பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய
யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும்!
=========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கண்டனம்!
=========================================
இலங்கை நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக உள்ள யாழ்ப்பாணம் இராமநாதன் அருச்சுனன் என்ற நபர், நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை சுட்டுத்தள்ளுவேன் என்றும், இழிவுபடுத்தியும் பேசியதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழினப் பேரழிவு தமிழீழத்தில் 2009 – மே மாதம் நடந்த பின், அது குறித்து இரங்கல் கூட்டம் நடத்தவோ, கண்டனக் கூட்டம் நடத்தவோ தமிழ்நாட்டில் அனுமதியில்லை. ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் சிங்கள வெறியர்கள் படுகொலை செய்தபின், வெளிப்படையாக அழுவதற்குக் கூடத் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை! இந்திய ஏகாதிபத்தியக் காங்கிரசு – கங்காணி தி.மு.க. கூட்டணி ஆட்சி, அவ்வளவு கெடுபிடிகளைச் செய்தது.
ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கவோ, தலைவர் பிரபா.கரன் படத்தை வெளிப்படையாக வைக்கவோ அவர் பெயரை உச்சரிக்கவோ தமிழ்நாட்டில் அனுமதி இல்லை! அந்தக் கொடுமையை எதிர்த்து, பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைத் திரட்டி தமிழீழப் படுகொலைகளைக் கண்டித்துக் கூட்டம் நடத்தியும், வெளிப்படையாக பிரபா.கரன் படத்தை வைத்து, அவரை எங்கள் தலைவர் என வணங்கவும் நடைமுறை அனுமதியை (Defacto permission) பெற்றுத் தந்தவர் செந்தமிழன் சீமானும், அவர்கட்சி பிள்ளைகளும் ஆவர்!
இலங்கையில் தமிழின அழிப்பின் தலைமைக் குடும்பமான இராசபட்சே குடும்பத்தின் கொத்தடிமைதான் இந்த இராமநாதன் அருச்சுனா என்று கேள்விப்படுகிறோம். நாமல் இராசபக்சே எனது சகோதரன் என வெளிப்படையாகச் சொன்னவர் இராமநாதன் அருச்சுனா! அப்படிப்பட்ட அந்த நபரை அழைத்து தோழர் திருமாவளவன் அவர்கள் 18.05.2026 அன்று சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தி இருப்பது மர்மமாக உள்ளது. இதில் மறைக்கப்பட வேண்டிய மர்மம் எதுவும் இல்லை என்றால், அந்நபரை உரையாற்ற அழைத்ததற்கான காரணத்தை தோழர் திருமா வெளிப்படையாகச் சொன்னால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வெளிச்சம் கிடைக்கும்.
சென்னை தலைமைச் செயலகம் வந்த இராமநாதன் அருச்சுனா தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களையும் நேரில் சந்தித்துப் பேசிவிட்டு, ஊடகங்களில் பல அவதூறுக் கருத்துகளையும் அள்ளிவீசிவிட்டுச் சென்றுள்ளார். இலங்கை திரும்பிய கையோடு, மே 18 அன்று அங்கு இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களர்கள் மனம் குளிரும்படி அண்ணன் சீமான் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டுமென்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
யாழ்ப்பாணத் தமிழர்கள் உட்பட – தமிழீழத் தமிழர்கள் அனைவரும் சிங்களக் கைக்கூலியாகச் செயல்படும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவை மேற்படி இழிவு பேச்சுக்காக மன்னிப்புக் கேட்கும்படி கோர வேண்டும்!
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
================================
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே!
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,
அன்பு வணக்கம்!
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.
நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!
ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!
உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!
இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பிரபாகரன் ,வீரப்பன் போன்றவர்களை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி வருகிறது மலையாள சினிமா.
சட்டம் அவர்கள் செய்ததை தவறு என்று சொன்னாலும் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிப்பு இருக்கிறது.
நேரடியாக தமிழர்கள் மீது வன்மத்தை கக்க முடியாது எனவே மறைமுக காட்சிகளின் மூலம் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள் மலையாளிகள்
தமிழ்நாட்டில்தான் பிழைப்பு நடத்தி வயிற்றை நிரப்பிக்கொள்கிறார்கள் பிறகெதற்கு இந்த வன்மம் ?
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில்
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில்
கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம்
முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்?
மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா?
யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க,
கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அனீஸ் பாத்திமா அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது
தாக்குதல் நடத்திய திமுக நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில்
அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும்.
ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்?
ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து
இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும்.
இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அனீஸ் பாத்திமா அவர்களை திராவிட முன்னேற்றக் கழக அரம்பர்கள் தாக்கினார்கள். வேட்பாளர் அனீஸ் பாத்திமா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்க ள்நலம் விசாரித்தார்
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!
நாளை(23-04-2026) வாக்குப்பதிவு நாள்!
மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் மக்களுக்கு இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை என்பது வாக்குதான். வாக்கு ஒரு வலிமைமிக்க ஆயுதம்! அந்த ஆயுதத்தை அநீதிக்கு எதிராக நாம் தூக்க வேண்டும். இங்கே அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள், மருத்துவர்கள், சட்டம் படித்த வல்லுநர்கள், இந்திய குடிமைப் பணிபுரியும் ஆட்சியர்கள், கற்றறிந்த சான்றோர்கள், வரலாற்று ஆய்வறிஞர்கள் உள்ளிட்ட பெருமக்கள் நிறைந்து வாழ்கிற நம் நாட்டில் தவறாமல் நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்.
நாம் ஏன் வாக்கு செலுத்த வேண்டும் தவறான எண்ணம் நம்மில் எவருக்கும் எவருக்கும் தோன்றக்கூடாது. நாம் ஒருவர் வாக்கு செலுத்தி என்னவாகப் போகிறது? அதனால் ஏதேனும் மாறிவிடப் போகிறதா? என்கிற எண்ணம் எவருக்கும் வரக்கூடாது. ஒரே ஒரு வாக்கில் வென்ற நிகழ்வும் உண்டு. ஒரே ஒரு வாக்கில் தோற்ற நிகழ்வும் உண்டு. தனிமரம் தோப்பாகாது, சரிதான்; ஆனால், தனித்தனி மரங்கள் சேர்ந்துதான் தோப்பாகிறது! என்பதையும் மறந்துவிடக்கூடாது.
எவ்வளவு பெரிய கோலமாக இருந்தாலும், ஒரு புள்ளியில் இருந்துதான்
தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஒரு விதையிலிருந்துதான் முளைக்க வேண்டும். எவ்வளவு பெரிய காவியமாக இருந்தாலும் ஒரு எழுத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் ஒரு துளியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது போல, ‘மாறுதல்’ என்பதும் நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் இருந்துதான் உருவாக முடியும். மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனங்களில் புரட்சி உருவாக வேண்டும். அண்ணல் காந்தியடிகள் அவர்கள், ‘உலகில் எப்படிப்பட்ட மாறுதல் உருவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதை உன்னிலிருந்தே தொடங்கு’ என்கிறார். நான் என்னில் இருந்து தொடங்குகிறேன்.
நீங்கள் உங்களிலிருந்து தொடங்குங்கள். நாம் நம்மில் இருந்து தொடங்குவோம்.
வாக்கு செலுத்துவது என்பது மக்களாட்சி நாட்டில் ஒரு மகத்தான பொறுப்பு. அமெரிக்காவில் கருப்பின மக்கள் வாக்குரிமையைப் பெற 200 ஆண்டுகாலம் ஆனது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வாக்குரிமையைப் பெற 250 ஆண்டுகாலம் ஆனது. நம் நாட்டிலும் தொடக்கத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், சொந்தமாக நிலமோ, சொத்தோ இருப்பவர்கள் மட்டும்தான் வாக்களிக்க முடியும், படித்து பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி இன்றைக்கு குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்ற உயர்நிலையை நாம் எட்டியுள்ளோம். இந்த நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவர் முதல், கடைக்கோடியில் வாழும் கடைசி குடிமகன் வரை அனைவருக்கும் ஒற்றை வாக்குதான். ‘சனநாயக நாட்டில்
நாம் அனைவருமே சமம்’ என்ற சமத்துவ தத்துவத்தைப் போதிக்கும் ஒரு வலிமைமிக்க பேராயுதம்தான் நம் கையில் ஏந்தும் வாக்கு என்பதிலிருந்து, வாக்குரிமை எத்தனை மாண்புமிக்கது, மதிப்பிற்குரியது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசை தீர்மானிப்பது அரசியல். அதற்கான ஒரு அரிய வாய்ப்புதான் தேர்தல். நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகால எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற தலைமையை தேர்வு செய்கிற வாய்ப்பை நம் நாட்டின் மக்களாட்சி அரசமைப்பு நமக்கு வழங்கியுள்ளது. அந்த அரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் பெற்ற பிள்ளைகளுக்கு மணமகன், மணமகளை பார்த்து, பார்த்து, தேடித்தேடி தேர்வு செய்கின்றோம். சாப்பாடு, துணி, கைக்கடிகாரமா, கால் செருப்பா, எதுவொன்றிலும் நாம் நல்லதை, சரியானதைத்தான் தேர்வு செய்கின்றோம். அதுபோல, நாட்டை ஆள நல்ல தலைவரை தேர்வு செய்கின்ற வாய்ப்பு நமக்கு வந்துள்ளது. அதனை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் வாக்குச் செலுத்த வேண்டும். இதில் நாம் பொறுப்பற்று, அலட்சியமாக இருக்கக்கூடாது. நம்முடைய தாத்தாக்கள் காமராசர், கக்கன், ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர் என்று தூய்மையானத் தலைவர்களை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். மக்கள் அக்கடமையிலிருந்து விலகும்போது அயோக்கியர்கள் அந்த பதவிகளுக்கு தேர்வாகின்றனர். குண்டு வைத்து கொலை செய்வது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, முறைகேடாக சொத்து சேர்ப்பது வருமான வரி கட்டாமல் இருப்பது இவை தான் தேசத்துரோக குற்றம் என்று நீங்கள் நினைத்துள்ளீர்கள். இவை மட்டும் தேசத்துரோகமல்ல. (1/2)
அன்பு காரைக்குடி தொகுதி மக்களுக்கு... எத்தனையோ தேர்தல்களில் எண்ணற்றவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியிருப்பீர்கள்.
ஆனால் இத்தேர்தலில் முக்கிய பொறுப்பு உள்ளது. மண்ணிற்காகவும் , மக்களுக்காகவும் போராடும் செந்தமிழன் அண்ணன் சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்புவதே தலையாயக் கடமையாகக் கொள்ளுங்கள். இயற்கை வளங்களைக் காக்க, பல்லுயிர் வளத்தை மேம்படுத்த தன் குரலை உரக்க இம்மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்களின் பேரன்பை வாக்குகளாகச் செலுத்தி அன்பு அண்ணன் செந்தமிழன் சீமானை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#KaraikudiAssemblyconstituency #karaikudivoters #velvanvivasayi #karaikudintk @Seeman4TN@_ITWingNTK
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 20 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 இலட்சம் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே நிலைத்தத் தீர்வாகும்!
@CMOTamilnadu
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடிவிபத்தில் அங்கு பணிபுரிந்த 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு, ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மலிவாக உயிரிழப்பது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்து கொள்கிறார்கள். விதிமீறலும், பாதுகாப்பின்மையும்தான் பெரும்பாலும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்வதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். கடந்த 25 ஆண்டுகளில் பட்டாசு ஆலைகளிலும் கடைகளிலும் கிடங்குகளிலும் ஏற்பட்ட வெடி விபத்துகளில் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, பல நூற்றுக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழந்த பெருந்துயரம் இன்றுவரை நீண்டு கொண்டே வருகிறது.
பட்டாசு ஆலை விபத்துகளில் தந்தையையும், தாயையும் இழந்து தவிக்கும் குடும்பங்கள் எத்தனை? அதனால் கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் பிள்ளைகள் எத்தனை பேர்? பெற்ற பிள்ளைகளை பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்? இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் இக்கொடுமைகளை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கப்போகிறது? உரியப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், அடிப்படை விதிகளும் காற்றில் பறக்க விடப்படுவதும், அதனை அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு கையாளுவதும்தான் பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் கண்டும் காணாதிருக்கும் அரசின் மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.
மனித உயிர்களை பலி வாங்கும் இத்தகைய கொடும் வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க தமிழ்நாடு அரசானது பட்டாசு ஆலைகளை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேறு மாற்றுத்தொழில் உருவாக்கி கொடுத்து அவர்களின் மறுவாழ்விற்கு உதவிடுவதே நிலைத்த தீர்வாக அமையும் என்று அறிவுறுத்துகிறேன். மேலும், தற்போது விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடனடியாக நீதி விசாரணை செய்வதோடு, தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
கட்டனார்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 20 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு, தலா 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும், படுகாயமடைந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதியும், உரிய உயர் மருத்துவமும் வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சட்டமன்றத் தேர்தல் - 2026
இங்குப் போட்டி ஊழல்-இலஞ்சத்திற்கும், உண்மை-நேர்மைக்கும் தான்!
பணத்துக்கு வாக்கு!
இனத்துக்கு தூக்கு!
வாக்குக்குப் பணம் என்றால் மாண்புமிக்க ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.
கேடுகெட்ட பணநாயகம் பல் இளித்து சிரிக்கிறது. அதற்கு நாம் உடன்பட முடியாது. அது சரி வராது. அது ஜனநாயக துரோகம்.
பணம் அரசியல் ஆகும்போது அங்கு பண்பாடு ஒழுக்கம் செத்து போகும்.
பணம் அரசியலானால் அங்கு மக்கள் சேவை செத்து, இலாபத் தேவை வந்துவிடும்,
சாதி அரசியலானால் அங்கு சகோதரத்துவம் செத்துவிடும்,
மதம் அரசியலானால் மனிதநேயம் செத்துவிடும்,
எல்லா தடைகளையும் தாண்டி வெல்வதுதான்
சாதனை!
எல்லா சோதனைக்கும், எல்லா வேதனைக்கும், எல்லா காயங்களுக்கும் ஒரே மருந்துதான் சாதனை!
சாதனைக்கு ஒரே வழி கடுமையான உழைப்பு!
உழைப்பின் பரிசுதான் வெற்றி!
வெற்றியைத் தொடுவோம்!
நம்பிக்கையோடு களத்தில் நில்லுங்கள்!
புரட்சி எப்போதும் வெல்லும்!
நம் வெற்றி அதை சொல்லும்!
நம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!
நாம் தமிழர்!
#வெல்வான்_விவசாயி
சட்டமன்றத் தேர்தல் 2026!
19-04-2026 அன்று மாலை காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, தேவகோட்டை
ஒத்தக்கடை பகுதியில் விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வாகனப் பரப்புரை மேற்கொண்டபோது.!
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே#வாக்களிப்பீர்_விவசாயி
வெயில் கொளுத்திகிறது. ஆனாலும், அவரின் பேச்சை விலகாது நின்று கேட்கிறார்கள்..
இளைஞர்கள் உட்பட.. மேற்கூரை இல்லாது 360* சுற்றி இடைவிடாது பேசுகிறார்..
அசாத்திய உழைப்பு!
இன்று சென்னையில் 8 தொகுதிகளில் பரப்புரை முடித்து இரவே காரைக்குடி பயணம்.
எனக்கு தெரிந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் பயணப்படுகிறார்.. தெளிவான திட்டமிடல்..தேர்ந்த அணுகுமுறை!