"தமிழ்நாடு அரசு" என்ற பெயருடன் தமிழ்நாடு அரசு பேருந்துகளைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது!
தமிழ்த் தேசியர்களின் கோரிக்கையை நடைமுறைப்படுத்திய தவெக அரசுக்கு நன்றி.
தமிழகத்தில் பெருகிவரும் போதைக் கலாச்சாரத்தால் ஏற்படும் தீங்குகளைப் பற்றி தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்! எப்படியாவது போதைக் கலாச்சாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். இந்நிலையில், அமைச்சர் ஒருவரைச் சுற்றியுள்ள சர்ச்சைக்குரிய காணொளி தவெக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் அந்த அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பெரிய அளவில் கேள்விக்குறியாக்கும் தன்மையை உருவாக்கியுள்ளது.
இந்த விஷயத்தில் முதல்வரின் நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன்.
சர்ச்சைக்கு உள்ளான அமைச்சர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்!
ஓராண்டுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் முறை மருத்துவர்களிடம் இல்லை.
எனவே, நிச்சயம் விசாரணை அவசியம்!
முதல்வராகப் பதவியேற்கும்போது திரு. விஜய் அவர்கள் முன்வைத்த சத்தியத்தை மறவாமல் இருப்பது தமிழகத்திற்கு நல்லது.
நமது தமிழ்த்தேசியம் இத்தகைய மானுட வாழ்வியல் சீரழிவுகளை கடுமையாக எதிர்க்கிறது!
தமிழர்களின் தனித்துவமான வாழ்வியலைப் போற்றி, "தமிழர் வாழ்வியல் தினம்" என ஒரு நாள் அனுசரிக்கப்படும்!
தமிழின உணர்வாளர் இயக்குநர் வ.கௌதமன் அவர்களின் மகள் பரஞ்சோதி மற்றும் மணமகன் குணாநிதி அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நம் இயக்கத் தோழர்களுடன் கலந்துகொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அக்குழந்தை தமிழ் போல இனிமையுடனும், தமிழர் புகழ் போல உயர்வுடனும், நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்!
May 22 - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நாள் இன்று.
உரிமைக்காகப் போராடிய மக்களை, தனியார் முதலாளிகளுக்காக அரச எந்திரம் ஈவு இரக்கமின்றி நசுக்கிய நாள் இன்று.
இந்த அரசப் பயங்கரவாதம் நடைபெற்று இன்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 தமிழர்களை நினைவுகூர்வோம்.
தியாகத்தின், பகிர்வின், மனிதநேயத்தின் பெருமையை உணர்த்தும் புனித பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய பக்ரீத் வாழ்த்துகள்!
அன்பும் அமைதியும் உங்கள் இல்லங்களில் நிலைக்கட்டும்.
ஈகையின் உயர்ந்த பண்புகள் மனிதகுலத்தை என்றும் ஒன்றிணைக்கட்டும்.
இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்!
வரலாற்று நிகழ்வுகளை விமர்சிக்கலாம், விவாதிக்கலாம். ஆனால் வரலாற்று நிகழ்வுகளைக் காரணமாகக் கொண்டு பாண்டியர்களை "லொடுக்கு பாண்டி" என்று இழிவுபடுத்தும் இந்த ராஜகம்பளத்து பாலகிருஷ்ணன், என்றாவது ஒருநாள் அவரது சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் செய்த கொடுமைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா? விமர்சித்திருக்கிறாரா?
சாதிய உணர்வோடு வரலாற்றில் பாகுபாடு காட்டும் இத்தகைய நபர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்!
Congress says, "Happy LGBTQ+ Pride" to all Christians who follow Jesus and to Muslims who believe in Allah.
I really wonder why many Christians and Muslims don't seem concerned about something that, in their view, could undermine their entire family system.
As a Tamil, I'm concerned that this degrading trend could have a negative impact on Tamil culture and traditions.
நேற்று இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹீம் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்!
மாரிதாஸ் அவர்கள் அமைச்சர் கீர்த்தனா அவர்களைப் பற்றி ஒரு பொய்யான AI புகைப்படத்தை வைத்து வெளியிட்ட அவதூறு பதிவுகள் தவறு. அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், இதைவிட இழிவாக ஒரு பெண்ணைப் பற்றி பேசிய முக்தார் என்ற நபர் இன்றளவும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை! ஏன்?
எதனால் இந்த பாரபட்சம்?
மாரிதாஸ் அவர்கள் தொடர்ச்சியாக தவெக அரசாங்கத்தை விமர்சித்து வந்ததால் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
பொதுத் தளங்களில் செயல்படுபவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். யானையாகவே இருந்தாலும், ஒரு அடி சருக்கினால் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம்.
விரைவில் மாரிதாஸ் அவர்கள் பிணையில் வெளிவந்து, தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.
நம் இயக்கத் தோழர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். பொதுத் தளங்களில் மிகவும் நாகரிகமான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும்.
அறமற்ற விமர்சனங்கள் பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தும்!
தமிழ்த் திரைத்துறையின் தனிப்பெரும் சகாப்தமாக விளங்கிய இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த மனவேதனையை அளித்தது.
பாரதிராஜா என்ற தமிழ்மகன், தமிழர்களின் இயல்பான வாழ்வியல் நடைமுறைகளை எதார்த்தமாகத் தமிழ்த் திரைத்துறைக்குள் கொண்டு வந்த பெருமகனார். பாரதிராஜா திரைத்துறைக்குள் கால்பதிக்காமல் இருந்திருந்தால், தமிழ்த் திரைத்துறையின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை.
அவர் நம்மைவிட்டு பிரிந்தாலும், அவரது படைப்புகள் என்றென்றும் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு காலக்கண்ணாடியாகவும், கலைத்திறனின் பெட்டகமாகவும் நிலைத்து நிற்கும்.
பாரதிராஜா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது உறவுகளுக்கும், தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் உரிமைகளுக்காகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் எம் சி. ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று. அம்பேத்கருக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காக விடாது உழைத்த முன்னோடியின் நினைவு என்றும் தமிழர்கள் மனதில் நிலைத்திருக்கும்.
வாழ்க ராவ் பகதூர் எம் சி. ராஜா!
#நாதக#NTK என்றால் #Politicalbrokers
கட்சி ஆரம்பிக்கும் முன்பே அந்த கட்சியின் கொள்கை கோட்பாடுகள் எதுவும் தெரியாமல் தனக்கு தேவை என்றால் ஜால்ரா அடிப்பானுக,அந்த கட்சி தனக்கு ஆதரவு தரவில்லை என்றால் வாய்க்கு வந்தபடி அவதூறுகள் பேசி சொந்த கட்சியையே அழிச்சிக்குவானுக 👇#நாம்தமிழர்கட்சி 🤷
நமது இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நிறைவடைந்தது.
நிகழ்வில் கலந்துகொண்டு நம் தமிழ் சொந்தங்களை நினைவுகூர்ந்த மானத்தமிழர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து களமாடுவோம்!
தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!