பெரம்பலூர் மாவட்டத்தில், எடை குறைவாக உள்ள கர்ப்பிணிப் பெண்களைக் கண்டறிந்து, அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “அமுதசுரபி” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் கர்ப்பிணிப் பெண்.
மாற்றுத்திறனாளிகளின் உடல் மற்றும் மன மறுவாழ்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வரும் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, பெரம்பலூர் மாவட்ட அலுவலர்களுடன் நடைபெற்ற சிறப்பு நேர்காணல்.
அக்டோபர் 01-க்கு நீங்கள் தயாரா?
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள மாபெரும் தூய்மைப் பணி இயக்கத்தில், பொதுமக்களும் தன்னார்வலர்களும் ஒன்றிணைந்து பங்கேற்போம்!
நம்ம பெரம்பலூரை குப்பையில்லா, தூய்மையான மாவட்டமாக மாற்றும் இந்த முயற்சியில் நீங்களும் ஒரு பங்காகுங்கள்!
வாருங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஒகளூர் மற்றும் அத்தியூர் ஊராட்சிகளில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் தூர்வாரும் மற்றும் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை 23.09.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பாடாலூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் கார்மெண்ட்ஸ் ஆயத்த ஆடை தயாரிப்பு அலகினைப் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் (22.09.2026) அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலைஉணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்கள். பெரம்பலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 22.9.2026 அன்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார்கள
முத்து நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, துறைமங்கலம் டி.இ.எல்.சி.அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (21.09.2026) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்(21.09.2026) அன்றுநடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை– ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் (21.09.2026) அன்று பார்வையிட்டார்கள்