சாதி ஒழிப்பிற்காகவும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள்.
இந்நாளை அரசு விழாவாகக் கொண்டாடிட ஆணை பிறப்பித்து, இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபமும் அமைத்து அவரது நினைவைப் போற்றியது நமது #DravidianModel அரசு.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம்!
#ImmanuelSekaran
மின்வெட்டால் நானே பாதிக்கப்பட்டுள்ளேன் என்று த.வெ.க. பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், த.வெ.க. அரசின் நிர்வாகச் சீர்கேட்டை வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்
#TVKFails
அன்று வள்ளுவர் கோட்டம் போல, இன்று சென்னை மெட்ரோ
🚇 பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11 அன்று மக்கள் பயன்பாட்டுக்கு வருவது கண்டு, வயிற்றில் சுமந்த குழந்தை அடியெடுத்து வைப்பதைக் காணும் தாய்போல் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன் நான்.
🚇 தான் பார்த்துப் பார்த்து கட்டிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் கலந்துகொள்ள முடியாதபோது,
“சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும் என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்” என்று சொன்னார்.
🚇 சென்னை மெட்ரோவின் உருவாக்கத்தில் கழக அரசின் இடமும் அத்தகையதுதான்! தமிழ்நாட்டின் ஒவ்வொரு உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் வரலாற்றிலும் தி.மு.க.வின் பெயர் என்றும் நிலைபெற்றிருக்கும்!
#ChennaiMetro #CMRL @CMRLOfficial #Porur #Poonamalle #Vadapalani #MetroRail #DMK
Dummy ஆட்சியாளர்களின் குதிரை பேர அரசியலால் தாராபுரம் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தாராபுரம் நத்தம்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk
தலைமைக் கழக அறிவிப்பு
கழகத் தலைவர் அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, இன்று (15-09-2026) மாலை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த “முப்பெரும் விழா” ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
திரு. துரைமுருகன்
பொதுச் செயலாளர்
தி.மு.க.
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
பேரறிஞர் அண்ணா அவர்கள் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று திரும்பியவுடன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைத்து, அந்த நாடுகளில் தான் கற்றறிந்த பாடங்களையும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
அண்ணாவின் வழியில், அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன்பாகத் தனது விரிவான பயணத் திட்டம் மற்றும் பயணத்தின் நோக்கம் போன்றவற்றைப் பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக எடுத்துரைப்பார். மக்களின் சார்பாக அமைச்சர் பெருமக்கள், கட்சியினர், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து அவரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைப்பார்கள்.
வெளிநாடு செல்வது ஏதோ மிகப்பெரிய சாதனை என்பதைப் பறைசாற்றுவதற்காக இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை. அது ஒரு குறியீடு ஓர் அடையாளம் ஒரு சம்பிரதாயம்.
“நமது நாட்டை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளை அறியவும், உலகெங்கும் உள்ள சிறந்தவற்றைக் கற்றறிந்து அவற்றின் நன்மைகளை நமது மக்களுக்குப் பெற்றுத்தரவும் நான் சென்று வருகிறேன்” என்ற நம்பிக்கையை மக்களிடம் தெரிவிக்கும் நிகழ்வு அது.
அதேபோல், வெளிநாட்டுப் பயணத்தை முடித்துத் திரும்பிய பிறகும், அந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் என்ன, போடப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன, சந்தித்த நிறுவனங்கள் எவை, தமிழ்நாட்டிற்கு கிடைக்கவிருக்கும் பயன்கள் என்ன என்பன குறித்தெல்லாம் முதலமைச்சர் விரிவான விளக்கத்தை அளிப்பார்.
இந்தச் சூழலில், தற்போதைய தலைமைகளிடமும் அத்தகைய வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் எதிர்பார்க்கிறோம். அது இல்லாதபோது, நமது கடந்தகாலத்தின் உயர்வை எண்ணி ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி, அவர் வெளிநாடு சென்று திரும்பியபோது ஆற்றிய உரையை மீண்டும் கேட்போம்.
நாடு என்பது வெறும் பூகோள வரைபடம் அல்ல, அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு என்று நாடாளுமன்றத்தில் திராவிட இனத்தின் விடியலுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காகவும் ஓங்கி முழங்கியவர் பேரறிஞர் அண்ணா.
தமிழர்கள் வாழவும், தமிழர்கள் உயரவும், தன் குரல் தேயப் பேசி, விரல் தேய எழுதி, நம்மையெல்லாம் வாழ்வித்த பேரறிஞர் அண்ணாவின் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையை மாற்றிட, தமிழ்நாட்டை மீட்டிட இந்த உரை உத்வேகம் அளிக்கும்.
உரையை கேட்க :-
https://t.co/XJwhfRIdTl
நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.
மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
எச்சிலைப் பிழைப்பு பிழைக்கும் இன்ஸ்டா வாடகை வாய்கள் மற்றும் தவெக தற்குறிகளே!
லாங் வீக்கெண்டுக்காக கடந்த வியாழன், வெள்ளியன்று ஊருக்குப் போக முடியாமல் கிளாம்பாக்கத்தில் மக்கள் நடுத்தெருவில் கதறினார்கள். அரசுப் பேருந்துகள் இல்லாததால், ஆம்னி பேருந்துகளில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை அப்பட்டமான பகல் கொள்ளை!
இதைச் சரிசெய்ய வக்கற்ற தவெக அரசு, "இது திமுக சதி" என மடைமாற்ற, காசுக்கு வாந்தியெடுக்கும் இன்ஸ்டா கோமாளிகளை 'ஞாயிற்றுக்கிழமை' இரவு கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி "கூட்டமே இல்லை, பஸ் ஃப்ரீயா இருக்கு" என Reels போட வைத்துள்ளது!
ஏண்டா மூளை மழுங்கிய தற்குறிகளா! உங்கள் 'டம்மி' முதலமைச்சரைப் போலவே மண்டையில் களிமண்ணா? விடுமுறை முடியும் நாளுக்கு முன்பு ஞாயிறு இரவில் எவனாவது ஊருக்குப் போவானா? வாங்கிய காசுக்கு இவ்வளவு பச்சையாகவா குரைத்து மாட்டுவது?
"தவறு நடந்துவிட்டது, உடனே சரிசெய்கிறோம்" எனச் சொல்லும் நிர்வாகத் திறமையோ, துணிச்சலோ இந்த ரீல்ஸ் முதலமைச்சருக்கு என்றைக்கும் வராது.
மக்களின் நிஜமான கண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய கோமாளிகளை வைத்துக் கொச்சைப்படுத்துவது மட்டும்தான் தவெக-வின் ஈனத்தனமான மாற்று அரசியல்! 🤡
சட்டமன்றத்தை ‘ரீல்ஸ்’ எடுக்கும் இடமாக மாற்றியது, நாங்கள் கட்டிய பாலத்தின் மேல் நின்று ‘போட்டோஷூட்’ செய்வது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்து கிறீர்கள்.
@TVKVijayHQ