90 seconds of goosebumps.
Pure ecstacy.
மணிரத்னம் திரைக்கதை
சுபாஷ் இயக்கம்
#இளையராஜா#விஜயகாந்த்
என மொத்தமாய்
அதிர வைத்திருப்பார்கள்.
திரைப்படம் பார்த்த ஒவ்வொருவரும் ஆவலாய் எதிர்பார்த்த திருப்பம்💥
கேப்டன் பிறந்தநாளுக்கு அவர் பாடல்கள்தான் நினைவுகூறனுமா
#நம்ம_இப்படிக்கா_போவோம்
அமெரிக்கா என்ற மாயை
ஒருவரது நல்ல வாழ்க்கையின் எண்ணங்களை மாற்றி விடும்
அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரி��்துகொண்டு செல்லுங்கள்.
அவை:
1. திரும்ப வரமாட்டீர்கள்…
இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு.
போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.
2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும்.
எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.
3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும்.
என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர்....உங்க தேசம்)
4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும்.
நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள். இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.
அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உ���்ள சிறிய டவுன். ��ங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.
24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…
அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.
ஏன் போகலை?
எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.
கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளம���க செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.
- சுஜாதா
ப���ித்ததில் என்னை மிகவும் பாதித்தது. அமெரிக்க கனவில் இருக்கும் என் மகனிடம், இதை சொன்னபோது, யோசிக்க ஆரம்பித்தான். எத்தனை தலைமுறைக்கும் இது பொருந்தும்.
Copy paste facebook 🙏
A temple where all the mistakes are forgiven.
An ancient Shiva temple which is revered as sacred place to seek forgiveness for unintentional mistakes and past karmic actions. Shiva is worshipped in 3 forms here, Bhrammapureeswarar, Uma Maheswarar, and Bhairavar (Sattanathar)
Temple is associated with the legend of child Sambandar is fed by Devi Parvati on the banks of the temple tank.
தினம் ஒரு திருமுறை-திருப்பாடல் 🙏
முதலாம் திருமுறை. 14ஆவது பதிகம். திருஞானசம்பந்தர் பாடியது.
நாடு: பாண்டிய நாடு
தலம்: திருகொடுங்குன்றம் (பிரான்மலை)
சுவாமி: கொடுங்குன்றநாதர்
அம்மன்: குயிலமுதநாயகி
பாடல்: 01:014:01 - கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை
பாடல் 01:
வானிற்பொலி வெய்தும்மழை
மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேரு��்குளிர்
சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி யைந்தும்மமர்ந்
தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு
மேயான்திரு நகரே.
பொருள்:
"வானத்தில் தவழும் மேகங்களைக் கிழித்துக் கொண்டு, பிறை நிலவைத் தொடும் அளவுக்கு மிக உயரமாக வளர்ந்த குளிர்ந்த மலைச்சாரலைக் கொண்டது திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை). இத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், பசுவின் ஐந்து பொருட்கள் எனப்படும் பஞ்சகவ்யத்தை (பால���, தயிர், நெய் முதலியன) அபிஷேகமாக ஏற்று, உலகம் போற்றத் திருநடனம் புரிபவர். அவர், தேன் போன்ற இனிய சொற்களைப் பேசும் உமையம்மையோடு இணைந்து வீற்றிருக்கும் அழகிய திருநகரம் இதுவே ஆகும்." என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
ஓம் நமசிவாய வாழ்க 🔥
மௌரியப் பேரரசிடம் கடற்படை இருக்கவில்லை. ஆனால் தமிழரசுகள் கடற்படைகளை கொண்டிருந்தன - வின்சென்ட் சுமித்
தமிழரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாக இருந்தன. இது குறித்து வின்சென்ட் சுமித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், “தமிழ் அரசுகள் வல்லமை மிக்க கடற்படைகளை வைத்திருந்தன. கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன” எனத் தனது இந்திய வரலாறு என்கிற நூலில் குறிப்பிடுகிறார்.
அவர் தனது அசோகர் என்கிற மற்றொரு நூலில் “தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளன” எனக் குறிப்பிடுகிறார். அதே சமயம் மௌரியப்பேரரசிடம் கடற்படை இருந்ததற்கான சான���றுகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிடுகிறார்.
அன்று இந்தியாவில் தமிழரசுகளிடம் மட்டுமே கடற்படைகள் இருந்தன.
கடற்பகுதியையும், கடல்வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்டது. கடல் வணிகத்தைப் பாதுகாப்பதில் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்துள்ளது. அதனால்தான் தமிழரசுகளுக்கிடையே கடற்போர் எதுவும் நடைபெறவில்லை.
வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வணிகத்தைப் பாதுகாக்கவும், வடக்கிலிருந்த அநாகரிக மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கவும், மொழிபெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி ஒன்று மிக நீண்ட கால��ாக இருந்துள்ளது.
நெடியோன் எனப்படும் நிலந்தரு திருவிற்பாண்டியன் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை கொண்டு “சாவகம்” எனப்படும் இந்தோனேசியா தீவுகளை கைப்பற்றிக் கொண்டான் என அப்பாதுரையார் குறிப்பிடுகிறார்.
கலிங்க (இன்றைய ஒரிசா) மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு (கி.மு. 165) மூலம் 1300 ஆண்டுகளாக தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி இருந்து வந்ததையும், அவர்கள் கலிங்கத்த���ல் பித்துண்டா என்ற அதன் இரண்டாவது பெரிய துறைமுகத்தைத் தங்கள் காவல் அரணாகக் கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.
இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரைகளில் இருந்த பெரும்பாலான துறைமுகங்களின் பெயர்கள் தமிழில் இருப்பதும் அறியப்பட்டுள்ளது. இச்செய்திகள் இந்தியாவின் கிழக்கு மேற்குக் கடற்கரைகளையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தமிழரசுகள் தங்கள் பெரும் கடற்படை கொண்டு தங்கள் வணிகக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும் உலகின் பெரும் கப்பல்களையும், பெரும் துறைமுக நகரங்களையும் கொண்டு பழந்தமிழரசுகள் தென் சீனா முதல் பாரசீகம் வரையான கடற்பகுதியில் தெற்காசியா முழுவதற்குமான கடல் வல்லரசாக இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே திகழ்ந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு 1500 வருடங்களுக்கு முன்பே பழந்தமிழரசுகள் தெற்காசியா முழுமைக்குமான கடல் வல்லரசாக இருந்தனர்.
#கடற்படை
#தமிழ்ர்வரலாறு🔥💪
#மூவேந்தர்கள்
ஆடித் திருவாதிரையோன்
இராஜேந்திர சோழன்.
தென்னிந்தியா முழுவதையும் கைக்கொண்டு வட இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தி கடல்கடந்து சென்று தென்கிழக்காசியா நாடுகளை வென்ற இராஜேந்திரன்.
தனது வெற்றி சரிதத்தை கல்வெட்டில் சாசனங்களாகப் பொறிக்கும்போது செந்தமிழ்ச் சொற்களில் அழகியப் பாடலாக வட��த்துள்ளார்.
இதை வாசிக்கும்போது ஏதோ ஒரு சங்க இலக்கியப்பாடல்களை வாசிக்கும் உணர்வு. அழகுத் தமிழில் அற்புத உவமைகளுடன் கூடிய செந்தமிழ் கல்வெட்டு வரிகள்.
வெற்றி சரிதையும்
அதன் எளிய பொருளும்..
"ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர இரு நில
மடந்தையும் பொர்சய பாவையுந் சீர்தனிச்
செல்வியுந் தன்பெருந் தேவியராகி இன்புற "
( இலக்குமி நிலைபெற்று வாழ, பெரிய பூமி தேவியும் வீரலட்சுமியும் கீர்த்திக்கு உரியவளும் தனக்கே உரிமை கொண்ட)
"நெடியுது இயல் ஊழியுள் இடைத்துறை நாடும் தொடர்வன வேலிப் படர் வனவாசியும் கள்ளிசூழ் மதில் கொள்ளி பாக்கையும்
நண்ணற்கு அரு முரண் மண்ணைக்கடக்கமும்."
(நெடுநாளாக நிலைபெற்ற வருகின்ற ஊழியுள் உள்ள இடதுறை நாடு. தொடர்ந்து படர்ந்த வனத்தை வேலியாகக் கொண்ட வனவாசி. காட்டரணை சூழ்ந்த மதில்களைக் கொண்ட கொள்ளிப்பாக்கை. போர் செய்து வெல்வதற்கு கடினமான மண்ணைக்கடக்கம்)
"பொருகடல் ஈழத்து அரசர் தம்முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கு எழில் முடியும் முன் அவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்தர முடியும் ��ந்திரன் ஆரமும் தெண்டிரை ஈழமண்டலம் முழுவதும்."
(கடல் அலையால் மோதப்படும் இலங்கை அரசர் முடியும், அவர் தேவிமுடியும் இலங்யில் முன்னர் பாண்டியன் வைத்த சுந்தரமுடியும் இந்திரனது ஆரமும் கொண்டு ஈழம் முழுதும் வென்று )
"எறிபடைக் கேரளன் முறைமையில் சூடும்
குலதனமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கு அதிர் வேலைத் தொல் பெருங்காவல் பல் பழந்தீவும் செருவில் சினவி இருபத்தொருகால��� அரசுகளை கட்ட பரசுராமன் மேவருஞ் சாந்திமத் தீவு அரண் கருதி இருத்திய செம்பொன் திருத்தகு முடியும் "
(ஈட்டிப்படை சேரர்களை வென்று அந்நாட்டு மன்னர்கள் வழி வழியாக சூடும் சேரனது மணிமுடியையும் மிகுந்த பிரகாசமான சேரனது மாலையையும் கைக்கொணடு கடல்களால் காக்கப்பட்ட சங்குககள் ஒலி எழுப்பும் தீவுகளையும் கைப்பற்றி,
இருபத்தியொரு முறை வெற்றி கண்ட பரசுராமனால் சாந்திமத்தீவில் வைக்கப்பட்ட ��ெம்பொன் முடியையும் கைக்கொண்டு
" பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டு ஒளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடு பீடியல் இரட்டப்பாடி ஏழரை இலக்க��ும் நவநிதி குலப்பெரு மலைகளும்."
(முயங்கியில் முதுகிட்டு ஓடினான் ஜெயசிங்கன். அளப்பெரும் புகழோடு பெருமை பொருந்திய இரட்டபாடி ஏழரை இலக்கத்தை வென்று)
"நவநிதி குலப்பெரு மலைகளும் விக்கிரம வீரர் சக்கரகோட்டமும் முதிர்பட வல்லை மதுரை மண்டலமும் காமிடை வளை இய நாமணைக் கோணமும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடை பழன மாசுணி தேசமும் அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகர் அகவையில் சந்திரன் தொல் குலத்து இந்திரதனை விளை அமர்க்களத்து கிளையொடும் பிடித்து
பலதனத் தொடுநிறை குலதனக்குவையும்
கிட்டரும் செறிமிளை ஒட்ட விஷயமும்.பூசலர் சேரும் நற் கோசலர் நாடும் தன்மபாலனை வெம்முனை அழித்து
வண்டு உறை சோலை தண்ட புத்தியும்
இரணசூரனை முறன் அறத்தாக்கிதிக்கு அணை கீர்த்தி தக்கணலாடமும்
கோவிந்தசந்தன் மாஇழிந்து ஓடத்
தங்காத சாரல் வங்காளதேசமும்
தொடுகழல் சங்கொடு அடல்மகிபாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித்தருளி
ஒண்திறல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிபுனல் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்."
(ஒன்பதுவகையான நவரத்தினங்களை உடைய சிறந்த மலைகளும் வலிமை பொருந்திய வீரர்களைக் கொண்ட சக்கரக்கோட்டத்தை வென்று பூஞ்சோலைகள் மிகுந்த நாமனைக்கோணை என்னும் ஊரை வென்று பசுமையான இலைகளையும் வயல்களையும் கொண்ட மாசுணி தேசத்தை வென்று நிறைந்த பொருட் குவியல்களைக் கொண்ட ஒட்டதேசத்தை வென்று பிராமணர்கள் வாழும் கோச���த்தை வென்று தன்மபாலனை போர்முனையில் அழித்து
வண்டு உறையும் சோலைகள் நிரம்பிய தண்டபுத்தியை வென்று இரனசூரனை தோற்கடித்து செல்லும் திசையெங்கும் கீர்த்திகொண்ட தக்கணலாடத்தை கைப்பற்றி கோவிந்த சந்தனை குதிரையிலிருந்து இறங்கியோட செய்து எந்நேரமும் மழை பொழியும் வங்காளதேசத்தை வென்று போர்க்களத்தில் மயிபாலனை அவன் அணிந்திருக்கும் ஆபரணங்களுடன் சிறைபிடித்து அவன் பெண்டிர் பண்டாரமும் கவர்ந்து நித்தில நெடுங்கடலான உத்திரலாடத்தை அடைந்து
ஓடுகின்ற கங்கை நீர்ப் பகுதியை அடைந்து.)
"அலைகடல் நடுவுள் பல கலம் செலுத்திச் சங்கிராம விசயோத்துங்க வர்மன்
ஆகிய கடாரத்தரசனை வாகையும் பொருகடல் கும்ப கரியொடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகந்கர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத்தோரணமும் மொய்த்தொளிர் புனைமணிப் புதவவும் கனமணிக் கதவமும் நிறைநீர் விசயமும் துறை நீர்
1.தி.ஜானகிராமனின் மோக முள்
2.ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
3.க.நா.சு வின் பொய்த்தேவு
4.கரிச்சான் குஞ்சின் பச��த்த மானிடம்
5.பிரபஞ்சனின் மகாநதி
6.கல���கி கள்வனின் காதலி
7.நா.பா வின் குறிஞ்சி மலர்
8.சுஜாதாவின் ஶ்ரீரங்கத்து தேவதைகள்
9. எஸ் ரா தேசாந்திரி, இலகற்ற பயணி etc