தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தனியாருக்கு விடும் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள
மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் முன்பு
24.12.2020 அன்று காலை 10மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மருத நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பல்வேறு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மருதநாட்டு வேங்கைகள் சார்பில் இன்று மதுரையில் நடைபெற்ற அதன் மாநில மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.
சமூகநீதியை ஒழித்துக்கட்டும் ராம்கோபால் ராவ் தலைமையிலான வல்லுனர் குழுவின் மூலம் பரிந்துரையை தூக்கி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு, ஐஐடி கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, விவசாயிகள் தொடர் போராட்டம், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
விவசாயிகளின் போராட்டம் என்பது நாட்டின் உணவு பாதுகாப்புக்கானது. அரசியலமைப்பு சட்டப்படியான வாழ்வுரிமைக்கானது. இதனையெல்லாம் அறியாமல், அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு துளி சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதில் மோடி அரசு கவனமாக இருந்து வருகிறது.
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் விரோத சட்டங்களை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் மாண்புமிகு அண்ணன் திரு.ஸ்டாலின். அவர்களின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.
வேளாண் சட்டத்தால் அதானியும் அம்பானியும் ஒரே இடத்தில் லட்சக் கணக்கான டன் விளைபொருட்களை சேமித்து வைத்து செயற்கை விலையேற்றத்தை உருவாக்கிவிடுவர்.
@PTTVOnlineNews
@PTTVEnglish
மக்களின் நலன் கருதி, பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை குறைக்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாருக்கு வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கே கொண்டு வர வேண்டும்
திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினரும்,
முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ஜெகத்ரட்சகன். அவர்களின் மனைவி திருமதி.அனுசுயா.அம்மாள் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதிமருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பிற்கான இடங்களை உயர்த்த வேண்டும். இதன் மூலம், மருத்துவப்படிப்பிற்கு தமிழகத்தைசேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். அதுமட்டுமின்றி, ஏழை, எளிய மாணவர்களின்மருத்துவ கனவுகள் நனவாகும்.
1951 ஆம் ஆண்டு வரை பழங்குடியின பட்டியலில் இருந்த படுகர் இன மக்கள், காலப்போக்கில் பழங்குடியின பட்டியலில் இருந்து எந்த காரணமும் கூறப்படாமல் நீக்கப்பட்டார்கள். இதனை எதிர்த்து படுகர் இன மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
வன்மையாக கண்டிக்கிறோம்.
மதுராந்தகம் அருகே செய்யூரில் மர்ம நபர்களால் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.
ஊழலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்வதோடு, அவர்களின் சொத்துக்களை முடக்கி, அவற்றை அரசுடைமையாக்க வேண்டும். அரசு வேலை என்பது நாட்டு மக்களுக்கான பொதுச்சேவை தான் என்பதை அமைச்சர்களும், அரசு ஊழியர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின்.அவர்கள் தலைமையில் வரும் 18ஆம் தேதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கிறது!
இன்று (11-12-2020) இரவு 8 மணியளவில் திராவிடச் சிறகுகள் சார்பில்ஒருங்கிணைக்கப்படும் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று "சுரண்டப்படும் தமிழர் வாழ்வு" என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.