ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். @Vairamuthu#JnanpithAward
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
#ActorRajesh
Watched the trailer of my dear Mohan’s @Mohanlal and @PrithviOfficial Prithvi ‘s film #Empuraan .. fantastic work , congratulations !!! I wish the team all the best for the release. God bless https://t.co/5GCUGAXEEf