@VelmuruganTVK போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகியும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை இராணுவம் வைத்திருப்பது அநீதி. தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக் கூடாது. நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசு முன்வர வேண்டும்
தமிழர் நிலங்களில் இன்னும் இராணுவம் எதற்காக?
இலங்கை அரசு, தமிழர் நிலங்களை இன்றும் விடுவிக்க மறுப்பது ஏன்?
இந்திய அரசும் தமிழ்நாடு அரசும், ஈழத் தமிழர்களுக்கு துணை ���ிற்க முடியாதா?
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீதான ஆயுதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனினும், அந்தப் பேரவலத்திற்கு முன்னதாகத் தமிழர்களின் வீடுகளாகவும் விளைநிலங்களாகவும் வாழ்வாதாரமாகவும் விளங்கிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், இன்றளவும் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிடியிலேயே நீடிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
2017-ஆம் ஆண்டிலேயே வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 30,000 ஏக்கர் தனியார் நிலங்கள் பாதுகாப்புப் படைகளின் வசமிருப்பதாக இலங்கை அரசே ஒப்புக்கொண்டது. குறிப்பாக, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்பட்டதை பல்வேறு கள ஆய்வுகள் பதிவு செய்துள்ளன.
2026-ஆம் ஆண்டிலும் "பாதுகாப்புக்குத் தேவையில்லாத நிலங்களை விடுவிக்க ஆய்வு செய்கிறோம்" என இலங்கை அரச��� கூறுவது, இத்தனை ஆண்டுகளாய் நில மீட்பு முழுமையடையவில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது.
ஆயுத மோதல்கள் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கத் தயங்குவது ஏன்?
தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் எந்த நிலம் தேவை, எது தேவையில்லை என்ற வெள்ளை அறிக்கையை இதுவரை வெளிப்படையாக வெளியிடாதது ஏன்?
தேவைப்படாத நிலங்களை விடுவிப்பதில் உள்ள தயக்கம், சொந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர் இனப்பாகுபாட்டையே காட்டுகிறது. இதற்கு இலங்கை அரசு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும்.
நிலத்தை இழப்பது என்பது ஒரு குடும்பத்தின் தலைமுறை அடையாளம், தொழில், பொருளாதாரம் மற்றும் சமூக உறவுகள் அனைத்தையும் இழப்பதாகும். மக்களின் விளைநிலங்களை இராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்கும் செயலாகும்.
வடக்கு கிழக்கில் இராணுவப் பிடியிலுள்ள தமிழர்களின் தனியார் நிலங்கள் குறித்து விரிவான நிலவர அறிக்கையை இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோர வேண்டும். நிலங்களை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க இலங்கை அரசைத் தூதரக ரீதியாக வலியுறுத்துமாறும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்சிக்குத் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறும் ஒன்றிய அரசைத் தமி��்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
இந்தியா–இலங்கை இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர்களின் நிலவுரிமை, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை முதன்மை நிபந்தனையாக முன்வைக்க வேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் நிலங்களின் பட்டியலைப் பெற்று, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவை மக்களிடம் ஒப்படைக்கப்படுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.
தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் அடிப்படைச் சொத்துரிமையைக் காலவரையின்றிப் பறிக்க முடியாது. பாதுகாப்புக்குத் தொடர்பற்ற அனைத்து நிலங்களையும் தாமதமின்றி விடுவித்து, ஈழத்தமிழர்களின் நில உரிமை, வாழ்வாதாரம் மற்றும் மனித உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் உறுதியான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்ட���க் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#தமிழர்நிலம்தமிழருக்கே
#ஈழத்தமிழர்நிலவுரிமை
#ReleaseTamilLands #tamil
#EelamTamilLandRights
20 இலட்சம் இளைஞர்களுக்கு தேர்வு!
பணியிடங்கள் மட்டும் சில ஆயிரமா? ஏன்?
காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தேர்வு மட்டும் எதற்காக?
தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காக இலட்சக்கணக்கான இளைஞர்கள் அல்லும் பகலும் கண்விழித்துப் படித்துக் காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4 தேர்வில் அறிவிக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை அவர்களின் கடும் உழைப்புக்கும் வாழ்வாதாரத் தேவைக்கும் ஏற்ப கணி��மாக உயர்த்தப்பட வேண்டும்.
படித்த இளைஞர்களின் எண்ணிக்கையும் தேர்வெழுதுவோரின் கூட்டமும் ஆண்டுதோறும் புதிய உச்சத்தைத் தொடும் வேளையில், தமிழக அரசு பணியிடங்களை குறைப்பது எந்த வகையிலும் நியாயமானது அல்ல.
இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் களம் காணும் ஒரு தேர்வில், வெறும் சில ஆயிரம் இடங்களை மட்டுமே அறிவிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
பல்வேறு அரசுத் துறைகளில் பல்லாயிர���்கணக்கான பணியிடங்கள் நீண்டகாலமாகக் காலியாகக் கிடக்கும்போது, அவற்றை முழுமையாகக் கணக்கெடுத்து நிரப்பத் தயங்குவது ஏன்?
குடும்ப வறுமைக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் நடுவே பல ஆண்டுகள் தவம் கிடக்கும் எளிய பின்னணி கொண்ட இளைஞர்களின் உழைப்புக்கு அரசு சொல்லும் விடை இதுதானா?
அரசு இயந்திரம் தொய்வின்றி இயங்கவும் மக்களுக்குச் சேவைகள் தடையின்றிச் சேரவும் ஆட்கள் தேவைப்படும்போது, ப��திய நியமனங்களை ஒத்திப்போடுவது யாருடைய நலனுக்காக?
ஆண்டுதோறும் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டு, சொன்ன தேதியில் தேர்வு முடிவுகளையும் பணி நியமனங்களையும் வழங்கிட இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?
இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளை வெறும் தேர்வுப் படி��ங்களோடு சுருக்கிவிடாமல், உண்மையான வேலைவாய்ப்பாக மாற்றிக் காட்ட அரசு ஏன் தயங்குகிறது?
தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த எளிய தேர்வர்களுக்கு, அரசுப் பணி என்ற பெருங்கனவை நனவாக்கும் முதன்மையான நுழைவு வாயிலாகத் தொகுதி–4 தேர்வே திகழ்கிறது. எனவே, அரசுத் துறைகளில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் வெளிப்படைத்தன்மையுடன் முழுமையாகக் கணக்கெ��ுத்து, உடனடியாக இந்த ஆட்சேர்ப்பில் கூடுதல் பணியிடங்களாக இணைக்க வேண்டும்.
இளைஞர்களின் நீண்டகால எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 15,000 தொகுதி–4 பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#TNPSC #Group4 #tamil #GovernmentJobs #அரசுப்பணி #இளைஞர்வேலைவாய்ப்பு #தமிழகஅரசு
சட்டவிரோதக் குவாரிகளுக்கு சலுகையா?
தமிழகத்தின் கனிம வளம் தனியாருக்குத் தாரைவார்ப்பதா?
சட்டவிரோதமாகச் செயல்பட்டவர்களுக்கு முன்பு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5 லட்சம் வரை அபர���தம், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கக்கூடிய நிலை இருந்தது. ஆனால், புதிய நடைமுறையில் முறைகேடாக எடுக்கப்பட்ட கனிமத்திற்கு மெட்ரிக் டன்னுக்கு குறைந்த தொகை மட்டும் செலுத்தி முறைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு என்ன செய்தியைச் சொல்கிறது? விதிமுறைகளை மீறி வளங்களைச் சுரண்டினால் பின்னர் பணம் செலுத்தி தப்���ித்துக்கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்குவது நியாயமா?
இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், அந்த அரசாணையை விரைவில் திரும்பப் பெற உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நான் குரல் எழுப்பியுள்ளேன்.
குறிப்பாக, மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அரசுடைமையாக்கி, அரசே அகழ்வு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன். அதன் பின்னர் அரசு மணல் குவாரிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. ஆனால், மீண்டும் ஒப்பந்ததாரர்கள் மூலம��� செயல்படுத்தப்பட்டபோது எழுந்த பிரச்சினைகளையும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நான் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.
தமிழகத்தின் இயற்கைச் செல்வங்கள் பொதுமக்களின் சொத்து. அவற்றின் மீது தனியார் ஆதிக்கம் உருவாகக் கூடாது. இது எங்கள் கட்சியின் நிலைப்பாடு.
அளவுக்கு மீறிய அகழ்வு என்பது வெறும் கல் அல்லது மணல் எடுத்துச் செல்வதோடு முடிந்துவிடுவதில்லை. நீராதாரம் பாதிப்பு, விவசா�� நிலங்களின் சீரழிவு, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் அழிவு, சுற்றுச்சூழல் பாதிப்பு என அதன் தாக்கம் தலைமுறைகளைப் பாதிக்கக்கூடியது.
அப்படியிருக்க, வருவாய் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக இயற்கை வளங்களை அளவின்றி எடுக்க அனுமதிப்பது யாருடைய நலனுக்காக? தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்தக் கனிம வளத்தையும் தனியார் நிறுவனங்களின் வணிகப் பொருளாக மாற்றக் கூடாது.
மணல், கல் மற்றும் அனைத்து சிறுகனிம வளங்களின் அகழ்வு, கண்காணிப்பு, விற்பனை ஆகியவை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் மட்டுமே நடைபெறும் என்ற உறுதியான கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலம் பொதுவளத்தைச் சுரண்டும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன், அதிலிருந்���ு கிடைக்கும் வருவாய் முழுமையாக தமிழக மக்களுக்குப் பயன்படும் வகையில் நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#கனிமவளம்_தமிழகத்திற்கே
#குவாரிகளை_அரசே_நடத்து
#SaveTamilNaduResources
#tamil
#ProtectTamilNaduMinerals
திண்டுக்கல் மானூர் அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு!
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பில்கூட தமிழக அரசுக்கு அக்கறையில்லையா?
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மானூர் ஊராட்சி அரசுப்பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக எழுந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளி திறந்தபோது தொட்டியில் அசுத்தம் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், பின்னர் அந்தத் தொட்டி சுத்தம் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித���து தற்போது காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், பள்ளி வளாகத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து இதுபோன்ற அருவருக்கத்தக்க செயலைச் செய்யும் அளவுக்கு பாதுகாப்பு ஏன் கேள்விக்குறியாகியுள்ளது?
பள்ளி மாணவர்களின் குடிநீர்த் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்து மனிதக் கழிவை கலக்கும் அளவுக்கு பள்ளி வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது யாருடைய தோல்வி?
விடுமுறை காலத்தில் ���ள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் யார் என்பதை இதுவரை கண்டறிய முடியாதது ஏன்?
பள்ளி நிர்வாகத்திற்கு சம்பவம் தெரிந்த உடனேயே பெற்றோர்களுக்கும் காவல்துறைக்கும் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டதா? இல்லையென்றால், தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குறைபாட்டுக்கு யார் பொறுப்பு?
அரசுப்பள்ளிகளில் ச��ற்றுச்சுவர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்யாமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?
குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் நுழைந்து, அவர்கள் பயன்படுத்தும் நீர்த்தொட்டியை அசுத்தப்படுத்துவது சாதாரணக் குற்றமாகக் கருதப்படக் கூடாது.
குற்றவாளிகளை மட்டும் தேடுவது போதாது. பள்ளி வளாகத்தின் பாதுகாப்பில் எங்கெல்லாம் குறைபாடு ஏற்ப��்டது என்பதையும் கண்டறிய வேண்டும். சம்பவத்தை அலட்சியப்படுத்தியவர்கள் இருந்தால், அவர்களையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு, மானூர் அரசுப்பள்ளி சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளின் குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகளை அவசர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#மானூர் #அரசுப்பள்ளி
#GovernmentSchool #tamil #TamilNadu
கன்னியாகுமரி தக்கலை பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களைக் குறைப்பதா?
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதி மக்களின் முக்கிய மருத்துவ ஆதாரமாக விளங்கும் தக்கலை பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவர்களி���் எண்ணிக்கையைக் 35-லிருந்து 21 ஆகக் குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 177 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், மருத்துவர்களைக் குறைப்பதற்கான காரணம் என்ன?
மக்களின் மருத்துவத் தேவை அதிகரித்துள்ள நிலைய��ல், மருத்துவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது எந்த அடிப்படையில்?
35 மருத்துவர்கள் என்பது அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையா? 21 என்பது தற்போது பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கையா?
மாவட்ட நிர்வாக இணையதளத்தில் 21 மருத்துவர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், 35-லிருந்து 21 ஆகக் குறைக்கப்படும் என்ற தகவலின் உண்மை நிலை என்ன?
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அரசு, புதி�� பணியிடங்களை உருவாக்குவதற்குப் பதிலாக மருத்துவச் சேவையைச் சுருக்குவது ஏன்?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு உடனடியாகத் தெளிவான பதில் அளிக்க வேண்டும். மருத்துவப் பணியிடங்களின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை, பணியில் உள்ளவர்கள், காலியிடங்கள் மற்றும் மாற்றப்பட உள்ள இடங்கள் குறித்த முழு விவரங்களையும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.
மருத்துவர்களைக் குறைக்கும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட்டு, காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், நோயாளிகளின் தேவைக்கேற்ப சிறப்பு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனையின் படுக்கை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.
மக்க���ின் உயிருடன் தொடர்புடைய அரசு மருத்துவச் சேவையை நிர்வாகக் கணக்கில் சுருக்காமல், பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#தமிழக_வாழ்வுரிமைக்கட்சி #மருத்துவஉரிமை
#TamilNadu #tamil #PublicHealthcare
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திருமதி நவநீதம் பிள்ளை அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வாழ்த்துகள்!
தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சட்டத்தரணியும், சர்வதேச நீதித்துறை மற்றும் மனித உரிமைத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவருமான திருமதி நவநீதம் பிள்ளை அவர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை அளிக்கும் செய்தியாகும்.
அமைதியையும் சர்வதேச சட்டத்தையும் மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகளுக்காக சட்டரீதியாகப் போராடிய அவர், பின்னர் ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார். 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்��ளின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர் வெளிப்படையாகக் கவலை தெரிவித்திருந்தார். மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச அளவில் பொறுப்புக்கூறல் வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், சர்வதேச நீதி மற்றும் அமைதிக்கான உயரிய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது உலகம் முழுவதும் வாழும் த���ிழர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
நவநீதம் பிள்ளை அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பிலும், கட்சியின் தலைவர் என்ற முறையிலும், இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#நவநீதம்பிள்ளை #தமிழர்பெருமை
#NaviPillay #NobelPeacePrize
சென்னையைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் ஜோன் இந்தியா (Space Zone India), சார்பில்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் நடைபெற்ற "மிஷன் ரூமி" ட்வின் – 2026’ ராக்கெட் ஏவும் நிகழ்வில் பங்கேற்றேன்.
மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டி��் முறைகேடா?
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பதவி உயர்வு பெற்றது எப்படி?
நடவடிக்கைக்கு தயக்கம் காட்டுவது ஏன்?
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இவ்விவகாரம் தொடர்பாக எட்டு வட்டாட்சியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கை குறித்துச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாணவர்களின் கல்வி, உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்து��தை உறுதிசெய்ய வேண்டிய நிர்வாக அமைப்புகளின் செயல்பாடே தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சில அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றதாகவும், சிலர் பணி ஓய்வு பெற்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலைக்குரியது.
மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த பிறகும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கத் தாமதமானது ஏன்?
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறும் சூழலில், சம்பந்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வும் பணி ஓய்வும் வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?
மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகளே நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?
2017 முதல் 2023 வரை இந்நிதி நிர்வாகத்தில் தொடர்புடைய அனைவ��ின் பங்கும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதா?
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமின்றி, முறைகேட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அல்லது நிர்வாகப் பின்னணியைப் பாராமல் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் இதில் தொடர்புடைவர்கள் என விசாரண��யில் நிரூபிக்கப்பட்டாலும், தற்போதைய ஆட்சியில் இருப்ப��ர்கள் தொடர்புடைவர்கள் எனத் தெரியவந்தாலும் பாரபட்சமின்றி ஒரே சட்ட நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்.
மேலும், முறைகேட்டால் இழப்பு ஏற்பட்ட அரசுப் பணத்தை முழுமையாக மீட்டெடுத்து, அது மாணவர்களின் நலனுக்கே பயன்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
மாணவர்களின் உரிமைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெறுவது என்பது சாதாரண நிர்வாகத் தவறாகக் கடந்து செல்லக்கூடியதல்ல. கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி, கல்வி பயிலும் மாணவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதே ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும்.
எனவே, இவ்விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்து, நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் உரிய விளக்கம் அளிப்பதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றிச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#தமிழக_வாழ்வுரிமைக்கட்சி
#மாணவர்_நிதி_முறைகேடு
#StudentFundScam #tamil
#AccountabilityNow
SIR குறித்து கேள்விகளுக்குப் பதில் இல்லையா?
அதனால்தான் இளைஞர்களைக் கைது செய்கிறீர்களா?
சனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது ஏன்?
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமான SIR நடவடிக்கைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, சென்னையின் பெசன்ட் நகரில் அமைதியான முறையில் போராடிய இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
SIR நடவடிக்கைகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வெளிப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தேர்தல் ஆணையத்தின் சில முடிவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து பலமுறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படைத்தன்மை கோருவது ��ியாயமான சனநாயகக் கோரிக்கையாகும்.
தேர்தல் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பிய இளைஞர்களிடம் விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக கைது நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது சனநாயக உரிமைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும்.
SIR தொடர்பாக எந்தத் தவறும் நடைபெறவில்லை என்ற நிலைப்பாடு இருந்தால், தொடர்புடைய ஆவணங்களையும் தரவுகளையும் பொதுவெளியில் வெளியிட்டு மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கத் தயக்கம��� ஏன்?
தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே முக்கியமான நடவடிக்கைகள் குறித்து ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக, அதைக் கேட்கும் இளைஞர்களைக் கைது செய்வது ஏன்?
அமைதியான முறையில் போராடிய இளைஞர்களைக் கைது செய்த காவல்துறையின் நடவடிக்கையையும், அவர்களின் சனநாயக உரிமையைப் பாதுகாக்கத் தவறிய தமிழக அரசின் அணுகுமுறை���ையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பெசன்ட் நகரில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இளைஞர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
SIR நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள், தரவுகள் மற்றும் முடிவெடுப்பு நடைமுறைகளை முழுமையாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
தேர்தல் ஆணையத்திற்குள்ளேயே பதிவு செய்யப்பட்டுள்ள ஆட்சேபனைகள் குறித்து மக்களுக்கு வெளிப்படையான விளக்க���் அளிக்க வேண்டும்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடவடிக்கைகள் தேர்தல் நடைமுறையில் ஏற்படுத்தியிருக்கக்கூடிய தாக்கம் குறித்து சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும்.
முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்பாடுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டால், அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட���, தேவையான இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#SaveDemocracy #tamil #ElectoralRights
#ஜனநாயகத்தை_காப்போம் #வாக்குரிமையை_பாதுகாப்போம்
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் காங்கிரசு பாஜகவிற்கு,
தமிழ்நாட்டின் மாணவர்களுக்குப் பாடம் நடத்தத் தகுதி இருக்கிறதா?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சென்னை தீவுத்திடலில் கட்சி ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு மாணவர்களோடு உரையாடியுள்ளார்.
1976 இல் நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி, மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தூக்கிச் சென்���ு மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்தது அன்றைய இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு அரசு.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சமத்துவக் கல்வி முறையை உருவாக்காமல், பத்துக்கும் மேற்பட்ட ஏற்றத்தாழ்வான கல்வி முறைகளைத் திணித்து அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்புகளைச் சிதைத்ததும் இதே ஆட்சியாளர்கள்தான்.
2010 இல் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதன் நச்சு விதை ஊன்றப்பட்டது. காங்கிரசு விதைத்த அந்த நச்சு மரத்திற்குத்தான், இன்று பாஜக உரம்போட்டுத் தமிழ்நாட்டு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை அடியோடு சிதைத்துக் கொண்டிருக்கிறது.
கல்வி உரிமையைப் பறித்து, நீட் நுழைவுத் தேர்வைத் தமிழ்நாட்டின் மீது திணித்த காங்கிரசு, இன்று மாணவர்களுக்கு ஆதரவாக வேடமிட்டு மேடையேறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் இல்லையா?
��ரலாற்றில் செய்த வரலாற்றுப் பிழைக்குத் தமிழ்நாட்டு மாணவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கக் காங்கிரசு தலைமைக்குத் துணிவுண்டா?
கல்வி உரிமையில் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் சீர���ித்த வரலாறும் இவர்களுடையதுதான்.
காவிரி ஆற்றுநீர் உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை, பாலாற்று உரிமை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைத் தொடர்ந்து வஞ்சித்துப் பல்வேறு குளறுபடிகளைச் செய்தவர்கள் இவர்கள் தான்.
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த மீத்தேன் மற்றும் ஈத்தேன் திட்டங்களுக்குக் கையெழுத்திட்டுத் தொடக்கி வைத்தவர்கள் இவர்கள்.
உலக அளவில் பல்வேறு மாநில���்களில் கைவிடப்பட்ட அணு உலைத் திட்டத்தைத் தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி நிறுவியவர்கள் இவர்கள்.
தேனி மதுரை எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியலைச் சீரழிக்கும் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்கள் இவர்கள்.
கன்னியாகுமரியில் ஐ.ஆர்.இ.எல் (IREL) மூலம் அணுக்கனிமச் சுரங்கம் அமைத்துத் தமிழ்நாட்டின் கடற்கரை வளங்களைச் சூறையாட வழிவகுத��தவர்கள் இவர்கள்.
காட்டுப்பள்ளியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பையும், தமிழகத்திற்கே உரித்தான கடல் பரப்பையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் இவர்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காகத் தமிழ்நாட்டின் கனிம வளங்களை அள���ளிக் கொடுத்துக் கபளீகரம் செய்தவர்கள் இவர்கள்.
நெய்வேலியில் என்.எல்.சி (NLC) நிறுவனத்தைக் கொண்டுவந்து மக்களின் வாழ்வை வளப்படுத்துகிறோம் என்று கூறிவிட்டு, நிலம் கொடுத்த அந்த மண்ணின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்தையே அடியோடு சீரழித்தவர்கள் இவர்கள்.
அது மட்டுமல்ல, ஈழத்திலே பல இலட்சக்கணக்கான நமது தொப்புள் கொடி உறவுகள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கும் துணை போனவர்கள் இவர்கள்தா���்.
சென்னை தீவுத்திடல் என்பது வணிகக் கண்காட்சிகளுக்கும் அரசு சார்ந்த நிகழ்வுகளுக்கும் பயன்படும் இடம். அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு நீதிமன்ற நெறிமுறைகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள சூழலில், காங்கிரசு கட்சியின் இந்த மாணவர் கூட்டத்திற்குத் தீவுத்திடலைத் தாரைவார்த்தது எப்படி?
இதே தீவுத்திடலில் கூட்டமோ மாநாடோ நடத்தத் தமிழ்நாட்டின் மண்ணுரிமை பேசும் மா��ிலக் கட்சிகளோ, இதர இயக்கங்களோ அனுமதி கோரினால் காவல்துறை அனுமதிக்குமா? அல்லது உடனடியாகச் சட்டம் ஒழுங்கு காரணங்களைக் காட்டி நிராகரிக்குமா?
தேசியக் கட்சிகளுக்கு என்றால் சிவப்புக் கம்பளம். மாநிலக் கட்சிகளுக்கு என்றால் கட்டுப்பாடுகளும் தடைகளுமா? இந்த பாரபட்சத்திற்குத் தமிழக அரசும் காவல்துறையும் தர���ம் பதில் என்ன?
காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் சீர்குலைப்பதில் இருவருக்கும் பெரிய வேறுபாடில்லை.
தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்கத் தெரிந்தவர்கள். டெல்லி தலைவர்களிடம் பாடம் படிக்க வேண்டிய அவசியமோ, அரசியல் சான்றிதழ் பெற வேண்டிய பலவீனமோ தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடையாது.
தமிழ்நாட்டின் உ���ிமைகளையும் கூட்டாட்சித் தத்துவத்தின் வழிகாட்டுதல்களையும் சிதைக்கும் காங்கிரசும் பாஜகவும் இழைத்த வரலாற்றுத் துரோகங்களை, தமிழ்நாட்டு மண்ணும் மக்களும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
நியமன அறிவிப்பு:
கீழ்காணும் நிர்வாகிகள்
ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சோளிங்கர் ம��்றும் அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுடைய மாவட்ட தலைவர்கள்,செயலாளர்கள்,பொருளாளர்கள் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்களாக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில/மாவட்ட/ஒன்றிய/நகர / பேரூர்/கிளை நிர்வாகிகள் அனைவரும் கீழ்காணும் நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்.
தி.வேல்முருகன்.
@VelmuruganTVK மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போராட்டம் என்பத�� குற்றமல்ல, உரிமையே
இது ஆட்சி மாற்றமா?
வெறும் காட்சி மாற்றமா?
மருத்துவப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நீதி கிடைக்குமா?
மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களே, தங்களுடைய பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, நிலுவைத் தொகைகள் உள்ளிட்ட ���டிப்படை உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டிய அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்வது வேதனைக்குரியது.
அக்டோபர் 5 அன்று 500-க்கும் மேற்பட்ட இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அக்டோபர் 12 அன்று 2,500-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்குப் பதி���ாக, அவர்களின் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் காவல்துறை முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கோரிக்கைகளைப் பரிசீலிக்க அரசுக்கு கால அவகாசம் தேவை என்றால், தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பணியாளர்களைத் தடுத்து நிறுத்துவது ஏன்?
போராட்டத்தைத் தடுப்பது நிர்வாகத்தின் வெற்றியா? அல்லது போராட்டத்திற்கான காரணத்தைத் தீர்ப்பதுதான் ��ட்சியின் கடமையா?
மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கே பணிப் பாதுகாப்பும் அடிப்படை உரிமைகளும் உறுதி செய்யப்படாத நிலையில், “மக்கள் நல அரசு” எனத் தம்பட்டம் அடித்துக் கொள்வது ஏன்?
ஆட்சி மாறும்போது அரசின் அணுகுமுறையும் மாற வேண்டும். போராட்டம் நடத்தும் மக்களைத் தடுப்பது மட்டுமே நிர்வாகத்தின் அணுகுமுறையாக இருக்கக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை நேர்மையாகக் கேட்டு, உரிய காலக்கெடுவுக்குள் தீர்வு காண்பதே பொறுப்பான ஆட்சியின் அடையாளமாகும்.
தமிழ்நாடு அரசு, மருத்துவப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவர்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#மருத்துவப்பணியாளர்கள்உரிமை
#ஆட்சிமாற்றமாவெறும்காட்சிமாற்றமா
#HealthcareWorkersRights
#TamilNaduGovernment #tamil
@VelmuruganTVK சாலையைச் சரியாகப் பராமரிக்காமல் கட்டணம் மட்டும் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே மூட வேண்டும். மக்களின் பயணச் சுமையைக் குறைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுங்கச்சாவடிகளில் நடப்பது, கட்டண வசூலா? கட்டாய வழிப்பறியா?
நீதிமன்றக் கேள்விக்கு,
ஒன்றிய அரசு வாய்திறக்குமா?!
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் பகல்கொள்ளை நடப்பதை எதிர்த���துத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் சமரசமின்றிப் போர்க்குரல் எழுப்பி வருகிறது.
உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, கைதும் சிறைவாசமும் கண்டு, மக்களுக்காகக் களத்தில் நின்ற இயக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
சட்டமன்றத்தில் விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளின் அத்துமீறல்களைப் புட்டுப���புட்டு வைத்து, "காலாவதியான சுங்கச்சாவடிகளை இழுத்து மூடு" என்று நாம் முழங்கியபோது செவிசாய்க்காத ஒன்றிய பாஜக அரசுக்கு, இப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சம்மட்டி அடி கொடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளது.
சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. பாலங்கள் பாழடைந்து கிடக்கின்றன. ஆனால் கட்டண வசூல் மட்டும் தங்குதடையின்றி நடப்பது ஏன்? உங்களை எவனும் கேள்வி கேட்க முடியாது என்��� கொழுப்பிலா இப்படிச் செயல்படுகிறீர்கள்? என்று நீதிமன்றம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒன்றிய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறது.
நீதிமன்றம் கன்னத்தில் அறைந்தாற்போல் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகளைத்தான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறது. இப்போது ஒன்றிய அரசிடம் நாங்கள் நேரடியாகக் கேட்கிறோம்.
போட்ட முதலை வட்டியும் முதலுமாகப் பல மடங்கு எடுத்து ஏப்பம் விட்ட பிறகும், சுங்கச்சாவடி என்ற பெயரில் இன்னும் எதற்காக மக்கள் பாக்கெட்டில் கையை விடுகிறீர்கள்? இது வழிப்பறி கொள்ளை இல்லையா?
குண்டும் குழியுமான மரணப் பொறிகளில் மக்களை உயிரைப் பறிப்பதற்குப் பெயர்தான் சேவையா? கட்டணம் மட்டும் முழுசாக வேண்டும், சாலைப் பாதுகாப்பு எக்கேடு கெட்டால் என்ன என்கிற திமிரா? அல்லது கேட்க நாதியில்லை என்ற அகம்பாவமா?
ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்ட���ு என்று மாநில அரசே பட்டவர்த்தனமாக அறிவித்த சுங்கச்சாவடிகளை, இன்னும் யாருடைய கமிஷனுக்காக, எந்தத் தனியார் கார்ப்பரேட்டின் இலாபத்திற்காக அனுமதியளித்து இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
2023-ஆம் ஆண்டு விதியைக் காட்டி வசூலை நீட்டிக்கிறோம் என்று புளுகுகிறீர்களே, எடக்குமடக்காகத் திருத்தப்பட்ட அந்த இருட்டு விதிகளையும் ரகசிய ஒப்பந்தங்களையும் மக்கள் மன்றத்தில் வெளியிட உங்களுக்குத் துணிவு இருக்கிறதா?
60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதியை உங்கள் சொந்தக் காலடியிலேயே போட்டு மிதித்துவிட்டு, ஊருக்கு ஊர் சுங்கச்சாவடி வைத்து மக்களிடம் ரத்தம் உறிஞ்சுவது எந்த வகையில் நியாயம்?
ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் பூச்சாண்டி காட்டி ஒருவரையொருவர் கைகாட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு? இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த அராஜக வசூல் தொடரும்? என்பதை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
சாலைகளில் மக்கள் பயணிப்பதற்காக, எந்த வகையிலும் மக்களிடம் வரி வசூல் செய்யக்கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு. மக்களின் நிலைப்பாடும் அதுதான்.
ஆகவே, காலாவதியான அத்தனை சுங்கச்சாவடிகளையும் உடனடியாக உடைத்தெறிந்து மூ�� வேண்டும். மக்கள் மீது திணிக்கப்படும் அநியாயக் கட்டணக் கொள்ளையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல், நீதிமன்றக் கண்டனத்தோடு மக்கள் மன்றத்தின் கடுமையான போராட்டங்களையும் ஒன்றிய அரசு சந்திக்க நேரிடும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எச்சரிக்கிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#சுங்கச்சாவடி_கட்டணக்கொள்ளை #ஒன்றியஅரசே_பதிலளி #TollPlazaLoot #tamil #TollFreeTamilNadu
5 வயது பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லையா?
வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த தமிழக வாழ்வுரிக்கை கட்சி முன்வைத்த கோரிக்கைகளை, அரசு இனியும் புறக்கணிக்கப் போ��ிறதா?
திருவொற்றியூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கொடூரச் சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்��ொள்கிறேன்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தச் சூழலில், திருவொற்றியூர் சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளை மீண்டும் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது.
குற்றம் நடந்த பிறகு கைது செய்வது மட்டுமே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான அரசின் கடமையா?
குற்றம் நிகழ்வதற்கு முன்பே ஆபத்தை கண்டறிந்து தடுப்பதற்கான கண்காணிப்பு கட்டமைப்பு எங்கே?
தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு எதிரான நிலைப்பாடு எங்களிடம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் பணியாற்ற வ���ும் ஒவ்வொருவரின் அடையாளம், பணியிடம், அவரை அழைத்து வந்தவர், தங்குமிடம், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிவில் இருக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அதற்காகவே உள்நுழைவு சீட்டு "(state inner line permit)” போன்ற கட்டாய இணையவழிப் பதிவு முறையை உருவாக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரியுள்ளோம்.
தமிழகத்தில் யார் வேலை செய்கிறார்கள்?, எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்?, எந்த ஒப்பந்ததாரர் மூலம் வந்தார்கள்?, எந்த முகவரியில் தங்கியிருக்கிறார்கள்? என்பதைக் கூட அரசால் துல்லியமாகக் கண்டறிய முடியாத நிலையில், பாதுகாப்பான நிர்வாகத்தை எப்படி உறுதி செய்ய முடியும்?
வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்ததாரர்கள், அவர்களின் விவரங்களை அரசிடம் பதிவு செய்வதற்கும், அவர்களது தங்குமிடம் மற்றும் பணியிடத் தகவல்களைப் புதுப்பித்து வைத்திருப்பதற்கும் சட்டரீதியாகப் பொறுப்பேற்க வேண்டாமா?
ஒப்பந்ததாரர் அழைத்து வந்த தொழிலாளியின் விவரமே அரசிடம் இல்லையென்றால், அந்தத் தொழிலாளரால் நிகழ்த்தப்படும் குற்றத்தில் அவரை அழைத்து வந்தவரின் பொறுப்பு குறித்து அரசு ஏன் கேள்வி எழுப்பக் கூடாது?
இ��ு எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களையும் ஒட்டுமொத்தமாகக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் கோரிக்கை அல்ல. குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதேவேளையில், தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்களும் ஒப்பந்ததாரர்களும் தங்களுடைய நிர்வாகப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாத வகையில் சட்டம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
���ரு குழந்தை பாதிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அடுத்த குழந்தை பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவதுதானே அரசின் உண்மையான பொறுப்பு?
திருவொற்றியூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிரான விசாரணையை விரைந்து முடித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தி��ருக்கும் தேவையான மருத்துவ, உளவியல் மற்றும் சட்டப் பாதுகாப்பை அரசு முழுமையாக வழங்க வேண்டும்.
மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான கட்டாய இணையவழிப் பதிவு, மாநில அளவிலான அனுமதி நடைமுறை, பணியிடம்–தங்குமிடம் பற்றிய ஒருங்கிணைந்த தரவுத்தளம், ஒப்பந்ததாரர்களுக்கான சட்டப்பூர்வப் பொறுப்பு ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ���ார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#ChildSafety #tamil #POCSO
#��ுழந்தைகள்பாதுகாப்பு #பெண்கள்பாதுகாப்பு
@VelmuruganTVK குற்றம் நடந்த பிறகு கைது செய்வது அரசின் சாதனை அல்ல குற்றம் நடக்கும் முன்பே அதைத் தடுப்பதே உண்மையான பாதுகாப்பு 5 வயதுக் குழந்தைக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவுவது சொன்னாலே வேதனை தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா?
@VelmuruganTVK நெடுஞ்சாலை மற்றும் அரசு ம���ுத்துவமனைகளில் இந்தி நுழைவது சாதாரணத் தவறல்ல கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் பலிகடாவாக்காமல் காரணமான உயர் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை