@jackiecinemas சிறப்பான கருத்து கரூர் விசயத்துல ஸ்டாலின் அவர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ளாமல் கொஞ்சம் சட்டத்தின் படி செயல்பட்டிருந்தால் இன்று நீங்கள் கூறிய 65% மட்டுமல்ல 85% மக்கள் நிம்மதி அடைந்து இருப்பார்கள்
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்....
இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்...
கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்...
இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்....
ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்...
எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை...
ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்....
செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்...
ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்....
எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை...
41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை....
ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்...
ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை...
மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான்.
அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று
திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்.....
இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்...
உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
அப்பாவி மக்கள் 41 பேர்...
அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்...
ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை....
அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க?
ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான்.
எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot
இன்று, SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, SRM கல்விக்குழும வளாக நிர்வாகி, கவிஞர் இரா.அருணாச்சலம் அவர்கள் எழுதிய "யானைக் காதல்" நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது.!
இந்நிகழ்ச்சியில் SRM கல்விக் குழுமத்தின் நிறுவன வேந்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தா.இரா.பாரிவேந்தர், சூழலியல் செயற்பாட்டாளர் திரு ஓசை காளிதாசன் அவர்கள் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.!
முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில் உழவர் சாவு வேதனையளிக்கிறது:
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்!
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சிமுளை கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சோமசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறு, குறு விவசாயியான சோமசுந்தரம் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் தமது நிலத்தை அடகு வைத்து ரூ.85 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமது வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனால், இரு முறை கடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும் ரூ.75 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டன. சோமசுந்தரம் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
உழவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் கடந்த 4-ஆம் தேதி உழவர் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். போராட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய அவர், அடுத்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம்.
தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்திருந்த சோமசுந்தரம் மட்டுமின்றி லட்சக்கணக்கான உழவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆகியிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்தது உழவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரித்திருக்கிறது. அதற்கான காரணங்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் மன உளைச்சலைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
எனவே, தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மன உளைச்சலாம் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
@abpnadu மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஈழத்தில் தமிழின படுகொலை செய்தது போல் கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் தண்ணீர் கிடைக்காமல் படுகொலை செய்ய மேகதாது அணை கட்ட துடிக்கிறது
பூம்புகாரில் நடைபெறும் "மேகதாது அணை எதிர்ப்பு" விழிப்புணர்வு பரப்புரையில் தலைவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களை பார்த்து தான் கொண்டு வந்த பதாகையை உயர்த்தி பிடிக்கும் சிறுவன்.!
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், பிலிகுண்டுவில் இருந்து பூம்புகார் வரை நடைபெறும் நான்கு நாட்கள் பயணத்தில், கும்பகோணத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றிய போது.!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #MekadatuRally #CauveryRights #TamilNadu #PMK