அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்��ு நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this also exposes the hollowness of the reckless allegations made by some Congress leaders who repeatedly questioned why Pinarayi Vijayan had “not yet been targeted by the BJP”!
#EDraids
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக���கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
A Criminal Complaint has been submitted to the DGP @tnpoliceoffl and the Commissioner of Police Greater Chennai against these two offenders involved in various criminal and unlawful activities, including forgery and creating fabricated photos and content. The complaint requests urgent criminal action, identification of conspiracy networks, custodial interrogation, preservation of digital evidence, and the immediate removal of all unlawful content. Additionally, separate civil actions for damages in their personal capacity against each individual are also contemplated.
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
இச்செய்தி குறித்தும், PM Shri திட்டம் மீதான நிலைப்பாடு குறித்தும் தவெக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கக் கூடாது!
📊 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 94.31% ஆக உயர்ந்துள்ளது! (கடந்தா���்டை விட 0.51% அதிகம்!)
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் #DravidianModel ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். கடந்த ஐந்தாண்டுகளில் போடப்பட்ட அடித்தளத்தால் இனி ஆண்டுதோறும் அதிகரிக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. இந்நேரத்தில் மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்ச்சிப் பெற தவறியுள்ள அன���பு மாணவச் செல்வங்கள் ஜூலை 8ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ள துணைத் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கும் Advance வாழ்த்துகள் ❤️
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்���ு கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் ந��்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ரவிசங்கர் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
மிகப் பெரும் ஆளுமைகளால் பெருமை பெற்ற பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்த மரபினையும், பேரவையின் மாண்புகளையும் காத்திட ��ேண்டும்.
ஆளும்கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு!
அதை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்.
#NEET – Never Been Neat:
இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க.
ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தா���்!
ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும்.
மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu
Deeply saddened by the passing of Thiru. Prateek Yadav, brother of @SamajwadiParty President Thiru. @YadavAkhilesh.
In moments of such profound grief and pain, my thoughts are with beloved brother Thiru. Akhilesh Yadav and the entire bereaved family. May they find the strength to bear this irreparable loss.
We will always be with you during such difficult times.
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட�� கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் ���ிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.��ு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இரு��்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வரு���ோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்
2026-ஆம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்:
மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிடுக!
12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்���டையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்றுக!
கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழ்ச் சுருக்கம் பின்வருமாறு:
நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளி��்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.
இப்படி நடப்பது முதல்முறையல்ல,
2015-ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது.
2016-ஆம் ஆண்டு நீட் தேர்வின் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. ஆனால் அப்போது மறுதேர்வு நடத்தப்படவில்லை.
2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள் எழுந்தன. ஆடைக��� கட்டுப்பாடுகள் மூலம் பாகுபாடு காட்டப்பட்டது, மொழிபெயர்ப்புகள் தவறாக இருந்தன. இதனால் தேர்வில் சமவாய்ப்பு கேள்வி��்குறியானது.
2020, 2021-ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு பதிலாகப் போலித் தேர்வர்கள் தேர்வெழுதினர். இதன் பின்னணியில் பெரும் படையே இருந்து செயல்பட்டது.
2021-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு கவுன்சிலிங்கில் 6 மாதம் தாமதம் ஏற்பட்டு பலரது எதிர்காலம் பாதிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டிலும் திட்டமிட்ட ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமாகி, பலரும் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர்.
2024-ஆம் ஆண்டு நீட் தேர்வு ��ிகவும் சர்ச்சைக்குரிய தேர்வாக அமைந்தது. சந்தேகத்துக்குரிய வகையில் நம்ப முடியாத அளவுக்கு அதிக மதிப்பெண்களைச் சிலர் பெற்றது, தன்னிச்சையான கருணை மதிப்பெண்கள் அளித்தது, ஒரே மையத்தில் பல டாப்பர்கள், 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வினாத்தாளை முன்பே பெற்றது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் நேரடியாகப் பயனடைந்தனர் எனக் கண்டுபிடிக���கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்து, சிபிஐ விசாரணை நடத்தியது.
இவற்றுடன், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட ��ாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளும் இத்தேர்வை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியது. பல தேர்வு மையங்களில் சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இப்படியாக, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி, தமிழ்வழி பயின்ற, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு இ��ுந்து வருகிறது. தகுதி என்று சொல்லிவிட்டு, பணம் கொழிக்கும் வணிகமாக, பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட, பணக்காரர்களுக்கான தேர்வாகவே இது இருக்கிறது.
நீட் மூலமாக முளைத்துள்ள பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரளும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி என்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் தலைமுறையாகப் பயிலும் மாணவர்களுக்கு நீட் ஒரு பெரும் தடைக்கல்லாகி இருக்கிறது. அவர்கள் மாநிலப் பாடத்திட்டத் தேர்வில் நல்ல ��திப்பெண் பெற்றும் CBSE பாடத்திட்டத்துக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வில் கோச்சிங் இல்லாமல் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு முந்தைய, தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை மாடல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் மிக வலிமையான பொது சுகாதார அமைப்பைத் தமிழ்நாட்டில் கட்டமைத்தது இந்த மாடல்தான். நீட் இதனைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகின்றன.
இதனை நன்கு உணர்ந்ததால்தான், நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகள் மீட்கப்பட வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில், நீட் விலக்குக்காக, 2021-ஆம் ஆண்டும், ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மறுமுறை 2022-ஆம் ஆண்டும் என இரு முறை சட்டம் இயற்றினோம். மாநிலச் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட அந்தச் சட்டம் மூன்று ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் அவர்கள���ன் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து, 2025-ஆம் ஆண்டு ஏப்ரலில், ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். அது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் அவர்களின் முடிவினை எதிர்த்து, எனது அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது.
நீட் மொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் எனும் எனது கோரிக்கையை மீண்டும் தங்களிடம் வலியுறுத்தும் அதேவேளையில், இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால் சில உடனடிச் சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கோருகிறேன்.
தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-இன்படி மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையானது நீட் எனும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், தற்போது நிலவும் அசாதாரணச் சூழலில், மீண்டும் நீட் தேர்வினை நடத்தினால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, அது மற்றுமொரு சுமையாகவே அமையும்.
அதனால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும்.
தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், இதற்காகத் தங்கள் அரசு,தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, ��ந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும்.
மாண்புமிகு பிரதமர் அவர்கள் எனது இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற - பிற்படுத்தப்பட்ட - ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டும்.
#DMK