DMK period
POCSO -16,518
Rape -1,319
Murder -4,683
மொத்தம் - 22,520
And veeramani 13 children issue Kanimoli akka reaction 😷
TVK government oru fake news vanthaalum.. 👇🏻
செஞ்சியில் சிறுமி காணாமல் போய் இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் அந்தச் சிறுமி மீட்கப்படவில்லை. அதற்குள், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இன்னொரு சிறுமியைக் கடத்த முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஆறு மாதங்களாகியும் சிறிதும் பொறுப்பில்லாத இந்த தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் நிலையில், இப்போது குழந்தை கடத்தலும் அதிகரித்துள்ளது.
காணாமல் போன சிறுமியை இன்னும் மீட்க முடியாமல், இந்த தவெக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது?
உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும்.
இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.