அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய C. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர், கட்சியின் பொதுச் செயலாளர் N. ஆனந்த ஐயா அவர்களின் ஆலோசனைப் படி வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மருத்துவர் சுதாகர் MLA மற்றும் மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு.நவீன் அவர்களின் தலைமையில் நேற்று (19/06/2026, வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய கழக தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay