#வன்னியர்களே#சிந்தியுங்கள்
வன்னியர்களின் விரோதி திமுக..
வன்னியர்கள் வேலைவாய்ப்பிலும். கல்வியிலும் முன்னேறிவிடுவார்கள் .
என்று 10.5% இட ஒதுக்கீடுக்கு. முட்டுக்கட்டையாக இருக்கும்.
திமுகவின் இரட்டை வேடம்... அம்பலமாகியுள்ளது..
மீண்டும், மீண்டும் துரோகம் செய்யக் கூடாது : போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனே உயர்த்த வேண்டும்!
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்; 109 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கோட்ட, மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள் முன்பு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நாளையும் தொடரவிருக்கிறது.
தமிழ்நாட்டில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு இழைக்கப்படுவது பெரும் அநீதி ஆகும். பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம் ஆகும். ஆனால், அரசு வகுத்த சட்டத்தை, அரசே மீறி 21 மாதங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க மறுப்பது பெரும் துரோகம் ஆகும்.
அதேபோல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் இப்போது வழங்கப்படும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட 60% அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கூட அதை செயல்படுத்தாத திமுக அரசு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே இது காட்டுகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடன் ஒப்பிடும் போது, மின்சார வாரியம் அதிக நஷ்டத்திலும்,கடனிலும் இயங்குகிறது. ஆனால், மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட அவர்களுக்கான அகவிலைப்படியை 50 விழுக்காட்டிலிருந்து 53 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கக் கூடாது. அவர்களுக்கும் உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்குவதுடன், பணி ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே?
தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில்
இன்னொரு வேடமா? மக்களை ஏமாற்றக் கூடாது!
2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
2009-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அத்துடன் ரூ.1000 முதல் ரூ.2500 வரை பணமும் சேர்த்து வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.1000 பணம் நிறுத்தப்பட்டதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், பருப்பு வகைகள், கோதுமை, உப்பு உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்பட்டன. அவை தரம் குறைந்தவையாக இருந்ததாகவும், அவற்றின் கொள்முதலில் ஊழல் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அந்தப் பொருட்களுக்குப் பதிலாக மீண்டும் ரூ. 1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் ரூ.1000 நிறுத்தப்பட்டிருக்கிறது. இது சரியல்ல.
2024-ஆம் ஆண்டில் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ.1000 பணம் கொடுத்த தமிழக அரசு, 2025ஆம் ஆண்டில் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது. 2026-ஆம் ஆண்டு தான் தேர்தல் வரும் என்பதால் அப்போது ரூ.1000 வழங்கி மக்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல்.
நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டிய மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக மக்களை தமிழக அரசு தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் திமுகவின் இரட்டை வேடம் ஆகும்.
கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
@CMOTamilnadu