Climax twist paathutu idhaan da cinema nu thonnuchu. Ktv days🫠
Brilliant performance from Nana Patekar & an unexpected one from Bharathiraja.
Any fans for this under-rated gem?
பாரதிராஜாவின் பெயரில் திரைக்கலைஞருக்கு அரசு விருது!
இயக்குனர் & நடிகர் சித்ரா லட்சுமணன் கோரிக்கை...
70களில் உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டத்தில் தான் பாரதிராஜா எனக்கு அறிமுகமானார். நான் பத்திரிகைத் தொடர்பாளராக பணியாற்றிய பல படங்களில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பத்திரிகையாளனாக படப்பிடிப்பு தளங்களில் செய்தி சேகரிக்க சென்ற போதெல்லாம் அவருடன் நெருக்கமாக பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்போதே அவரிடம் ஒரு "ஸ்பார்க்" இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் ஒரு காலகட்டத்திலே தமிழ் சினிமா உலகின் போக்கையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு இயக்குனராக அவர் இருக்கப் போகிறார் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
அவரிடம் இருந்த திறமையை மிகச் சரியாக கணித்த தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு" 16 வயதினிலே" படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு அளித்தது மட்டுமில்லாமல் சிவசமுத்திரத்திலே நடைபெற்ற அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பிலே
"கே பாலச்சந்தருக்கு நிகரான இயக்குனர் இவர்" என்று பாரதிராஜாவை பத்திரிகையாளர் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாரதிராஜா முழுக்க முழுக்க புது முகங்கள் நடிக்க "கிழக்கே போகும் ரயில்" என்ற பெயரில் தன் இரண்டாவது படத்தை உருவாக்கினார். தியாகராஜ பாகவதரின் :ஹரிதாஸ்" படத்துக்கு பின்னாலே மிக அதிக நாட்கள் ஓடிய பெருமையை அந்தப் படம் பெற்றது.
அந்தப் படத்தை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய ஒவ்வொரு படமும் தனி ரகம்.
நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து முதல் மரியாதை என்கின்ற காலத்தால் அழிக்க முடியாத காவிய படைப்பை உருவாக்கிய பாரதிராஜா எண்ணிலடங்காத நட்சத்திரங்களை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
நட்சத்திரங்கள் மட்டுமல்லாது பல தொழில் நுணுக்க கலைஞர்களை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு.
தென்னிந்திய சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்த இயக்குனர் இமயம் என்று நம்மிடையே இல்லை.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அந்த கரகரப்பான குரலை இனி நாம் கேட்க முடியாது என்று நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
மரணம் தவிர்க்க முடியாதது என்ற போதிலும் அவரது மறைவை அவ்வளவு எளிதில் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர் வாழ்ந்த விதம்.
தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனராக இருந்த போதிலும் எல்லோரிடமும் எளிமையாக பழகுகின்ற போக்கைப் பெற்றிருந்தவர் அவர்.
அவரது நினைவை போற்றுகின்ற விதத்திலே அரசு மரியாதையுடன் அவருடைய நல்லடக்கம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைக்கின்ற இந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிகின்ற திரைக் கலைஞரை தேர்ந்தெடுத்து அவருக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பெயரிலே
ஒரு விருதினை மாண்புமிகு தமிழக முதல்வர் வழங்க வேண்டும் என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
சித்ரா லட்சுமணன்
@CMOTamilnadu@imrajmohan@TVKVijayHQ
#BharathiRaja #RIPBharathiraja #TamilNews
தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப் போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டு சென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே
#BharathiRaja 💐
அம்பேத்கர் எந்த காலத்திலும் சுயசரிதை எழுதியது இல்லை. Waiting for visa கூட அவர் எழுதிய குறிப்புகள் தான். அம்பேத்கர் படத்தை பிடிப்பது, பெரியார் படத்தை பிடிப்பது எல்லாமே இன்றைக்கு சிம்பல் மற்றும் லிபரல் ஆட்களின் ஆதரவு கிடைக்க ஒரு வழி மட்டுமே. அம்பேத்கரை பற்றிய ஒரு கேள்வி கேட்டால் கூட இவர்களுக்கு பதில் சொல்ல முடியாது.
ஆனா அம்பேத்கர் என் தலைவர், நான் ஒரு போராளி என்பார்கள். அதன் மீடியா வெர்ஷன் தான் நீலம் என்பது. ஏன் இன்னும் வெளிப்படையாக சொன்னால் நீலம் என்பது ஒரு ஜாதி ஆட்களின் activity club. அங்கே நீங்கள் பார்ப்பனராக இருந்தால் கூட சேரலாம், ஆனால் அருந்ததியராக, தேவேந்திர குல வேளாளர் ஆக இருந்தால் சேரவே முடியாது.
ஒரு ஜாதி கிளப் எப்படி இயங்குமோ அப்படி தான் நீலம் இயங்குகிறது. பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தபோதும், ஜாதிக்காரனை எப்படி சாதிசங்கங்கள் பாதுகாக்குமோ அதை அப்படியே செய்த அமைப்பு தான் நீலம்.
அவர்களுக்கு அம்பேத்கர் குறித்து குறைந்தபட்ச புரிதல் இருந்தால் இந்த படத்தை போடுவார்களா.
உண்மையில் என்ன செய்வதென்று தெரியவில்லை! புரியவில்லை!
அப்பா இன்று அதிகாலை இயற்கையடைந்து விட்டார்!
எனக்கு எல்லா நல்லவைகளையும் தந்தார். அவர் இல்லாத தினத்தை மனம் ஜீரணிக்க மறுக்கிறது!
வந்துவிடுங்கள் அப்பா 😭