தொழிற்சாலைகள் நிறைந்த கோவை மாவட்டத்தை போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு மாநகரமாக உருவாக்கிட அதிகமாக பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
கோவையில் நவீன பேருந்து நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூரில் இன்று (25.6.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.
இன்று (25.6.2020) கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில், பேருந்தினுள் சென்று பயணிகளிடம் "கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியம்" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.
இன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் தூர்வாரப்பட்ட ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் குறித்த பணி விளக்க கையேட்டினை நான் வெளியிட மாண்புமிகு அமைச்சர் @SPVelumanicbe அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும் போது தங்களின் குடியிருப்பில் மற்றும் தங்களின் குடியிருப்புக்கு அருகில் முதியோர்கள் இருந்தால் அவர்கள் வெளியே செல்லாத வாறு அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க உதவுங்கள் பொள்ளாச்சி.V. ஜெயராமன்