நேற்று மாலை திருச்சியில்,
அரசியல் என்பது விளம்பரத்திற்காகவும், புகழுக்காகவும், பகட்டுக்காகவும் அல்ல; மக்களுக்காகத் துணிச்சலுடன் களத்தில் நின்று செயல்படுவதுதான் உண்மையான அரசியல், தலைமைத்துவம் என்பதை தன் செயலால் உணர்த்தும் அண்ணன் @duraivaikooffl அவர்களை சந்தித்து மகிழ்ந்தோம்.
#mdmk
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவலைச் சேர்ந்த தோழர் ரெங்கநாதன் மணி அவர்கள், இந்தோனேசியாவிற்குப் பணிக்குச் சென்ற நிலையில், 26 நாட்களுக்கும் மேலாகக் குடும்பத்தினருடன் தொடர்பின்றி சிக்கித் தவித்தார்.
இது தொடர்பாக, பத்திரிகையாளர் விஜயகோபால் அவர்களும், ரெங்கநாதன் மணி அவர்களின் மனைவியும் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மற்றும் இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதரகம் ஆகியோரிடம் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாகத் தொடர்ந்து வலியுறுத்தினேன்.
இதன் பயனாக, கடந்த 30.10.2026 அன்று அவர் பத்திரமாகத் தனது சொந்த ஊர் திரும்பினார்.
நேற்று (03.11.2026), ரெங்கநாதன் மணி அவர்கள் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எனது அலுவலகத்திற்கு நேரில் வந்து நன்றி தெரிவித்தார். அவர்களுடன் பத்திரிகையாளர் விஜயகோபால் அவர்களும் வந்திருந்தார்.
வெளிநாடுகளில் பல்வேறு காரணங்களால் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு, பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி தி.மு.க.
04.11.2026
#DuraiVaiko #mdmk #tvk #congress #vck
@DrSenthil_MDRD டேய் பைத்தியம் துரை வைகோ வெற்றி பெற்றது சொந்த சின்னம்,அவர் எதுக்கு ராஜினாமா செய்யனும்.
திமுக போட்ட ஓட்டு என்பதால் ராஜினாமா செய்யனுமா டா? சரி அப்ப அதே நாடாளுமன்ற தொகுதய உள்ளடக்கிய திருச்சியில் நீங்க எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றிங்க?
செத்த பயலே பேசனும் னு பேசி அசிங்கப்படதா
இன்று (03.04.2025) நாடாளுமன்ற மக்களவை பூஜ்ஜிய நேரத்தில் எனக்கு வழங்கப்பட்ட 30 விநாடிகளில், கடந்த 30 ஆண்டுகாலமாய் துயரப்படும் தமிழ்நாடு மீனவர்களுக்காக குரல் கொடுத்தேன்.
அப்போது பேசுகையில், நேற்று (02.04.2025) தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய கச்சத்தீவு மீட்பு தீர்மானத்தை சுட்டிக்காட்டி மாண்புமிகு முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.
எனது சிற்றுரை பின் வருமாறு:
தமிழக மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமாய் உள்ள மீன் பிடி தொழிலை காப்பது மூலம் மட்டுமே அவர்களை காக்க முடியும் என்று நாம் நன்கறிவோம். அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க, அனைத்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கச்சத்தீவை மீட்பது ஒன்றே மீனவர்களை காக்கும் ஒரே வழி என்று ஒருமித்த குரலில் தீர்மானத்தை நிறைவேற்றித் தந்துள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி அவர்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். இலங்கையுடன் போடப்பட்ட 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி அவர்கள் நடந்துகொள்ளவில்லை. எனவே அந்த ஒப்பந்த்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டு தரும் நடவடிக்கையில் உறுதியோடு செயல்பட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களுக்கான இறுதித் தீர்வை எட்ட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
03.04.2025
புதுடெல்லி
#parliamentsession2025 #parliamentzerohour #tamilfishermans #LakshadweepIslandsINDIA #vaiko #trichymp #MKStalin #UdhayanidhiStalin #EVVelu #DuraiVaiko #AnbilMaheshPoyyamozhi #dmk #mdmk #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #INDIAllaince #CMOTamilNadu
அண்ணன் துரைவைகோ அவர்களின் #HBDDuraiVaiko பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
#HBDDuraiVaiko#Vaiko#mdmk
நேற்று 02.04.2025 நள்ளிரவு வக்பு சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..!
நன்றி சபாநாயகர் அவர்களே,
இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை, ஜனநாயக மாண்புக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை, மதசார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் எதிர்க்கிறேன்.
இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாத் வ அக்ரளுல்லாஹ கர்ளன் ஹஸ்னன் யுளா அஃபு லஹும் வலஹும் அஜ்ருன் கரீம்
என்று அரபி மொழியில் திருகுர்ஆன் வசனம் 57:18 சொல்கின்றது.
ஏழை எளிய ஆதரவற்றோருக்கு தானதர்மம் உள்ளிட்ட தொண்டுகளை செய்வது, இறைவனுக்கே கடன் கொடுப்பதற்கு சமமானது என்பதுதான் இதன் பொருள்.
திருகுர்ஆனில் உள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளை செயல்படுத்துவதற்கும்,
இஸ்லாமியர்கள் இறை பணிகளை மேற்கொள்வதற்கும் தான் வக்பு சொத்துகள் உருவாக்கப்பட்டன.
இந்த வக்பு சொத்துகளின் மூலம் தான் மசூதிகள், தர்காக்கள், மதரசாக்கள், கபர்ஸ்தான்கள் உருவாக்கப்பட்டன.
பல வக்பு சொத்துக்களின் பயனாளிகளாக இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள் உள்ளிட்ட எல்லா மதத்தினரும் உள்ளனர்.
வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என பலரும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பல வக்பு சொத்துகளில் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டு இடங்களும் உள்ளன.
இஸ்லாமிய மன்னர்கள், செல்வந்தர்கள் மட்டுமல்ல, எங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு சமூகத்தினரின் கொடையாளர்களும் நல்லெண்ண அடிப்படையில் இஸ்லாமியர்களின் ஆன்மீகப் பணிகளுக்காக தங்கள் சொத்துக்களை வக்பு செய்து தானமாக கொடுத்துள்ளனர்.
இது எங்கள் தமிழ் மண்ணின் வரலாற்றுச் சிறப்பாகும். இதுபோல் நாடெங்கிலும் பல உதாரணங்களை கூற முடியும்.
இவை எல்லாம் நம் நாட்டின் ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும் வெளிகாட்டுகிறது .
வக்பு சொத்துகளை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளதால் நான் இந்த வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
இந்த வக்பு சட்ட திருத்த மசோதாவில் உள்ள பிழைகளில் மற்றும் குழப்பங்களில் சிலவற்றை நான் இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
ஒருவரின் சொத்து வக்பு வாரியத்தில் உள்ளதாக கேள்வி எழுகிறபோது, அதை தெளிவுபடுத்தும் உரிமை வக்பு வாரியத்திற்கு உள்ளது. ஆனால் இந்த சட்டத்திருத்தத்தின் மூலமாக அந்த அதிகாரத்தை அவர்களிடம் இருந்து பிடுங்குவது என்ன நியாயம்?
வக்பு வாரிய தீர்ப்பாயம் தவறு செய்தால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லும் நடைமுறை உள்ளது. அப்படி இருக்கும் போது வக்பு வாரியத்துக்கு உள்ள தடையில்லா சான்றிதழ் கொடுக்கும் அதிகாரத்தை பறித்து, மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்க நினைப்பது தவறானது.
அது போல, வக்பு வாரிய நிர்வாகத்திற்கு சொத்துக்களை தானம் செய்பவர்கள், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைபிடிக்கும் நபர்களாக இருக்க வேண்டும் என்று புதிய சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடையாளர்களை மதத்தின் அடைப்படையில் பிரிப்பது அபத்தமானது. இது வக்புவின் நோக்கத்தை அடியோடு சிதைக்கும் வகையில் இருக்கிறது.
மேலும், வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத இரண்டு மாற்று மதத்தினரை நிர்வாகிகளாக சேர்க்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனது வீட்டை பராமரிக்க என் குடும்பத்திற்கு தொடர்பில்லாத ஒருவரை யாராவது நியமித்தால் அதை நான் எப்படி ஏற்க முடியும்?
இஸ்லாமியர்களின் இறை சொத்துக்களான, வக்பு சொத்துக்களை இஸ்லாமியர்கள்தான் பராமரிக்க வேண்டும். அதுதான் நீதி. அவர்களுக்குதான் அதன் முழுமையான நோக்கங்கள் புரியும் .
திருப்பதி கோவில் நிர்வாகத்தில் ஒரு கிறிஸ்தவரை நியமிப்பதும், சீக்கியரின் பொற்கோவில் நிர்வாகத்தில் ஒரு இஸ்லாமியரை நியமிப்பதும் எவ்வளவு தவறானதோ அது போலதான் இதுவும். எனவே இதனை அறவே ஏற்க முடியாது.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே...
இந்த நாட்டின் விடுதலைக்காக லட்சோப லட்ச இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிரை தந்தார்கள், தங்கள் சொத்துக்களை போராட்டக் களங்களுக்கு வாரி வழங்கினார்கள் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
உலகில் உள்ள அத்தனை மதங்களும் நம்முடைய இந்திய திருநாட்டில் பின்பற்றப்படுகிறது. அதுதான் நமது இந்தியாவை உலகின் தனிச்சிறப்பு மிக்க நாடாக காட்டுகிறது. உலகம் நமது நாட்டை பெருமிதத்துடன் பார்க்கிறது .
#parliamentsession2025 #wafqamendmentbill2025 #wafq #wafqbill #WAFQBoard #vaiko #trichymp #MKStalin #UdhayanidhiStalin #EVVelu #DuraiVaiko #AnbilMaheshPoyyamozhi #dmk #mdmk #SoniaGanthi #RahulGanthi #PriyankaGandhi #Congress #INDIA #INDIAllaince #CMOTamilNadu
Warm birthday wishes to Shri Durai Vaiko ji, Lok Sabha MP from Tiruchirappalli (Tamil Nadu). Wishing you good health, well-being and long life in the service of the people.
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வில் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று மக்களின் நலனில், அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை தொடர வாழ்த்துகிறேன்.
The person who unfailingly and caringly conveys the message "Get medical insurance, live frugally" at every wedding function he attends is Durai Vaiko
#HBDDuraiVaikoMP
கரிசல்காட்டு மண்ணில் ஒன்றிய அரசின் கிராபைட் கனிமம் எடுக்கும் திட்டத்தை தன் முயற்சியினால் தடுத்து நிறுத்தி விவசாய நிலங்களை காத்தவர் துரைவைகோMP
#hbdduraivaiko