#InternationalTextileSummit360: ஜவுளித் துறையில் தமிழ்நாட்டின் முதலிடம் தொடர ‘ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2025-26’ வெளியீடு
#USTarrif, #IndiaEUTradeDeal என முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு ஜவுளித்துறையின் எழுச்சிக்காக, கோவை மாநகரத்தில் நடைபெறும் சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360-ஐத் தொடங்கி வைத்தேன்.
915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 MoU-கள் கையெழுத்தாகும் இந்தச் சிறப்புமிகு மாநாட்டில், அதிநவீன நெசவு & பின்னலாடை இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சிமிகு புதிய அறிவிப்பையும் வெளியிட்டேன்!
#IndiaGlobalEducationSummit: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் #தமிழ்நாடு_அறிவுசார்_நகரம் அமைக்க அடிக்கல்!
உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும் நிலப்பரப்பாக #TamilNaduKnowledgeCity அமையும். நம் #DravidianModel வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது!
மேலும், @Cambridge_Uni, IIT-M, மெல்பர்ன் பல்கலைக்கழகம், @Adobe முதலியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் & விருப்பக் கடிதங்களும் இந்தியா சர்வதேசக் கல்வி மாநாட்டில் கையெழுத்தாகின.
இனி வரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்! #வெல்வோம்_ஒன்றாக!
@TNIndMin @TRBRajaa
திரு.வி.க. நகர் தொகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளைக் குறைந்த செலவில் நடத்திக்கொள்ள ஏதுவாக, @CMDA_Official சார்பில் கட்டப்பட்டுள்ள 'அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை'யைத் திறந்து வைத்து, 10 இணைகளுக்குத் திருமணத்தையும் நடத்தி வைத்து மகிழ்ந்தேன்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசின் அடுத்தடுத்த முன்னெடுப்புகளால், பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு, 2030-க்குள் $1 டிரில்லியன் பொருளாதாரம் எனும் இலக்கை அடைவது நிச்சயம்!
கிண்டியில் குழந்தைகளுக்கான மாபெரும் உயர்சிறப்பு மருத்துவமனை & ஆராய்ச்சி நிலையத்துக்கு அடிக்கல்!
417.07 கோடி ரூபாயில் கிண்டி கிங் நோய்த்தடுப்ப�� & ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமையவுள்ள இந்த மருத்துவமனை குழந்தை மருத்துவச் சிறப்புப் பிரிவு சேவைகளில் ஒரு ‘centre of excellence’-ஆகத் திகழும்!
ஆசியாவின் மருத்துவத் தலைநகர் சென்னைதான் என்பதற்கான மற்றுமோர் அடையாளம் #GuindyChildrensHospital!
#DravidianModel #வெல்வோம்_ஒன்றாக!
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்!
ஆயிரமாவத��� குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023)
2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசல��ர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024)
3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025)
4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில்...
இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை!
#DravidianModel = எல்லாருக்கும் எல்லாம்!
தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் காக்கப்பட, சிறுபான்மையினர் தொடர்ந்து சம உரிமையுடன் வாழ 2026 தேர்தலில் NDA வீழ்த்தப்பட வேண்டும்
#CAA, முத்தலாக் தடைச் சட்டம், #WaqfAmendmentBill, #SIR எனச் சிறுபான்மையினருக்கு எதிரான துரோகப் பட்டியல் நிறைந்ததுதான் NDA கூட்டணி.
ஒன்றிய அரசின் சதித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் எனத் துணிச்சலாக அறிவித்து, சிறுபான்மையினர் நலத்திட்டங்களின் பட்டியல் நிறைந்தது #DravidianModel அரசு.
பா.ஜ.க.வின் பிரிவினைவாத வன்முறை அரசியலுக்குத் துணைபோகும் அ.தி.மு.க.வை வரும் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும். எனதருமை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோழர்��ள் இதற்காக உறுதியேற்க வேண்டும்!
@IUMLTNOfficial #IUML_Mahalla_Jamaat_State_Conference
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசின் 5 ஆண்டுகால நலத்திட்டங்களால், மாநிலம் மட்டுமல்ல, நம் விளையாட்டு வீரர் - வீராங்கனைகளும் சாம்பியன்கள் ஆகியிருக்கிறார்கள். வருங்கால சாம்பியன்களுக்கும், அடுத்துவரும் திராவிட மாடல் 2.o அரசு, இன்னும் பல நலத்திட்டங்களை தந���து, நிச்சயம் உறுதுணையாக இருக்கும்!
#GlobalWomenSummit2026: தமிழ்���ாட்டின் #OneTrillionDollar பொருளாதாரம் எனும் பெருங்கனவில் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கவுள்ளார்கள்!
வளர்ந்து வரும் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு, அவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான ஆதரவுச் சேவைகளை உலக வங்கியின் உதவியுடன் வழங்கிடும் #TNWESAFE திட்டத்தினைத் தொடங்கி வைத்தேன்.
மேலும், தமிழ்நாட்டிலுள்ள 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கான கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் HPV தடுப்பூச�� செல��த்தும் திட்டத்தையும் தொடங்கி வைத்தேன்.
சமூகத்தில் சரிபாதியான பெண்களின் முன்னேற்றத்துக்காக #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்!
விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், தோழி விடுதிகள்… போன்ற எண்ணற்ற ம��ளிர் நலத்திட்டங்களின் வரிசையில் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டமும் #TNWeSafe சேர்கிறது.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில், பாலின சமத்துவம் - மகளிருக்கான பொருளாதார சுதந்திரம் ஆகிய லட்சியங்களை தமிழ்நாடு வென்றெடுக்கும்! வெல்லட்டும் மகளிர்! வளரட்டும் தமிழ்நாடு!
#களம்2026: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி vs NDA அல்ல; தமிழ்நாடு vs NDA!
மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியை, உடைந்து போனதை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திர���க்கிறது NDA. எந்த get-up-இல் வந்தாலும் அவர்களுக்கு Get Out-தான்!
அடுத்து, வாராவாரம் பிரமாண்ட மாநாடுகளைத் தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் நடத்த இருக்கிறோம். பிப்ரவரி 28 வரை தொகுதிகள்தோறும் #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டோம் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன். #InternationalWomensDay வரை @DMKWomensWing பரப்புரை உள்ளது.
#வெல்லும்_தமிழ்ப்பெண்கள்-ஏ புறப்படுங்கள்! #DravidianModel ஆட்சி தொடர உழைத்திடுங்கள்!
#வெல்வோம்_ஒன்றா���!
5 ஆண்டுக்கால திராவிட மாடல் அரசின் திட்டங்களால��, கல்வி - வேலைவாய்ப்பு… மூலம் #வெல்லும்_தமிழ்_பெண்கள்-ஐ உருவாக்கிய நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, வரும் 2026-லும் வெல்லவைக்க தமிழ்நாட்டு மகளிர் தயாராகிவிட்டனர்.
டெல்டாவில் ஓங்கி ஒலித்த, மகளிரின் ஆதரவுக்குரல், தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும். மகளிர் ��லத்திட்டங்கள் #திராவிடமாடல் 2.o-விலும் தொடரட்டும்!
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. த��ணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத��தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
#LanguageMartyrsDay #StopHindiImposition
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று!
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், ஊர்வலமாகச் சென்று சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன், அன்னை தருமாம்பாள் நினைவிடங்களில் மரியாதைச் செலுத்தினோம்.
தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்து ஆதிக்க இந்தியை விரட்டி அடித்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் சொல்லி முழக்கமிட்டோம்!
மும்மொழிக்கொள்கை என்று மீண்டும் முற்றுகையிடும் பாசிஸ்ட்டுகளுக்கும் - அவர்கள் பாதம் தாங்கும் அடிமைகளுக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம்.
இந்தித்திணிப்பை எந்நாளும் எதிர்ப்போம்!
#தமிழ்_வாழ்க
#தீ_பரவட்டும்