the Foundation which was Laid by the Dravidian Model Govt under the then CM Honourable @mkstalin avargal.
Investment promotion demands farsighted policy design, precisely timed interventions and an intimate understanding of where the global economy is heading. The previous administration in #TamilNadu, under the then Chief Minister Thiru.M.K. Stalin, built a team that understood these dynamics and consistently identified the right moment to act.
The strategic logic behind focusing on Thoothukudi was clear from the very beginning. It’s a major port with fantastic infrastructure, year-round navigability and proximity to emerging green energy and manufacturing corridors. This offered a rare convergence of crucial assets needed for new investments in manufacturing.
Unlocking that potential required an anchor investor whose presence would signal to the global industry that Tamil Nadu was a healthy vibrant global investment destination. This happened via #GIM2024 with the confirmation of Vinfast and other major investments.
1/n
எதை எழுதிக் குடுத்தாலும் வாந்தி எடுக்கும் silencer, ஒரு நாள் script writer கோபத்துல அவரையே திட்டி எழுதிக் குடுத்தாலும் அப்படியே வாந்தி எடுப்பார்.
ஏன்னா இந்த silencerக்கு தான், என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோம்னே தெரியாதே!
#TVKFails
தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவைத் தொகுப்பா?
கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரை கொண்டு வருவாரா?
இன்று ஜூன் 12. கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் 9% வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு.
மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே த.வெ.க.வுடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. டெல்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய், கர்நாடகாவில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?
#TVKFails
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#TVKFails
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்!
வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
புதுச்சேரி :
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில்
திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வது என்று
செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் !
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்ட காரணத்தால் தலைமைக் கழகத்தால் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பது என்று திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் அத்தொகுதிக்கு உட்பட்ட செயிண்ட்பால்பேட் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்றிரவு 7.00 மணிக்கு நடந்தது.
மாநில அமைப்பாளர் @R_SivaDMK அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன், தொகுதி பொறுப்பாளரும், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளருமான டாக்டர் @Drnithish_pydmk ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பாளர் இரா. சிவா பேசியதாவது: –
தமிழகத்தில் விசில் சத்தத்தில் நாம் ஏமாந்துவிட்டோம். இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற திமுக தலைவர் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்த கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். அதற்கும் விசில் தான் காரணம். விசில் சத்தம் கொஞ்சம், கொஞ்சமாக அடங்க தொடங்கி மக்கள் தெளிவாகி வருகின்றனர். தமிழகத்தில் டயலாக் பேசும் முதல்வர் ஆட்சி புரியும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல் வில்லியனூர் தொகுதியில் 600 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தினேன். அதன் காரணமாக மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பி இருந்தேன். ஆனால் மக்கள் கவர்ச்சிக்கு ஆசைப்பட்டு குறிப்பாக பெண்கள் அதிகளவில் விசிலுக்கு வாக்களித்த காரணத்தால் நான் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.
திமுகவை எதிர்த்த அதிமுக இன்று கட்சியை காப்பாற்றினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தலைவர் யாரை வேட்பாளராக நிற்க வைக்கிறாரோ அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக திட்டமிட்டு கடுமையாக உழைக்க வேண்டும். மக்களை சந்திக்கும்போதே அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நட்சத்திர அந்தஸ்தோடு செல்ல வேண்டும். கொள்கை, இன உணர்வு, மொழி உணர்வுள்ள மாபெரும் இயக்கம் திமுக. இடைத்தேர்தலில் யார் எதிர்த்து போட்டியிட்டாலும் கவலைப்படாமல் நாம் அனைவரும் தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலோடு தீவிரமாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மதிமாறன், மாநில துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், சுரேஷ், தொகுதி அவைத்தலைவர் கணேசன், தொகுதி நிர்வாகிகள் பழநிசாமி, குடியரசு, திருலோகு, சுகுணா, இளங்கோ, சங்கர், முருகையன், சந்தோஷ், பாலாஜி, முத்துகுமார், விக்டோரியா, நடராஜன், ராமமூர்த்தி, அய்யனார், வெங்கடேசன் உள்ளிட்ட 200 கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக இடைத்தேர்தலில் தலைமைக் கழகத்தால் நிறுத்தப்படும் வேட்பாளரை கண்டிப்பாக வெற்றி பெற செய்து என்று தீர்மானம் ஒருமனதாக இயற்றப்பட்டது.
@mkstalin | @Udhaystalin
#DMKPuducherry
Warm birthday wishes to RJD National President Thiru. @LaluPrasadRJD.
Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country.
Wishing you good health and happiness.
@yadavtejashwi
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்!
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது.
உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்!
#DMK4TN
தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்.
எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்கும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர்.
எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
#Bharathiraja
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom